Hba1c meaning in tamil-hba1c பரிசோதனை என்றால் என்ன? தெரிஞ்சுக்கங்க..!

சர்க்கரை என்று அழைக்கப்படும் நீரிழிவு பாதிப்பை எதிர்கொள்வது எப்படி என்பதைப்பற்றி இந்த கட்டுரையில் விரிவாக காண்போம்.

Update: 2023-10-01 12:38 GMT

Hba1c meaning in tamil-hba1c பரிசோதனை என்பதன் விளக்கம் (கோப்பு படம்)

Hba1c meaning in tamil

நீரிழிவு என்பது ஒரு நோயா?

நீரிழிவு என்பது நீண்ட காலமாக நீடித்து இருக்கும் ஒரு வகை குறைபாடு. இது கணையத்தால் (Pancreas) இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாதபோது அல்லது அது உற்பத்தி செய்யும் இன்சுலினை உடல் சரியாகப் பயன்படுத்த முடியாதபோது ஏற்படும் ஒருவித பாதிப்பு அல்லது குறைபாடு.

நீரிழிவு என்பது ஒரு நோயல்ல. அது நம் உடலில் ஏற்படும் இன்சுலின் குறைபாடு ஆகும். இன்சுலின் (Insulin) என்பது கணையத்தால் உற்பத்தி செய்யப்படும் ஒரு ஹார்மோன் அதாவது சுரப்பி.

இன்சுலின் செயல்பாடு சரியாக நடக்கவில்லை என்றால், உடலில் உயர் இரத்த சர்க்கரை அல்லது குறைந்த இரத்த சர்க்கரை ஏற்படுகிறது.

Hba1c meaning in tamil


உயர் இரத்த சர்க்கரை:

இங்கே, சர்க்கரையை உறிஞ்சுவதை கட்டுப்படுத்த போதுமான இன்சுலின் இல்லாமல் இருக்கும். அல்லது உடல் செல்கள் குளுக்கோஸை திறம்பட உறிஞ்சும் செயல் செய்யப்பட முடியாமல் இருக்கும்.

பெரும்பாலும் உயர் இரத்த சர்க்கரை நிலையைத் தான் நீரிழிவு குறைபாடாக எடுத்துக் கொள்ளப்படுகிறது

குறைந்த இரத்த சர்க்கரை:

ஒருவர் சரியான உணவை உண்ணாதபோது இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்படுகிறது. எனவே உடல் செல்கள் உறிஞ்சுவதற்கு உணவில் இருந்து குளுக்கோஸ் குறைவாக இருக்கிறது. உடலுக்கு தேவையான குளுக்கோஸ் இல்லாமல் இருக்கும்.

இரத்தச் சர்க்கரைக் குறைவு ஆபத்தானது. தலைச்சுற்றல், பலவீனம், வலிப்பு, நினைவிழப்போடு நம்மை மரணம் வரை அழைத்துச் செல்லும் ஆபத்துமிக்கது

Hba1c meaning in tamil


நீரிழிவு வகைகள்:

மேலே விளக்கப்பட்டுள்ளபடி, இன்சுலின் உடல் செல்களால் இரத்த சர்க்கரை உறிஞ்சுதலைக் கட்டுப்படுத்துகிறது. இந்த செயல்பாட்டில் ஏதாவது குறை இருந்தால் வகை 1 (Type 1) மற்றும் வகை 2 (Type 2) நீரிழிவு (Diabetes) நோய்க்கு வழிவகுக்கிறது

வகை -1 நீரிழிவு

திடீரென்று தோன்றும்

பெரும்பாலும் குழந்தைகளை பாதிக்கும்

மெலிந்த உடல் வாகை கொண்டிருப்பர்

வகை -2 நீரிழிவு

படிப்படியாக தோன்றும்

பெரும்பாலும் பெரியவர்களை பாதிக்கும்

பருமனான உடல்வாகை கொண்டிருப்பர்

Hba1c meaning in tamil

வகை -1 நீரிழிவு (Type -1 Diabetes):

