மஞ்சள் காமாலை வந்தால் அறிகுறிகள் என்னென்ன..? தெரிஞ்சுக்கங்க..!

Manjal Kamalai Symptoms in Tamil -மஞ்சள் காமாலை என்றதும் கண்ணில் மஞ்சளாக இருக்கும் என்று மட்டுமே எண்ணிவிட வேண்டாம். வேறு அறிகுறிகளும் உள்ளன.

Update: 2022-08-26 05:49 GMT

manjal kamalai symptoms in tamil-மஞ்சள் காமாலை.(கோப்பு படம்)

மஞ்சள் காமாலை பொதுவிளக்கம் 

Manjal Kamalai Symptoms in Tamil --கல்லீரல், மனித உடலின் மிக முக்கிய உள் உறுப்பாகும். உடலின் வளர்சிதை மாற்றங்களின் செயல்பாடுகளால் வெளியேற்றப்படும் நச்சுத்தன்மையை அகற்றுவது முதல் செரிமானத்துக்குத் தேவையான உயிர்வேதிப் பொருட்களை உற்பத்தி செய்தல் வரையிலான முக்கிய பணிகளை கல்லீரல் செய்கிறது. ரத்தத்தில் உள்ள புரதம், கொழுப்பு, சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்வதும் இவர்தான், அதுதாங்க நம்ம லிவர்.

உடலில் மற்ற உறுப்புகளைவிட இது தனித்தன்மை வாய்ந்தது. காரணம், இது இழந்த திசுக்களை தானே மீட்டுருவாக்கம் செய்துக்கொள்ளக்கூடிய ஆற்றலைப் பெற்றிருக்கிறது.கல்லீரல் பெரிய அளவு பாதிப்புக்குள்ளானாலும்கூட தன் வேலைகளைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கும். பாதிக்கும் மேல் பாதிக்கப்பட்டப் பின்னர்தான் இதன் பாதிப்பே தெரியவரும். அதுவும், ஒரு சில அறிகுறிகளின் மூலமாகவே தெரியவரும். அதில் ஒரு முக்கியமான அறிகுறிதான் மஞ்சள் காமாலை.

கல்லீரல் ஒழுங்காகச் செயல்படாததால் ஏற்படக்கூடியதுதான் மஞ்சள் காமாலை. அதாவது கல்லீரலிலிருந்து பித்தம் வெளியேறாமல் தேங்கிவிடுவதால் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.

மஞ்சள் காமாலை அறிகுறி.

உடலில் கல்லீரல் செயலிழப்பின் அறிகுறிகள்:

உணவைச் சரியாகச் செரிக்க வைப்பதில் இருந்து, உடலைச் சீராக வைத்திருப்பது வரை கல்லீரல் பல வேலைகளைச்  செய்கிறது. கல்லீரலில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், அதன் விளைவு உடலில் தெரியும். இருப்பினும், கல்லீரலில் பிரச்னை ஏற்படுவதற்கான அறிகுறிகளை முன்னரே கண்டறியலாம். ஆனால் சிலர் இந்த அறிகுறிகளை புரிந்து கொள்ளாமல் புறக்கணிக்கிறார்கள்.

ஆனால், அப்படி செய்வது தவறு, இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்படி செய்தால், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை போன்ற பெரிய பிரச்னைகளைத் தவிர்க்கலாம். கல்லீரல் முறையாக வேலை செய்யவில்லை என்றால் காட்டும் அறிகுறிகளை பார்ப்போம்.

மஞ்சள் காமாலை மிகப்பெரிய அறிகுறி

மஞ்சள் காமாலை கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதற்கான தெளிவான முதல் அறிகுறியாகும். மஞ்சள் காமாலையில் தோலின் நிறம் மற்றும் கண்களின் வெள்ளை பகுதி மஞ்சள் நிறமாக மாறும். சிறுநீரும் அடர் மஞ்சள் நிறமாக போகும். கல்லீரல் இரத்த சிவப்பணுக்களை வரைமுறைப்படுத்த முடியாதபோது மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.

தோல் அரிப்பு

கல்லீரல் பாதிப்பால் ஏற்படும் பிரச்சனை காரணமாக, பித்தம் வெளியேற்றப்படமுடியாது. அதனால் சருமத்திற்கு அடியில் பித்த உப்பு அதிகம் சேர்கிறது. இதனால், தோலில் ஒரு அடுக்கு குவிந்து அரிப்பு ஏற்படுகிறது. அதாவது, தோல் தொடர்பான பிரச்னைகளும் கல்லீரலுடன் தொடர்புடையவை ஆகும்.

பசியின்மை

பசி குறைவாக இருந்தால், கொஞ்சம் உஷாராக இருக்கவேண்டும். ஏனெனில் கல்லீரல் ஒரு வகையான பித்த சாற்றை உருவாக்குகிறது. இது உணவை ஜீரணிக்க உதவுகிறது. கல்லீரல் சரியாக வேலை செய்யாதபோது, ​​​​அதன் முழு செயல்பாடும் மோசமடைகிறது. செரிமான பிரச்னையும் ஏற்படலாம். இதன் காரணமாக பசியின்மை ஏற்படுகின்றது.

இரத்தப்போக்கு

இரத்தப்போக்கு இருந்தால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏதேனும் விதத்தில் காயமடைந்து ரத்தம் உறையாமல் நீண்டநேரம் இருப்பது மற்றும் அந்த காயம் குணமடைய அதிக காலம் எடுத்தால், மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும். இதுவும் கல்லீரல் பிரச்னையாக இருக்கலாம்.

தெளிவற்ற நிலை

manjal kamalai symptoms in tamil-தெளிவற்ற நிலையில் இருப்பது. காரணம் கல்லீரலால் இரத்தத்தில் உள்ள நச்சுகளை வடிகட்ட முடியாமல் கல்லீரல் சிரமத்துக்கு உள்ளாகும். அதனால், உடலின் மற்ற செயல்பாடுகளும் தடைபடத்தொடங்கும்.அதனால் உடல் அசவுகர்யத்தை உணர்வதால் தெளிவற்ற நிலை ஏற்படும். ஆகையால் இதுவும் ஒரு முக்கிய அறிகுறியாக கருதப்படுகிறது.

இந்த அறிகுறிகள் இருக்கும் எனில் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News