தலையணை இல்லாமல் தூங்கினால்... உடலுக்கு கிடைக்கிறது பல நன்மைகள்!

Without Pillow Sleeping Benefits -தலைக்கு, தலையணை இல்லாமல் துாங்கினால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைப்பதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2022-10-26 03:25 GMT

தலையணை வைத்து துாங்கும் போது உடலில் எலும்புகளின் நிலை காட்டும் படம்.

Without Pillow Sleeping Benefits -தலையணை இல்லாமல் தூங்குபவர்களை, விரல் விட்டு எண்ணி விடலாம். ஏனென்றால், இங்கு தலையணையை தலைக்கு வைத்து தூங்குவதை நம் மரபாகவே, நாம் பயன்படுத்தி வருகிறோம். இன்னும் சிலர் தலைக்கே இரண்டு தலையணை வைத்து தூங்கும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் காலுக்கு ஒரு தலையணை, பக்கத்தில் கட்டிப்பிடித்து படுக்க தலையணை என வித, விதமாக தூங்குவதற்கு தலையணை வைத்திருப்பார்கள். இப்படியான தலையணையே இல்லாமல் தூங்குவதில் நமக்கு எவ்வளவு ஆரோக்கியம் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தண்டுவடம்:

தலையணை இல்லாமல் தூங்குபவர்களுக்கு, தண்டுவடம் அதன் இயல்பான நிலையில் இலகுவாக இருக்குமாம். இதனால் உடல்வலி, தண்டுவட பிரச்சினை துளிகூட ஏற்படாததாம். உயரமான தலையணை பயன்படுத்தும் போது படுக்கை நிலை குலைந்துபோகும். இதனால், தண்டுவடம் பாதிக்கும். தலையணை இல்லாமல் தூங்கினால் தோள்பட்டை, கழுத்து வலியும் கூட வராது.

எலும்பு:

தலையணை இல்லாமல் தூங்கினால், உடலின் எலும்புகளை சீராக்க முடியும். முகச்சுருக்கம்: தலையணை இல்லாமல் தூங்குபவர்களுக்கு முகச்சுருக்கம் ஏற்படாது. தோள்பட்டை பிரச்னை: தலையணை இல்லாமல் தூங்கும்போது, சிலர் நேராக படுத்து தூங்குவார்கள். அவர்களுக்கு மெல்லிய தலையணையே சிறந்தது. இது கழுத்து, தலை, தோள்பட்டை பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கும். சிலர் ஒரு சாய்த்து அதாவது ஒருபக்கமாக படுப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இவர்களுக்கு அடர்த்தியான தலையணை வைத்து படுத்தால் தோள்பட்டை, காதுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்துமாம்.

இடுப்புவலி:

குப்புறப்படுத்து தூங்குபவர்களுக்கு தட்டையான தலையணையே நல்லது. இது நம் தலையின் நிலையை அசவுகரியமாக உணராமல் இருக்க உதவி செய்வதோடு, முதுகு, இடுப்பு வலியையும் விரட்டியடிக்கிறது. ஆனால், தலையணை இல்லாது தூங்கினால் நாம் நோய்களை விரட்டி விட முடியும். சிலருக்கு மருத்துவர்கள் தலையணை வைத்து தூங்க பரிந்துரைத்து இருப்பார்கள். அவர்கள் மட்டும் தலையணை வைத்து தூங்கலாம். தலையணை இல்லாத தூக்கம்… உடலில் நிகழ்த்தும் மாற்றம். இதுதான் நிஜ தலையணை மந்திரம்!

இதனால் தான் தற்போது பெரும்பாலும் தலையணை இல்லாமல் துாங்கி பழகுங்கள் என டாக்டர்கள் பரிந்துரைக்க தொடங்கி உள்ளனர். தலையணை இல்லாமல் துாங்க வேண்டுமானால், 'சாப்பிட்டு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்தே துாங்க செல்ல வேண்டும். சாப்பிட்ட உடனே படுத்தால், அதுவும் தலையணை இல்லாமல் படுத்தால் அதுவும் ஒருவகை பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே தலையணை இல்லாமல் துாங்க வேண்டும் என நீங்கள் ஒரு முடிவுக்கு வந்தால், துாங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பே சாப்பிட்டு முடித்திருக்க வேண்டும். நீங்கள் சாப்பிட்ட உணவு செரிமாணம் ஆன பின்னரே தலையணை இல்லாமல் துாங்கலாம். சிலருக்கு வயிற்றில் அதிக அமிலச்சுரப்பு, ஜிஆர்டி எனப்படும் நெஞ்சகப்பகுதி உணவுக்குழலில் சாப்பாடு எதுக்களிக்கும் பிரச்னைகள் இருக்கும் இதுபோன்ற நபர்கள் தலையணை வைத்தே துாங்க வேண்டும். அதுவும் டாக்டர்கள் சொல்கிறபடி இரண்டு தலையணைகளை கூட வைத்துக்கொள்ளலாம். அதுபோல் வேறு சில எலும்பு பிரச்னைகள் உள்ளவர்களுக்கும்  தலையணை மிகவும் அவசியம் என்பதை மறந்து விடக்கூடாது எனவும், டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். 




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News