இங்கே, உடல் இன்சுலின்-ஐ உற்பத்தி செய்யாது. ஏனெனில் இன்சுலின் சுரக்கும் கணையத்தில் உள்ள பீட்டா (Beta) செல்களை நோயெதிர்ப்பு அமைப்பு தாக்கியுள்ளது. இதன் விளைவாக, உடல் செல்கள் நுகர்வுக்கு, இரத்த சர்க்கரையிலிருந்து போதுமான சக்தியைப் பெற முடியாத நிலை ஏற்படும்.

கல்லீரல் உடல் செல்களின் மூலம் கொழுப்புச் செல்களை உடைத்து ஆற்றலாக மாற்றுகிறது. இது கீட்டோன்களை (Ketone) உருவாக்குகிறது. காலப்போக்கில், இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கீட்டோன்கள் நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் (Diabetic Ketoacidosis) எனப்படும் உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்துகின்றன.


வகை -2 நீரிழிவு (Type-2 Diabetes):

உடல் செல்கள் இன்சுலினிலிருந்து சிக்னலை எடுத்து இரத்தத்திலிருந்து சர்க்கரையை உறிஞ்சும்போது, ​​அவை 'இன்சுலின் உணர்திறன்' (‘Insulin sensitive’) என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த சிக்னலை அவைகள் கவனிக்காதபோது (பல்வேறு காரணங்களால்), அவை ‘இன்சுலின் எதிர்ப்பு’ (‘Insulin resistant’) ஆகிவிட்டதாகக் கூறப்படுகிறது

இதை ஈடுசெய்ய, கணையம் மேலும் மேலும் இன்சுலினை சுரக்கிறது. இது ஹைபரின்சுலேமியா (hyperinsulemia) என்று அழைக்கப்படுகிறது. காலப்போக்கில், அதிகப்படியான வேலை பீட்டா செல்களைத் தேய்க்கிறது. எனவே இன்சுலின் உற்பத்தியும் படிப்படியாகக் குறைந்து உயர் இரத்தச் சர்க்கரை அளவை உருவாக்குகிறது. இது டைப் -2 நீரிழிவு எனப்படுகிறது.

Hba1c meaning in tamil

கர்ப்ப கால நீரிழிவு (Pregnancy Diabetes):

இது பொதுவாக கர்ப்ப காலத்தில் உயர் இரத்த சர்க்கரை ஏற்படுவதால் வரும் நீரிழிவு ஆகும்

இது பெரும்பாலும் மருத்துவரின் அறிவுரைப் டி கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும்

நீரிழிவு உடலில் எந்த பகுதிகளை பாதிக்கும்?

  • இதயம்
  • சிறுநீரகம்
  • கண்கள்
  • நரம்பு மண்டலங்கள்
  • சிறு மற்றும் பெரு ரத்த நாளங்கள் வீக்கம் அடைதல்
  • கால் பாதம்

நீரிழிவு மக்களுக்கு மிகப்பெரும் அசச்சுறுத்தலை உளவியல் ரீதியாகவும், உடல்நலம் ரீதியாகவும் தொடர்ந்து ஏற்படுத்துகிறது

Hba1c meaning in tamil


நீரிழிவின் அறிகுறிகள்:

  • அடிக்கடி பசி மற்றும் தாகம் ஏற்படுதல்
  • எடை இழத்தல்
  • அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு மேம்படுதல்
  • கண் மங்கலாக தெரிவது
  • குழப்பம்
  • உடல் மற்றும் மனம் சோர்வு ஏற்படுதல்
  • இரட்டை பார்வை உண்டாகுதல்
  • அடிக்கடி பல் ஈறு, தோளில் நோய் தொற்று உண்டாகுதல்
  • உடம்பில் ஏற்பட்ட ரத்தக்காயம் குணமாக பல காலம் எடுத்து கொள்ளும்
  • அடிக்கடி மனஉளைச்சல் உண்டாகுதல்
  • கால் மற்றும் உள்ளங்கையில் ஏற்படும் எரிச்சல்கள்
  • ஆண்களுக்கு விறைப்பு தன்மை குறைதல்
  • நீர்ச் சமநிலைக் குறைபாடு

