சிறுநீரகம் பாதிப்படைந்தால் என்னென்ன அறிகுறைகளை காட்டும்..? தெரிஞ்சுக்கங்க..!
Kidney Problems Symptoms in Tamil-உடல் உறுப்புகளில் மிக முக்கியமான பணிகளைச் செய்யும் உறுப்புகளில் சிறுநீரகங்களும் ஒன்றாகும். அதை பாதுகாப்பது நமது கடமை.
Kidney Problems Symptoms in Tamil
சிறுநீரகங்கள் நம் உடலில் பல்வேறு செயல்பாடுகளைச் செய்வதற்கு அடிப்படையான உறுப்பு. உடல் ஆரோக்யம் பேணவேண்டும் என்று சொல்வதற்கு காரணமே உடல் உறுப்புகள் அத்தனையும் விலைமதிப்புமிக்கது. அதனால் அதை கவனித்து பாதுகாக்கவேண்டியது நமது கடமை. ஒருவேளை கவனமின்றி இருந்தால் சில மீளமுடியாத சிக்கல்களுக்கு வழிவகுக்கும். அவ்வாறு கவனிக்கப்படவேண்டிய உறுப்புகளுள் சிறுநீரகங்களும் மிக முக்கியமானவை.
சிறுநீரக பாதிப்பு :
உலகளவில் பலர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உண்மையாகவே துரதிர்ஷ்டவசமானது. இதில் பெரிய வேதனை எது தெரியுமா..? அவர்களில் பெரும்பாலானவர்கள் நோய் முற்றி ஆபத்தான நிலைக்குச் சென்ற பிறகே அதை தெரிந்து கொள்கின்றனர். அதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் ஏற்படும் விளைவுகளே இபப்டி நடப்பதற்கு காரணமாக இருக்கிறது.
நாள்பட்ட சிறுநீரக நோய் பொதுவாக உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு அல்லது சிறுநீரக நோய்களின் குடும்பப் பின்னணி கொண்டவர்களில் காணப்படுகிறது. சிறுநீரக கோளாறுகளால் ஆபத்தில் ஆழ்த்தும் பிற காரணிகள் வயது முதிர்வு, குறைவான எடையுடன் பிறப்பது, சில வீரியமிக்க மருந்துகளை நீண்ட காலம் உபயோகிப்பது, நாள்பட்ட சிறுநீர் பாதை தொற்று, சிறுநீரக கற்கள் மற்றும் உடல் பருமன் ஆகியவை அடங்கும்.
ஆனால், எந்த வகை சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை எப்படி கண்டுபிடிப்பது? சிறுநீரக நோயின் பொதுவான அறிகுறிகள் என்ன போன்ற விபரங்களை தெளிவாக இங்கு பார்ப்போம்.
தூக்க பிரச்னைகள் :
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல தூக்கம் வராது. இது அடிப்படையில் ஒரு பொதுவான பிரச்சனை ஆகும். சிறுநீரகங்கள் சரியாக சிறுநீரை வடிகட்டாதபோது, உடலில் இருந்து சிறுநீர் வெளியேறுவது குறையும். அதனால் நச்சுகள் இரத்தத்தில் இருந்து பிரிக்கப்படாமல் இரத்தத்திலேயே தேங்குகிறது. இதுவே தூக்கத்தை பாதிக்கிறது. மற்றவர்களுடன் ஒப்பிடும்போது நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தூக்கத்திற்கான மூச்சுத்திணறல் பொதுவாக ஏற்படும்.
சரும பிரச்னைகள்:
சிறுநீரகங்கள் உடல் செயல்பாடுகளில் பல்வேறு முக்கிய பங்கு வகிக்கின்றன. தோல் பிரச்னைகள் ஏற்பட்டால் அது சிறுநீரக நோயின் அறிகுறியாக இருக்கலாம். சரும வறட்சி மற்றும் தோலில் அரிப்பு ஏற்படும். இரத்தத்தில் உள்ள தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை சரியான அளவில் சிறுநீரகங்கள் பெற முடியாதபோது இது நிகழ்கிறது. இது சரும வறட்சி மற்றும் தோல் அரிப்புக்கு வழிவகுக்கிறது.
