Mushroom Benefits in Tamil-சைவ இறைச்சி, காளான் சாப்பிடுவோமா?

மனிதனுக்கு இயற்கை அளித்த ஆரோக்யமான உணவு வகைகளில் காளானும் ஒன்று. இதை உட்கொள்வதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது.;

Update: 2023-12-20 13:20 GMT

mushroom benefits in tamil-காளான் (கோப்பு படம்)

Mushroom Benefits in Tamil

அசைவ உணவு உண்பவர்கள் எப்படி வாரத்திற்கு ஒருமுறை இறைச்சியை வாங்கி சாப்பிடுவார்களோ, அதேபோல் சைவ உணவு உண்பவர்களுக்கு காளான் ஒரு சிறந்த உணவு. அதை சைவ இறைச்சி என்று கூட கூறலாம். அதனால் சைவப்பிரியர்கள் ஆரோக்யமான காளானை வாரம் ஒருமுறை சாப்பிடலாமே.

வாரம் ஒருமுறை காளானை பிரியாணி செய்தும், காளான் 65 செய்தும், மஞ்சூரியன் செய்தும் சுவையாக சாப்பிடலாம். சைவ பிரியர்களுக்கு மட்டுமல்ல, அசைவ பிரியர்களுக்கும் காளான் சூப்பர் ஃபுட்ங்க.

Mushroom Benefits in Tamil


காளான் ஊட்டச்சத்து உண்மைகள்

ஒரு கப் ஊட்டச்சத்து அளவு

கலோரிகள் 15

கொழுப்பு 0.2 கிராம்

சோடியம் 3.5 மிகி

கார்போஹைட்ரேட் 2.3 கிராம்

ஃபைபர் 0.7 கிராம்

சர்க்கரை 1.4 கிராம்

புரதம் 2.2 கிராம்

Mushroom Benefits in Tamil

நோய் எதிர்ப்பு சக்தி

காளானில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் வைட்டமின்-பி1, பி2, பி9, பி12, வைட்டமின்-சி, வைட்டமின்-டி2 உள்ளது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இவை புற்றுநோயைத் தடுக்கவும், உடல் உறுப்புகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.

காளானில் கொழுப்பு இல்லை, சோடியம் குறைவு, கலோரிகள் குறைவு, கொலஸ்ட்ரால் இல்லை மற்றும் நார்ச்சத்து அதிகம். மழைக்காலத்தில் காளானை உணவில் சேர்த்துக் கொண்டால் நோய், தொற்று நோய்கள் வருவது குறையும்.

காளான் ஆரோக்ய நன்மைகள்

Mushroom Benefits in Tamil

காளான் பிரியாணி 

இரத்த அழுத்தம் குறையும்

காளானை உணவில் சேர்த்துக் கொண்டால் இதய ஆரோக்யம் மேம்படும். காளானில் சோடியம் குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளது. காளான் சாப்பிட்டால், உடலில் சோடியம் அளவு கட்டுக்குள் இருக்கும். உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் காளான்களை சாப்பிட வேண்டும். காளானில் நார்ச்சத்து அதிகம்.

நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. காளானில் உள்ள ஒலிகோசாக்கரைடுகள் குடலில் ப்ரீபயாடிக்குகளாக செயல்படுகின்றன. இவை குடல் பாக்டீரியாவை ஊக்குவிக்கின்றன. காளான் சாப்பிட்டால், குடல் அமைப்பு ஆரோக்கியமாக இருக்கும்.

Mushroom Benefits in Tamil

புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்

காளானில் உள்ள லினோலிக் அமிலம் புற்றுநோய்க்கு எதிரான கலவையாக செயல்படுகிறது. இது மார்பக புற்றுநோயில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

மனச்சோர்வு குறையும்

காளான் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதோடு மன ஆரோக்கியத்திற்கும் உதவும். காளானில் எர்கோதியோனைன் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இது நம் உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களைத் தடுக்கிறது. காளானில் அதிக பொட்டாசியம் உள்ளது, இது பதட்டத்தை குறைக்கிறது. இதனால் மன அழுத்தம், மனச் சோர்வு குறையும்.

Mushroom Benefits in Tamil

காளான் 65 

அழகு மேம்படும்

காளான் அழகு சாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. காளான்களை நம் உணவில் சேர்த்துக் கொண்டால், அவை சருமச் சுருக்கங்களைத் தடுக்கவும், செல்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கவும் உதவும். காளானில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறத்தை அதிகரிக்கும்.

அதனால்தான் காளான் எண்ணெய்கள் வயதான எதிர்ப்பு கிரீம்கள், லோஷன்கள் மற்றும் சீரம்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. உணவில் காளானை சேர்த்துக் கொண்டால் சரும வறட்சி பிரச்சனையை குறைக்கலாம்.

Mushroom Benefits in Tamil

இவங்களுக்கு மட்டும் காளான் வேண்டாம்

பல நன்மைகளை அள்ளித்தரும் காளானை பாலூட்டும் தாய்மார்கள் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இது தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டது.

காளானில் இதுபோன்ற பல நன்மைகள் இருந்தாலும், ஏதேனும் ஒவ்வாமை போன்ற பிரச்சனையோ அல்லது வேறு ஏதேனும் விளைவுகளையோ சந்திக்கநேர்ந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

Tags:    

Similar News