Hba1c meaning in tamil


நீரிழிவால் ஏற்படும் மோசமான விளைவுகள்

  • இரத்த நாளங்கள், நரம்பு மண்டலங்கள் அதன் தொடர்புடைய உறுப்புக்கள் செயலிழப்பது
  • 65% நீரிழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதயம் செயலிழப்பு, மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றால் இறந்துருக்கிறார்கள்
  • நீரிழிவால் கண்கள் முக்கியமாக பாதிப்படையும். நீரிழிவு ரெட்டினோபதியால் ரத்த நாளங்கள் பாதிப்படைந்து கண்கள் குருடவாதற்கு வாய்ப்புகள் அதிகம்
  • நரம்புகளுக்கு ரத்த ஓட்டம் குறைவதால் நரம்பு வலி மற்றும் உணர்ச்சியற்று போகுதல் நிகழலாம்
  • கால் மற்றும் கால் தொற்றுகள், கால் துண்டித்தல் மற்றும் குடலிறக்கம் மோசமான இரத்த ஓட்டம், திசுக்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நரம்பு சேதம் ஆகியவை ஏற்படுகிறது
  • சிறுநீரக பாதிப்பு (நீரிழிவு நெஃப்ரோபதி) நீரிழிவு நோயாளிகளுக்கு பெரிய ஆபத்தாக இருக்க வாய்ப்பிருக்கிறது

Hba1c meaning in tamil

பொதுவான இரத்த சர்க்கரை அளவு:


எவ்வாறு பரிசோதிப்பது?

HbA1C பரிசோதனை:

நீரிழிவை கண்டறியவும் கட்டுக்குள் வைக்கவும் பயன்படுவதே A1C இரத்தப் பரிசோதனை. இதன் முழுப்பெயர் ஹீமோகுளோபின் A1C அல்லது HbA1C பரிசோதனை என அழைக்கப்படும். இந்த டெஸ்ட் மூலம் கடந்த மூன்று மாத காலத்திற்கான உங்கள் ரத்த சர்க்கரை அளவின் சராசரியை கணக்கிடலாம். அதாவது இந்த எளிமையான இரத்த பரிசோதனை உங்களுடைய கடந்த மூன்று மாதங்களின் சர்க்கரை அளவை காண்பிக்கும்.

இரத்தப் பரிசோதனையில் 7 அல்லது 7-க்கு கீழே இருந்தால் இயல்பானது

Hba1c meaning in tamil


சிறுநீரகப் பரிசோதனை:

வெறும் வயிற்றிலும் சாப்பிட்ட பின்னரும் இரண்டு மணி நேரம் கழித்து சிறுநீர் சாம்பிள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படும்

நோயின் தாக்கத்தைப் பொறுத்து `+’ முதல் `+ + + +’ வரை என குறிப்பிடப்படும்

இரத்தப் பரிசோதனை:

வெறும் வயிற்றிலும், காலை உணவுக்குப் பின்னரும் இரண்டு மணி நேரம் கழித்து இரத்த சாம்பிள் எடுக்கப்பட்டு குளுக்கோமீட்டர் கருவியில் பரிசோதனை செய்யப்படும்.

180 க்கும் அதிகமாக இருந்தால் நீரிழிவு என்கிறார்கள்

Hba1c meaning in tamil

எப்பொழுது மருத்துவரை சந்திக்கலாம்?

