Manjal kamalai-மஞ்சள் காமாலை வந்தால் என்ன செய்யணும்? என்ன செய்யக்கூடாது?
மஞ்சள் காமாலை என்பது கல்லீரலில் உருவாகும் ஒருவகை சுரப்பி முழுமையாக பித்தப்பை வழியாக வெளியேற்றப்படாவிட்டால் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.
Manjal kamalai
மஞ்சள் காமாலை என்றால் என்ன?
மஞ்சள் காமாலை என்பது அதிக அளவு பிலிரூபின் எனப்படும் கல்லீரலில் உருவாகும் மஞ்சள் நிறத்தில் உள்ள ஒரு வகை திரவம். இந்த மஞ்சள் நிற திரவத்தால் தோல் மற்றும் கண்களின் வெள்ளைப் பகுதி மற்றும் சளி சவ்வுகள் மஞ்சள் நிற மாற்றம் பெறும்.
இரத்தத்தில் உள்ள பிலிரூபின் அளவு அதிகமாகும்போது அது மஞ்சள் நிறம் பெறுகிறது. பிலிரூபின் அளவு சற்று உயர்ந்தால், தோல், கண்ணின் வெள்ளை பகுதி மஞ்சள் நிறமாக மாறுகிறது. பிலிரூபின் அளவு சற்று அதிகமாக இருந்தால் அவை பழுப்பு நிறமாக மாறுகிறது. அதாவது அடர் மஞ்சள் நிறமாக மாறுகிறது.
Manjal kamalai
மஞ்சள் காமாலை என்பது ஒரு நோய் அல்ல. இது உண்மையில், இரத்தம் அல்லது கல்லீரல் கோளாறுகளுக்கான அறிகுறியாகும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மஞ்சள் காமாலை எதனால் ஏற்படுகிறது?
கல்லீரலின் முதன்மையான செயல்பாடுகளில் ஒன்று பிலிரூபினை அகற்றுவதாகும். பிலிரூபின் என்பது கல்லீரலில் உருவாகி பித்தப்பையில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இது இரத்த சிவப்பணுக்களின் தினசரி சுழற்சியில் முறியும் ஒரு துணைப்பொருளாகும்.
கல்லீரலானது பிலிரூபினை இரத்த ஓட்டத்தில் இருந்து நீக்கி, வளர்சிதைமாற்றம் செய்து பித்தமாக வெளியேற்றத் தவறும்போது மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.
மஞ்சள் காமாலை ஏற்படும் போது பின்வரும் அறிகுறிகள் இருக்கலாம்:
கல்லீரலில் பிலிரூபினை அகற்றுவதற்கும், அதை நீக்குவதற்கும் இயலாமல் செயலிழக்கச் செய்கிறது.
பித்த நாளங்களின் அடைப்பு. புற்றுநோய், பித்தப்பை கற்கள் அல்லது பித்த நாளத்தின் வீக்கம் ஆகியவற்றால் பித்த நாளம் தடுக்கப்படலாம். அதனால் பிலிரூபின் வெளியேறாமல் தடுக்கப்படலாம்.
Manjal kamalai
இரத்தத்தில் இருந்து கல்லீரலுக்கு அதிக பிலிரூபின் உற்பத்தி செய்யப்படுகிறது (உதாரணமாக, மலேரியாவின் போது இரத்த சிவப்பணுக்கள் விரைவாக அழிக்கப்படும் போது, மிக அதிக அளவு பிலிரூபின் உற்பத்தி செய்யப்படுகிறது).
என்ன பாதிப்புகள் மஞ்சள் காமாலையை உண்டாக்குகின்றன?
பல பொதுவான நிலைமைகள் பிலிரூபின் உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கும். மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் சில நோய்களில் ஹெபடைடிஸ்-பி, ஹெபடைடிஸ்-சி, மதுவால் வந்த கல்லீரல் நோய், கல்லீரல் புற்றுநோய் மற்றும் கணைய புற்றுநோய் ஆகியவை அடங்கும்.
Manjal kamalai
சில மருந்துகளும் மஞ்சள் காமாலையை உண்டாக்கக்கூடும். கல்லீரலில் வளர்சிதைமாற்றம் செய்யப்படும் மருந்துகளின் விளைவாகவும் இது நிகழ்கிறது.
மஞ்சள் காமாலையின் அறிகுறிகள்:
- தோல், நாக்கு மற்றும் கண்களின் வெள்ளை நிறம் மஞ்சள் நிறமாக மாறும்.
- அடர் மஞ்சள் நிற சிறுநீர்
- களிமண் நிறமுள்ள மற்றும் துர்நாற்றம் வீசும் மலம்
- கல்லீரலில் மந்தமான வலி
- பசியின்மை
- மெதுவான நாடித் துடிப்பு
- குமட்டல், கடுமையான மலச்சிக்கல், தீவிர பலவீனம்
- தோல் அரிப்பு, வாயில் கசப்பான சுவை
- காய்ச்சல், தலைவலி
- தேவையற்ற சோர்வு
Manjal kamalai
மஞ்சள் காமாலை தடுப்பு மற்றும் சிகிச்சை
மஞ்சள் காமாலையைத் தடுக்க வழிகள் உள்ளன:
ஹெபடைடிஸ் பி'க்கு எதிராக நீங்களே தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
உணவு கையாள்பவர்கள் கையுறைகளை அணிந்துகொள்வது நல்லது. சுகாதாரமான இடங்களில் சாப்பிடுங்கள்.
மிதமான அளவில் மது அருந்தவும்.
ஹெபடைடிஸ் பி' உடலுறவு மூலம் பரவக்கூடும் என்பதால் பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்ளுங்கள்.
ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, மஞ்சள் காமாலை ஒரு நோயின் அறிகுறியாகும். எனவே, மஞ்சள் காமாலை இருக்கிறது என சந்தேகப்பட்டால், மருத்துவரை அணுகவும். மஞ்சள் காமாலைக்கான சிகிச்சைக்கு குறிப்பிட்ட காரணத்தைக் கண்டறிய வேண்டும்.
பொதுவாக, பழச்சாறுகள், இளநீர் மற்றும் மோர் போன்ற திரவங்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய லேசான உணவு எடுப்பதற்கு அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் கல்லீரலுக்கு அதிக வேலை கொடுக்கும் உணவுகள் உண்பதை தவிர்ப்பது நல்லது.
Manjal kamalai
மஞ்சள் காமாலை எச்சரிக்கை
மஞ்சள் காமாலை இருப்பது கண்டறியப்பட்டால், அப்போது முதல் குணமடைந்த சில மாதங்களுக்கு மது, வறுத்த அல்லது கனமான உணவுகளை உட்கொள்வதை தவிர்க்கவேண்டும். இல்லையெனில் மீண்டும் மஞ்சள்காமாலை ஏற்படும் அபாயம் உள்ளது.