Jaundice tamil-மஞ்சள் காமாலை ஏன் வருது? எப்படி வருது? தெரிஞ்சுக்கங்க..!

மஞ்சள் காமாலை என்பது ஒரு நோய் அல்ல. அது ஒரு நோய் பாதிப்பு. அதாவது வேறு நோயின் பாதிப்பை அடையாளம் காட்டும் முன்னறிவிப்பு.;

Update: 2023-09-16 11:56 GMT

Jaundice tamil-மஞ்சள் காமாலை (கோப்பு படம்)

Jaundice tamil

ம‌ஞ்ச‌ள் காமாலை எ‌ன்றா‌ல் பா‌ர்‌த்தது‌ம் அ‌றி‌ந்து கொ‌ள்ள‌க் கூடிய நோ‌ய் எ‌ன்பது பலரு‌க்கு‌ம் தெ‌ரியு‌ம். க‌ண்க‌ள், நக‌ம் போ‌ன்றவை ம‌ஞ்ச‌ள் ‌நிறமாவது‌ம், ‌சிறு‌நீ‌ர் ம‌ஞ்ச‌ள் ‌நிறமாக இரு‌ப்பது‌ம் இத‌ற்கான அ‌றிகு‌றிக‌ள்.

மு‌க்‌கியமாக‌க் கூற வே‌ண்டுமானா‌ல் ம‌ஞ்ச‌ள் காமாலை எ‌ன்பது ஒரு நோ‌யே அ‌ல்‌ல. ஏதோ ஒரு நோ‌யி‌ன் அ‌றிகு‌றி. ஒருவரு‌க்கு ம‌ஞ்ச‌ள் காமாலை ஏ‌ற்ப‌ட்டா‌ல், எ‌ந்த காரண‌த்‌தினா‌ல் அவரு‌க்கு ம‌‌ஞ்ச‌ள் காமாலை ஏ‌ற்ப‌ட்டது எ‌ன்பதை முத‌லி‌ல் ஆரா‌ய்‌ந்து, அத‌ற்கு உ‌ரிய ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்க வே‌ண்டியது அவ‌சிய‌ம்.


ம‌ஞ்ச‌ள் காமாலை‌யி‌ல் 6 வகை உ‌ள்ளது. அதாவது 6 வகை ‌கிரு‌மிகளா‌ல் ம‌ஞ்ச‌ள் காமாலை ஏ‌ற்படலா‌ம். ஹெ‌பிடைடி‌ஸ் ஏ முத‌ல் ‌பி,‌சி,டி,இ, ‌‌ஜி வரை 6 வகைக‌ள் உ‌ள்ளன.

Jaundice tamil

மஞ்சள் காமாலையை தொடக்க நிலையிலேயே கண்டுபிடித்து உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் குணமடைந்துவிடலாம். ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்காம‌ல், வெறு‌ம் ப‌த்‌தியமு‌ம், ‌கீழாநெ‌ல்‌லியு‌ம் சா‌ப்‌பிடுவது ம‌ஞ்ச‌ள் காமாலையை குணமா‌க்காது.

அதே‌ போ‌ல ம‌ஞ்ச‌ள் காமாலை நோ‌ய் எ‌ப்படி வரு‌கிறது எ‌ன்பதையு‌ம் அ‌றிய வ‌ே‌ண்டு‌ம்.

உட‌லி‌ல் இர‌த்த‌த்‌தி‌ல் உ‌ள்ள ‌சிவ‌ப்பு அணு‌க்க‌ள் அ‌ழி‌ந்து அவை பிலிரூபின் (Spleen)என்ற நிறப்பொருளாக உடலில் உற்பத்தி ஆகிறது. இரத்தத்தின் வழியே பிலிரூபின், பித்தநீர் மூலமாக மலம், சிறுநீர் வழியில் வெளியேறுகிறது.

கல்லீரல் பாதிக்கப்பட்டாலோ, பித்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டாலோ கழிவுப்பொருளான பிலிரூபின் உடலிலேயே தங்கிவிடுகிறது. இதனால்தான் உடலில் மஞ்சள் நிறம் ஏற்படுகிறது. மது அருந்துதலாலும், ஹெபடைட்டிஸ் கிருமிகள் கல்லீரலைத் தாக்குவதாலும் கூட மஞ்சள் காமாலை ஏற்படலாம்.


 `மஞ்சள் காமாலை‘ பாதிப்பு இருந்தால்  வாந்தி, குமட்டல், பசியின்மை, உடல் சோர்வு, வயிற்றின் வலதுபக்க மேல்பாகத்தில் வலி, மூட்டுவலி, வயிறுவீக்கம், காய்ச்சல், ரத்தக்கசிவு என ஒன்பது விதமான அறிகுறிகள் காணப்படும்.

