How to Communicate Feelings All the While Setting Boundaries-உறவின் எல்லை எது?

உறவுகள் அல்லது நட்பில் நாம் சில எல்லைகளை வரையறுத்துக்கொள்வது நமது பாதுகாப்பை அலலது சீரான உறவு தொடர்வதை உறுதி செய்யும்.

Update: 2023-11-20 08:31 GMT

உறவுகளுக்கிடையே எல்லைகள் நிர்ணயம் செய்வது அவசியம்.(கோப்பு படம்)

How to Communicate Feelings All the While Setting Boundaries,Boundaries,Smaller Boundaries,Pushing Boundaries,Misconceptions about Boundaries Busted,How to Set Boundaries

விரக்தியடைவதில் தொடங்கி நமது சுய கவனிப்புக்கு நேரம் ஒதுக்காதது வரை, நமது உறவுகளுக்கு இடையே எல்லை அமைப்பது எவ்வளவு அவசியமானது  என்பதை உணர்த்த சில அறிகுறிகள் தரப்பட்டுள்ளன. எனது உரிமையில் தலையிட ஒருவருக்கு இவ்வளவுதான் உரிமை உள்ளது என்பதை நிர்ண்யம் செய்வது உறவுகள் நீடித்து இருப்பதற்கு வழிவகுக்கும். 

எந்தவொரு உறவிலும் எல்லை முக்கியம். அது நம் குடும்ப உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, நண்பர்களாக இருந்தாலும் சரி, நம் காதல் கூட்டாளிகளாக இருந்தாலும் சரி, நமக்கு எது ஆரோக்யமானது, எது ஆரோக்கியமற்றது என்பதைப் புரிந்துகொள்ள நாம் வகுத்திருக்கும் எல்லை நமக்கு உதவுகிறது.


How to Communicate Feelings All the While Setting Boundaries

மற்றவர்கள் கடைப்பிடிக்க சில விதிகள் மற்றும் ஒருவரைப்பற்றி புரிந்துகொள்ளவும் இது உதவுகிறது. "ஆரோக்யமான எல்லையை அமைக்க நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டியதை நீங்கள் கண்டறிய முடியும். எல்லையை அமைப்பது ஒரு திறமையான அணுகுமுறை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எதையாவது சமாளிப்பது அல்லது எதை செய்வது எப்படி என்று தெரியாமல் இருப்பது நமது திறமின்மையைக் காட்டிவிடும். ஒரு விஷயத்தை எப்படி கையாளுவது என்பதை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்" என்று சிகிச்சையாளர் கிளாரா கெர்னிக் சில அறிகுறிகளைப் பகிர்ந்து கொண்டார். எல்லையை நிர்ணயிப்பது என்பதை இது காட்டுகிறது.

How to Communicate Feelings All the While Setting Boundaries

அடிக்கடி மனக்கசப்பு அல்லது விரக்தி உணர்வுகள் :

யாராவது நமக்கு வேண்டியவர் நம் நேரத்தையோ அல்லது உதவியையோ கேட்கும் போது பெரும்பாலும் நாம் விரக்தி அல்லது வெறுப்பாகவோ உணர்கிறோம். இது நமது எல்லை மதிக்கப்படவில்லை என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். ஆனால், நம்மைச் சுற்றியுள்ள மக்களுடன் அதை நம்மால் பகிர்ந்து கொள்ள முடியாமல் இருக்கலாம். 

How to Communicate Feelings All the While Setting Boundaries

அதிக அர்ப்பணிப்பு மற்றும் சோர்வு :

ஆரோக்யமான எல்லையை நாம் கொண்டிருக்கும் போது, ​​எதையும் நாம் சமாளிக்கக்கூடிய அளவுக்கு எடுத்துக்கொள்வதால், நாம் சலிப்பாக உணருவதில்லை. ஆனால் அதேவேளையில் நாம் கையாளக்கூடியதை விட அதிக அர்ப்பணிப்புடன் செயல்பட்டதாக உணர்கிறோம். மேலும் சலிப்பு உணர்வை அடைகிறோம். இது நாம் வகுத்துள்ள எல்லைக்கு வலுவூட்டப்படவேண்டும் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.


How to Communicate Feelings All the While Setting Boundaries

உறவுகள் முழுமையாகவில்லை :

ஒரு உறவில் ஆரோக்யமான எல்லையை நாம் நிர்ணயம் செய்யாவிட்டால், அவர்கள் பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால், கூட்டாளியின் நடத்தை முறைகளை நாம் எப்போதும் கடைப்பிடிப்போம். அவர்களுக்கான நடத்தை முறை என்பது நமது நடத்தை முறைகளில் இருந்து வேறுபட்டிருக்கலாம் அல்லது மாறுபட்டிருக்கலாம். மேலும் அது உறவில் முன்னுரிமை குறைவாக இருப்பதை உணர வைக்கும்.

How to Communicate Feelings All the While Setting Boundaries

சுய கவனிப்புக்கு நேரமின்மை :

நம்மைக் கவனித்துக் கொள்ளவும், நமது தனிப்பட்ட நலன்களுக்கு நேரம் ஒதுக்கவும் நேரம் இல்லை என்று நாம் உணர்ந்தால், நாம் எப்போதும் மற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதால் இருக்கலாம். எனவே, நமது எல்லை பலப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான அறிகுறியாக இது இருக்கலாம். பிறருக்கு செலவிடும் நேரத்தை உங்கள் சுயகவனிப்புக்கு செலவு செய்யவேண்டும் என்பதை இது சான்றாக்குகிறது.

How to Communicate Feelings All the While Setting Boundaries

மோசமான வேலை-வாழ்க்கை சமநிலை :

வேலை எப்போதும் நம் தனிப்பட்ட வாழ்க்கையில் நுழைந்து கொண்டே இருந்தால், நமது ஆரோக்யம் பாதிக்கப்படும். வேலை வேறு, தனிப்பட்ட நமது வாழ்க்கை வேறு. இது இரண்டுக்கும் இடையே சரியான எல்லையை உருவாக்குவது அவசியம். ஆரோக்யமான தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையை பராமரிக்க சில எல்லையை உருவாக்க வேண்டிய நேரம் இது என்பதை உணரவேண்டும்.

Tags:    

Similar News