மேற்கண்ட ஆய்வக சோதனையில் உங்கள் ரத்த சர்க்கரை அளவு முடிவுகளை கொண்டு நீரிழிவு நிபுணர் அல்லது உட்சுரப்பியல் நிபுணரை சென்று ஆலோசிக்கவும். மேலும் பரிசோதனை முடிவுகளை தாண்டி கீழ்காணும் காரணங்களுக்காக மருத்துவரை அணுகலாம்.

  • கண்கள் மங்கலாக தெரிய ஆரம்பிப்பது
  • ஐந்து நாட்களுக்கு மேல் நீங்கள் ஆன்டி செப்டிக் கிரீம் உபயோகித்தும் உங்கள் காயம் ஆறாமல் இருப்பது
  • கர்ப்ப காலத்தில் பெண்கள் கண்டிப்பாக பரிசோதிக்க வேண்டும்
  • கால் பாத பகுதியில் உணர்ச்சி திறன் இழப்பது
  • கை, கால், தாடை, மார்பு மற்றும் கணுக்கால் பகுதியில் வலி மற்றும் வீக்கம் உண்டாகுதல்
  • தோல் நோய்கள் மற்றும் தோல் நிறமிழந்து போகுதல்

நீரிழிவு நோய் வகை ஒன்றுக்கான சிகிச்சை முறைகள்

  • மருத்துவர் பரிந்துரைக்கப்பட்ட இன்சுலின் மருந்தை பல முறைகள் எடுத்துக்கொள்ளுதல்
  • தொடர்ந்து இரத்தத்தில் சக்கரையின் அளவைக் கண்காணித்து வருதல்
  • உணவு வேளைகளில் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளையும் மற்ற நேரங்களில் இன்சுலினை ஒரே சீராக வழங்கும் ஓர் உட்செலுத்தியைப் பயன்படுத்துதல்
  • பரிந்துரைக்கப்பட்ட உணவுத் திட்டத்தை முறையாகக் கடைப்பிடித்தல்

Hba1c meaning in tamil


நீரிழிவு வகை இரண்டுக்கான சிகிச்சை முறைகள்

  • ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை மேற்கொள்ளுதல்
  • நாள்தோறும் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல்
  • உடற்பருமனைக் குறைத்தல்
  • மருத்துவர்பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளையும் இன்சுலினையும் எடுத்துக்கொள்ளுதல்
  • சரியான வாழ்க்கை முறையை கடைபிடித்தால் டைப் - II நீரிழிவை குணப்படுத்தி இன்சுலின் மற்றும் மாத்திரை இல்லாத வாழ்க்கையை வாழ முடியும்

உணவு மற்றும் வாழ்க்கை முறைகள்:

  • இரத்த அழுத்தத்தையும் கெட்ட கொழுப்புகளையும் உணவு உண்ணும் முறையால் கட்டுப்பாடுடன் வைத்துக்கொள்ளவும்.
  • உங்கள் மருத்துவர் அல்லது உணவு ஆலோசனை நிபுணர் பரிந்துரைத்த சத்தான உணவு வகைகளை சாப்பிடவும்.
  • சிறந்த உடற்பயிற்சிகளை, குறைந்தது 30 நிமிடங்களுக்குச் செய்ய வேண்டும்.
  • அடிக்கடி தண்ணீர் குடிக்கவும்

Hba1c meaning in tamil

உண்ணவேண்டிய உணவுகள் 

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

  • மது
  • ஜூஸ் வகைகள்
  • சாக்லேட், மிட்டாய் போன்ற நேரடி இனிப்புகள்
  • தேன், சர்க்கரை மற்றும் இனிப்புகள்
  • உலர்ந்த பழங்கள் (டிரை ஃப்ரூட்ஸ்)
  • கேக் மற்றும் பேஸ்ட்ரீஸ்
  • பொரித்த உணவுகள் மற்றும் குளிர் பானங்கள்


Tags:    

Similar News