Jaundice tamil

கண்ணின் வெள்ளைப்படலத்திலும், நாக்கின் அடிப்பகுதியிலும் மஞ்சளாக இருக்கும். உடலும் மெலிந்து காணப்படும்.

மஞ்சள் காமாலை என்பது அடைப்புக் காமாலை என்றும், அடைப்பில்லா காமாலை என்றும் இருவகைப்படும். அடைப்புக் காமாலையில் கணைய கோளாறு, பித்தக்குழாய் கற்கள், பித்தக்குழாய் புற்றுநோய் என்ற மூன்று உட்பிரிவும், அடைப்பில்லா காமாலையில் வைரஸ் கிருமிகள், அ‌திகமாக அரு‌ந்து‌ம் மதுபானம், ‌டைபாய்டு போ‌‌ன்ற கா‌ய்‌ச்சலை ஏ‌ற்படு‌த்து‌ம் பா‌க்டீ‌ரியா‌க்க‌ள், மலேரியா என்ற ஒட்டுண்ணிகள், ‌சில மா‌த்‌திரைக‌‌ள் போ‌ன்றவ‌ற்றாலு‌ம் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கு ம‌ஞ்ச‌ள் காமாலை ஏ‌ற்படலா‌ம்.

கொழுப்புச் சத்துள்ள உணவை நாம் உட்கொள்ளும்போது அதை ஜீரணிப்பதற்காக கல்லீரல் பித்தநீரை சுரக்கிறது. இந்த நீர் பித்தபைக்கு குழாய் மூலம் வருகிறது. இந்த பித்தக் குழாயில் கல் மற்றும் கேன்சர் (Cancer) கட்டிகளா‌ல் அடைப்பு ஏற்படலாம். அப்படி அடைப்பு ஏற்பட்டால் பித்தநீர் கல்லீரலிலேயே தேங்கி இரத்தத்தில் கலந்துவிடுகிறது. இதனால் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. இது அடைப்பு காமாலை எனப்படுகிறது.

கல்லீரலை தாக்கும் A,B,C,D,E,G என்ற பலவகையான வைரஸ்களாலும் மஞ்சள் காமாலை ஏற்படலாம். மலேரியா காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல் வந்தாலும் கல்லீரல் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை வரலாம். மதுபானங்கள் அருந்துவதன் மூலமாகவும் மஞ்சள் காமாலை ஏ‌ற்படலா‌ம். இதனை அடை‌ப்‌பி‌ல்லா காமாலை எ‌ன்‌கிறா‌ர்க‌ள்.

Jaundice tamil


எதுவாக இரு‌ந்தாலு‌ம் உ‌ரிய ‌சி‌கி‌ச்சை பெற வே‌ண்டியது ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். வெறு‌ம் ‌கீழாநெ‌ல்‌லியு‌ம், ‌ப‌த்‌‌தியமு‌ம் போதாது.

அடை‌ப்பு காமாலை‌க்கு ‌சி‌றிய அள‌வி‌ல் அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌‌ய்வது ‌மிகவு‌ம் மு‌க்‌கியமா‌கிறது. இதை‌த் த‌விர இத‌ற்கு ‌நிர‌ந்தர ‌சி‌கி‌ச்சை வேறு எது‌வு‌மி‌ல்லை.

எனவே, ம‌ஞ்ச‌ள் காமாலை ஏ‌ற்ப‌ட்டா‌ல் வெறு‌ம் ‌சிறு‌நீரக‌ம் ம‌ற்று‌ம் இர‌த்த‌த்தை ப‌ரிசோ‌தி‌ப்பதுட‌ன், வ‌யி‌ற்று‌ப் பகு‌தியை அதாவது க‌ல்‌லீரலை ‌ஸ்கே‌ன் செ‌ய்வது‌ம் அவ‌சியமா‌கிறது. அ‌ப்போதுதா‌ன் அடை‌ப்பு‌க் காமாலையை அடையாள‌ம் காண இயலு‌ம்.

இ‌ல்லையெ‌னி‌ல், ம‌ஞ்ச‌ள் காமாலை‌க்கு ‌சி‌கி‌ச்சை எடு‌த்து குணமடை‌ந்த ‌பிறகு ‌சில மாத‌ங்க‌ள் க‌‌ழி‌த்து க‌ல்‌லீர‌லி‌ல் ‌பிர‌ச்‌னை ஏ‌ற்படு‌வது ‌நி‌ச்சய‌ம். அ‌ப்போது அத‌ற்கு த‌னியாக ஒரு ‌சி‌கி‌ச்சை எடு‌த்து‌க் கொ‌ள்ள நே‌ரிடு‌ம்.

அது என்ன பிலிரூபின்?

முதிர்ந்த இரத்த சிவப்பணுக்கள் மண்ணீரலில் (Spleen) அழிக்கப்படும் போது பிலிரூபின் (Spleen) என்ற நிறப்பொருள் உடலில் உற்பத்தி ஆகிறது.