கண்கள் வீக்கம் :
சிறுநீரக நோய்கள் பெரியோர்பிடல் எடிமாவை ஏற்படுத்தும். இது கண்களைச் சுற்றி வீக்கத்தை ஏற்படுத்துகிறது. கண்களைச் சுற்றியுள்ள இந்த வீக்கம் சிறுநீரகம் சரியான அளவில் புரதத்தை உடலில் வைத்திருப்பதற்கு பதிலாக சிறுநீர் வழியே அதிகளவு புரதத்தை வெளியேற்றுகிறது. இதன் காரணமாக கண்கள் வீங்குகின்றன. இந்த நிலை ஒரு கண் அல்லது இரண்டு கண்களிலும் உருவாகலாம்.
தசை பிடிப்பு:
சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு தசைப்பிடிப்பு ஏற்படுவது பொதுவானது. உடலில் உள்ள திரவங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளின் ஏற்றத்தாழ்வு காரணமாக அடிக்கடி தசைப் பிடிப்புகள் ஏற்படுகின்றன. பிடிப்புகள் நரம்பு சேதம் மற்றும் இரத்த ஓட்ட பிரச்னைகளாலும் ஏற்படுகின்றன. இதற்கு சிறுநீரக செயல்பாடு பலவீனமாக இருப்பதால் ஏற்படுகின்றன. உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அளவுகள் குறைவதால் தசைப்பிடிப்பை ஏற்படுத்துகின்றன.
வீக்கம்
கால்கள் மற்றும் கணுக்கால்களில் வீக்கம் ஏற்பட்டிருப்பதைப் பார்த்தால் அது சிறுநீரக நோயின் அறிகுறியாக இருக்கலாம். வீக்கம் குறைக்க உதவும் சூப்கள் மற்றும் தயிர் போன்ற உணவுகளில் தினசரி உப்பு மற்றும் திரவம் உட்கொள்ளலைக் குறைக்க அறிவுறுத்தப்படுகிறது. சிறுநீரகங்கள் கூடுதல் திரவத்தை அகற்ற முடியாமல் போகும்போது, அது சில நேரங்களில் கால்கள், கணுக்கால், பாதங்கள் மற்றும் கைகளில் வீக்கம் ஏற்பட வழிவகுக்கிறது.
சிறுநீரில் இரத்தம் வருதல்
சிறுநீரகங்கள் சிறுநீரை உருவாக்குகின்றன. எனவே,சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாதபோது, சிறுநீர் வெளியேறுவதால் மாற்றம் ஏற்படலாம். அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வு அல்லது தூண்டுதல் சிறுநீரக நோய்களுக்கான அறிகுறியாக இருக்கலாம். சிறுநீரில் ரத்தம் வருதல் சிறுநீரக பிரச்னை அறிகுறியாக இருக்கலாம். இரவில் அதிகமாக சிறுநீர் கழித்தால், அது சிறுநீரக நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். சிறுநீரக வடிகட்டிகள் சேதமடைவதால் இவ்வாறான செயல்கள் நடக்கின்றன.
பசியின்மை
நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு சிறுநீர் வடிகட்டுதலின் விகிதம் குறைவதால் , உணவு உட்கொள்ளலில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்திடுகிறது. அதனால் ஏற்படுகிறது. அதுவே எடை இழப்புக்கு காரணமாகிறது. இதுவும் சிறுநீரக நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
செய்யக் கூடாதவைகள்
1. ஜங்க் உணவுகள், காரமான மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது.
2. சிறுநீரகங்களுக்கு அழுத்தம் கொடுக்கலாம் என்பதால் அதிக தண்ணீர் குடிப்பதை குறைத்துக்கொள்ளலாம்.
3. ஆல்கஹால் மற்றும் புகைபிடிப்பதை கண்டிப்பாக நிறுத்தவேண்டும். புகைபிடித்தல் இரத்த நாளங்களை அழிக்கும். இது சிறுநீரகங்களில் இரத்த ஓட்டத்தை குறைக்கும்.
4. சிறுநீரகத்தை நேரடியாக பாதிக்கும் என்பதால் மருத்துவரிடம் ஆலோசிக்காமல் சப்ளிமெண்ட்ஸ் (ஆரோக்ய இணை உணவுகள்) எடுக்க வேண்டாம்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2