Lemon juice benefits in tamil-என்னது....? எலுமிச்சை சாற்றில் இவ்ளோ நன்மைகளா..? தெரிஞ்சுக்கங்க..!

எலுமிச்சையின் சாறை அருந்துவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம் உள்ளன. அவற்றில் முக்கியமானவைகளைப் பார்க்கலாம் வாங்க.

Update: 2023-08-16 11:19 GMT

lemon juice benefits in tamil-லெமன் ஜூஸ் நன்மைகள் (கோப்பு படம்)

Lemon juice benefits in tamil

எலுமிச்சை பழச்சாறானது நமக்கு சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்ளும் தாய் போன்றது. அட ஆமாங்க. நாம் சளி பிடித்தால் எடுத்துக் கொள்ளும் மருந்தில் கூட எலுமிச்சையின் ஒரு வித வேதிப்பொருள் இருக்கிறது என்பது நம்மில் எத்தனை பெருக்குத் தெரியும்?

நாம் எலுமிச்சை சாறு என்றால் உப்பு சர்க்கரை சேர்த்து நாக்குக்கு சுவையாக குடிப்போம். ஆனால், எலுமிச்சைச்சாற்றை நாம் சர்க்கரை இல்லாமல் குடிக்க வேண்டும். குறிப்பாக வெள்ளைச் சர்க்கரையை இதனுடன் சேர்த்து குடிப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அதற்கு மாறாக சர்க்கரை (Stevia) இலையில் இருக்கும் இனிப்பை பயன்படுத்தலாம்.  


அலர்ஜிக்கு 

சிலருக்கு தொடர் அலர்ஜி தொந்தரவு இருக்கும். அவ்வாறு அலர்ஜி இருப்பவர்களுக்கு எலுமிச்சை சாறானது மிகவும் பயன் தரும். இதில் இருக்கும் வைட்டமின் சி, நமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். கிட்னியில் உருவாகும் பெரும்பான்மையான கற்கள் ஆக்சலேட் கற்கள். இந்த எலுமிச்சைச் சாறை நாம் குடித்து வந்தால் அதில் உள்ள சிட்ரிக் ஆசிட் இந்த கற்களை கரைத்து குறைக்கும்.

Lemon juice benefits in tamil

இப்போவெல்லாம் எங்கு பார்த்தாலும் கிருமிகளின் பெருக்கம் அதிகம். கொரோனா காலத்தில் கூட அதுக்கு பயந்து தானே முக கவசம் அணிந்தோம். பாக்டீரியாக்கள் போன்ற நுண்ணுயிர் கிருமிகளால் மனிதர்கள் பல்வேறு தொற்றுகளுக்கு உள்ளாகிறார்கள். அதில் இருந்து தற்காத்துக் கொள்ள இந்த எலுமிச்சை சாரானது மிகவும் உதவிகரமாக இருக்கும்.


யூரிக் அமிலம் சேர்வதை தடுக்கும் 

உடலில் யூரிக் அமிலம் அதிகமானால் கால்கள் அதைக் காட்டிக்கொடுக்கும். கணுக்கால் வீக்கம், கால் வலி, பெரு விரல்கள் வலி உள்ளிட்டவை ஏற்படும். காரணம் அந்த யூரிக் ஆசிட் ஆனது கட்டியாக தேங்கும். எலுமிச்சை சாறு குடித்தால் யூரிக் அமிலத்தை குறைத்து வழியை போக்கும். யூரிக் அமிலம் சேர்வதையும் தடுக்கும்


சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும் 

தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக் குறைக்கிறது. வாய்த் துர்நாற்றத்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது. நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது. எலுமிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து உள்ளது. எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.

உணவுகளில் உள்ள இரும்புச்சத்தை உறிவதற்கு சிட்ரிக் ஆசிட் மிகவும் உதவிகரமாக இருக்கும். அந்த வகையில் எலுமிச்சை சாறு உணவுகளில் உள்ள இரும்புச் சத்தை நன்றாக உடல் உறிஞ்சிக் கொள்வதற்கு உதவிகரமாக இருக்கும்.

எலுமிச்சம் பழம் பித்தத்தைப் போக்கும், தலைவலி தீர்க்கும், மலச்சிக்கல் விலக்கும், தொண்டை வலியைப் போக்கும், வாந்தியை நிறுத்தும், காலராக் கிருமிகளை ஒழிக்கும், பல் நோய்களை குணப்படுத்தும்.

Lemon juice benefits in tamil

சரும  நோய்களைக் குணப்படுத்தும், டான்சிலைத் தடுக்கும், விஷத்தை முறிக்கும், வாய்ப்புண்ணை ஆற்றும், தேள் கடிக்கு உதவும், மஞ்சக்காமாலையை நீக்கும், வீக்கத்தை குறைக்கும், வாயுவை அகற்றும், பசியை உண்டாக்கும், விரல் சுற்றிக்கு உதவும், யானைக்கால் வியாதியை குணப்படுத்தும்.


கதிரியக்க அபாயத்தைக் குறைக்கும் 

எலுமிச்சை தோலில் உள்ள ப்யோபிளேன் என்ற சத்துக்கு நீரிலும், காற்றிலும் ஏற்படும் கதிரியிக்க அபாயத்தைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது. தினமும் எலுமிச்சை உண்பவர்கள் கதிரியக்கத்தைத் தாங்கி அதில் இருந்து தப்பிக்கொள்ளமுடியும். புற்று நோய்க்காரர்களுக்கு எக்ஸ்ரே சிகிச்சையால் ஏற்படும் கதிரியக்கத்தைத் தீங்கையும் எலுமிச்சை தடுக்கிறது.

விளையாட்டு, ஓட்டப் பந்தயம், கடுமையான வேலை இவற்றால் ஏற்படும் களைப்பை நீக்க ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து உடனே கடித்துச் சாற்றையோ அல்லது பிழிந்து சர்க்கரை கலந்து குடித்தால் உடனடி தெம்பு கிடைக்கும்.

Lemon juice benefits in tamil

உண்ணாவிரம் இருந்து முடிப்போர் மீண்டும் உண்ணும்போது எலுமிச்சை பழச்சாறு அருந்திவிட்டு உணவு சாப்பிடுவது சிறப்பாகும். ஏனெனில் எலுமிச்சை அஜீரணப் பிரச்னைகள் ஏற்படுவதைத் தடுக்கும். 

Tags:    

Similar News