வெந்தயக் கீரை வாங்கலியோ...வெந்தயக் கீரை..! கூவிக்கூறும் நன்மைகள்..!

Kasoori Methi in Tamil -சாதாரணமாகவே நமக்கு வெந்தயம் சூட்டைக் குறைக்கும் என்பது தெரியும். அதேபோல வெந்தயக்கீரையும் பல ஆரோக்ய நன்மைகளைக் கொண்டுள்ளது.;

Update: 2023-02-20 11:02 GMT

kasuri methi in tamil-வெந்தயக் கீரை (கோப்பு படம்)

Kasoori Methi in Tamil -வெங்காயம், வெந்தயம் போன்றவை வெப்பத்தை தணிக்கும் பொருட்கள் ஆகும். கான் பெயரிலேயே நாம் அறிந்துகொள்ளமுடியும். வெங்- என்பது வெக்கை தணிக்கும் காயம் என்பதே வெங்காயம். வெந்- வெப்பத்தை தணிப்பதே வெந்தயம்.

இப்படி வெப்பம் தணிக்கும் வெந்தயக்கீரை நமக்கு என்னென்ன மருத்துவப் பலன்களை தருகிறது என்பதைப் பார்ப்போம் வாங்க.


நெஞ்சுவலி தீர

வெந்தயக் கீரையில் இரும்புச்சத்து ஏராளமாக உள்ளது. இரும்புச்சத்து உடலில் ஏற்படும் ரத்தசோகை வராமல் தடுப்பதோடு உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி, வதக்கி இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளர் அளவிற்கு நன்றாக காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் குடித்து வந்தால், நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

சூடு தணிய

சிலருக்கு இயற்கையாகவே சூட்டு உடல் கொண்டிருப்பார்கள். அதனால் அவர்களுக்கு அடிக்கடி சூடு ஏற்பட்டு பல அவஸ்தைகளை அனுபவிப்பார்கள். உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் வெந்தயக் கீரை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. வெந்தயக்கீரையின் குளிர்ச்சித் தன்மை உடல் சூட்டை குறைத்து உடலில் குளிர்ச்சியை பரவச செய்கிறது.

kasuri methi in tamil


கபம் நீங்க

நெஞ்சில் கபம், சளி உள்ளவர்கள் வெந்தயக் கீரை சாப்பிட்டால் விரைவாக குணமடையலாம். வெந்தயக் கீரையை வேகவைத்து, வெண்ணெயில் வதக்கிச் சாப்பிட்டால், பித்தத்தினால் வரும் மயக்கம் சரியாகும்.

வயிற்றுப்போக்கு தீர

பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பு, உப்பு சேர்த்து அரைத்து மோரில் கரைத்து சாப்பிட வயிற்றுப் போக்கு தீரும்.

கண் பார்வை

வெந்தயக் கீரையை தினசரி உணவில் சேர்ப்பது உடலில் ஏற்படும் புரதக்குறைபாட்டை போக்கி வலிமை சேர்க்கும். மேலும் கண்பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் அல்லது கண் சம்பந்தமான நோய்கள் இருப்பவர்கள் வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.

நரம்புத் தளர்ச்சிக்கு

வெந்தயக் கீரை நரம்பு தளர்ச்சியில் இருந்து மீண்டுவர உதவும். அதனால் நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு இது ஓர் சிறந்த மருந்தாகும். கீரையில் உள்ள புரதப் பொருட்களான சாப்போனின், மியூக்கலேஜ் போன்றவை பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.

வெந்தயக் கீரையில் வைட்டமின் ஏ சக்தியும், சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால் இதை சாப்பிடும் போது மாரடைப்பு, கண் பார்வை குறைபாடு, வாதம், சொறி சிரங்கு, இரத்த சோகை ஆகியவை குணமடையும். 

வயிறுப் பிரச்னை

வெந்தயக் கீரையின் தண்டை அரைத்து, மோருடன் குடித்துவர, வயிறு தொடர்பானப் பிரச்னைகள் தீரும். வெந்தயம், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளைப் போக்கும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News