இந்த பிலிரூபின் மலம், சிறுநீர் வழியாக வெளியேறுகிறது.

கல்லீரல் பாதிக்கப்பட்டாலோ, பித்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டாலோ கழிவுப்பொருளான பிலிரூபின் உடலிலேயே தங்கிவிடுகிறது. இதனால்தான் உடலில் மஞ்சள் நிறம் ஏற்படுகிறது.

மது அருந்துவதாலும், ஹெபடைட்டிஸ் கிருமிகள் கல்லீரலை தாக்குவதாலும் கூட மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.

Jaundice tamil


வைரஸ் A மற்றும் E கிருமிகளால் ஏற்படும் மஞ்சள் காமாலை, அசுத்தமான நீரையும், ஈ மொய்த்த தின்பண்டங்களை உட்கொள்வதாலும் பரவுகிறது.

சாக்கடை நீர் கலந்த குடிநீர் மற்றும் அசுத்தமான நீரை குடிப்பவர்களுக்கும் இந்த ஆபத்து ஏற்படும்.

வைரஸ் B,C,D மற்றும் `G’ வகை கிருமிகள் ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது, அதாவது பலமுறை பலருக்கு பயன்படுத்திய ஊசியை உபயோகப்படுத்தும் போது பரவுகிறது.

அறிகுறிகள்

  • வாந்தி, குமட்டல், பசியின்மை, உடல் சோர்வு, வயிற்றின் வலதுபக்க மேல்பாகத்தில் வலி, மூட்டுவலி,
  • வயிறுவீக்கம், காய்ச்சல், இரத்தக்கசிவு என ஒன்பது விதமான அறிகுறிகள் காணப்படும்.
  • கண்ணின் வெள்ளைப் படலத்திலும், நாக்கின் அடிப் பகுதியிலும் மஞ்சளாக இருக்கும்.
  • சிறுநீரும் மஞ்சள் நிறத்தில் போகும். மேலும் சிறுநீர் வெளியேற்றுவதிலும் சிரமங்கள் ஏற்படும்.
  • கல்லீரல் அழற்சியின் அடுத்தகட்டமாக கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீங்கி பெரிதாகும். இத்துடன் நிணநீர்க்கட்டிகளிலும் வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

Jaundice tamil


சிகிச்சை முறை

இரத்தப் பரிசோதனையின் மூலம் மஞ்சள் காமாலை நோயை உண்டாக்கும் வைரஸ் பற்றி கண்டறிய முடியும்.

இந்த வைரசுக்கு எதிரான எதிர்ப்பாற்றல், புரதத்தின் அளவு இரத்தத்தில் அதிகரித்திருப்பதை வைத்து மஞ்சள் காமாலை நோயின் தாக்கத்தை அறியலாம்.

இரத்தம், சிறுநீர் பரிசோதனைக்கு அடுத்தபடியாக அல்ட்ராசவுண்டு ஸ்கேன் மூலம் பித்தக்குழாயில் உள்ள கட்டிகள், கற்கள் போன்றவற்றை துல்லியமாக கண்டறியலாம்.

நோய் இருப்பது உறுதியான பின்னர், உணவு கட்டுப்பாட்டை கடைபிடிப்பது அவசியம்.

கல்லீரல் அழற்சி நீண்ட காலம் இருந்தால் அது கல்லீரல் புற்றுநோயாக மாறவும் வாய்ப்பு உள்ளது. மேலும் கல்லீரல் செயலழிந்து விடும் அபாயமும் உள்ளது.

Jaundice tamil


தவிர்க்க வேண்டிய உணவுகள்

காரமான மசாலா உணவுகளை வகைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

மஞ்சள் காமாலை வந்து ஐந்து மாதங்கள் வரை அசைவ உணவுகள் எடுக்கக் கூடாது.

முட்டையில் மஞ்சள் கரு, அதிக புரதம் உள்ள பருப்பு, சோயா வகைகள் மற்றும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.

சுகாதாரமற்ற இடங்களில் விற்கும் குளிர்பானம், உணவு வகைகளை உண்பதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகள் சாப்பிடுவது மிக முக்கியம்.

பாதுகாப்பு முறைகள்

மழைக்காலங்களில் நீரை கொதிக்க வைத்து ஆறிய பின் அருந்தவேண்டும்.

நோய் தொற்றை தவிர்க்க சுற்றுப்புறத்தை மிக தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைப் பருவத்தில் மஞ்சள் காமாலை தடுப்பூசி போடுவதன் மூலம் நோய் ஏற்படுவதை தடுக்கலாம்.

சுகாதாரமான கழிப்பிடத்தை பயன்படுத்த வேண்டும், ஈக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கல்லீரல் பாதிப்பு நோய் உள்ளவர்கள் மது அருந்தும் பழக்கத்தை கண்டிப்பாக விட வேண்டும்.

Tags:    

Similar News