தோல் அழற்சி,அரிப்புக்கு திரவ பாரஃபின்(liquid paraffin solution) கரைசல்..!

Liquid Paraffin Uses in Tamil-திரவ பாரஃபின்(liquid parafin solution) கரைசல் எந்தமாதிரியான தோல் பிரச்னைகளுக்கு பயன்படுகிறது. வாங்க பார்ப்போம்.

Update: 2022-08-21 10:41 GMT

Liquid Paraffin Uses in Tamil

திரவ பாராஃபின் பொதுவிளக்கம் 


Liquid Paraffin Uses in Tamil-திரவ பாரஃபின் என்பது வறண்ட சருமத்தின் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஒரு மருந்து. இது வறண்ட தோல் நிலைகளான அரிக்கும் தோலழற்சி, இக்தியோசிஸ் மற்றும் வயதானவர்களுக்கு ஏற்படும் அரிப்பு போன்றவற்றை நீக்குகிறது. சருமத்தின் வெளிப்புற அடுக்கில் இருந்து நீர் வெளியேறுவதை தடுப்பதன் மூலம் இது செயல்படுகிறது. இதனால் வறட்சி நீங்கி, சருமம் மென்மையாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும்.

திரவ பாரஃபின் வெளிப்புற பயன்பாட்டிற்கான மருந்து. மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட அளவு மற்றும் கால அளவுகளில் இதைப் பயன்படுத்த வேண்டும். பயன்பாட்டிற்கு முன் பாதிக்கப்பட்ட பகுதி சுத்தமாகவும் ஈரமில்லாமலும் இருக்க வேண்டும். இந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பும் பின்பும் உங்கள் கைகளை நன்கு கழுவ வேண்டும்.

இந்த மருந்தை தவறாமல் பயன்படுத்துவதன் மூலம் அதிக பலன்களைப் பெற முடியும். உங்களுக்குத் தேவையான அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிகமாக பயன்படுத்தினால் பாதிப்பை சரிசெய்யாமல் பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். நான்கு வாரங்களில் குணமாகாமல் நீடித்தால் அல்லது மோசமாகிவிட்டால், உடனே மருத்துவரிடம் தெரிவிக்கவும். பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தமாக, உலர்வாக வைத்திருப்பதன் மூலம் இந்த மருந்து சிறப்பாக செயல்பட துணை புரியும்.

திரவ பாரஃபின் கரைசலின் பக்க விளைவுகள்

பெரும்பாலான பக்க விளைவுகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவையில்லை. உடலின் தன்மைக்கு ஏற்ப மருந்து தானாகவே மறைந்துவிடும். பக்கவிளைவுகள் தொடர்ந்தால் மருத்துவரை அணுகவும்.

திரவ பாரஃபின் கரைசலின் பயன்கள்

வறண்ட தோல், அரிக்கும் தோலழற்சி, இக்தியோசிஸ் மற்றும் வயதானவர்களுக்கு ஏற்படும் அரிப்பு

திரவ பாரஃபின் கரைசலின் பொதுவான பக்க விளைவுகள்

பொதுவான பக்க விளைவுகள் எதுவும் காணப்படவில்லை

எப்படி உபயோகிப்பது

மருத்துவர் பரிந்துரை செய்த மருந்தளவு மற்றும் கால இடைவெளியில் இந்த மருந்தினைப் பயன்படுத்தவும். மருத்துவர் வழிகாட்டுதல்படி பயன்படுத்துவது நல்லது.

எப்படி செயல்படுகிறது

திரவ பாரஃபின் என்பது மலமிளக்கி என்று அழைக்கப்படுகிற மருந்துகளின் வகையை சார்ந்தது. அது கடினமான மலத்தை மென்மையாக்கி மலச்சிக்கலை குணமாக்குகிறது. அதேபோல அது ஒரு இளக்கியாக செயல்பட்டு தோலை மென்மையாக்குகிற மருந்தாகவும் பயன்படுகிறது. வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. அதன் மூலம் தோல் வறட்சி மற்றும் அரிப்பினை குணமாக்குகிறது.

எச்சரிக்கை 

மது, கர்ப்பமானவர்கள், தாய்ப்பால் புகட்டுபவர்கள், சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு உடையோருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பரிந்துரைகள் இல்லை. மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்தலாம். 


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News