groundnut in tamil-வேர்க்கடலை சாப்பிடுங்க..! பெண்களுக்கு ஏற்படும் கருப்பை கட்டிகளை தடுக்கும்..!

groundnut in tamil-தமிழ்நாட்டில் வேர்க்கடலை விற்கப்படாத பேருந்து நிலையங்கள் கிடையாது. அவித்தும், வறுத்தும் சூடாக பரிமாறப்படுகிறது.;

Update: 2023-01-12 08:55 GMT

groundnut in tamil-நிலக்கடலை அல்லது வேர்க்கடலை என்று அழைக்கப்படுகிறது. இது உண்பதற்கு சுவையாகவும் ஆரோக்யம் நிறைந்ததாகவும் விளங்குகின்ற ஒரு உணவுப்பொருள் ஆகும். இதில் இருந்து எண்ணெயும் எடுக்கப்படுகிறது. இயற்கையான கடலை எண்ணெய் உடலுக்கு தீங்கு விளைவிக்காத உணவுக்கு ஏற்றதாகும். நிலக்கடலை சுருக்கமாக கடலை என்று அழைக்கப்படுகிறது. இது தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. சீனா, இந்தியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் நிலக்கடலை அதிகம் விளைவிக்கப்படுகிறது.


காந்திக்குப் பிடித்த கடலை

நிலக்கடலையை பச்சையாக இருக்கும்போது அவித்தும், காய்ந்தவுடன் வறுத்தும் உண்ணப்படுகிறது. மேலும் வெல்லப்பாகுடன் கலந்து கடலை மிட்டாயாக உண்ணப்படுகிறது. கடலை மிட்டாய் தமிழ்நாட்டில் பிரசித்திப்பெற்றதாகும். வேர்க்கடலையை பொடித்து இனிப்புருண்டைகளாகவும் தயாரிக்கப்படுகிறது. இந்த வேர்க்கடலை காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்த உணவாகும்.

groundnut in tamil

நிலக்கடலையில் அடங்கியுள்ள ஊட்டத்துக்கள்

ஊட்டச்சத்துகள்:

100 கிராம் வேர்க்கடலையில்,

கலோரிகள் – 567

புரதச்சத்து – 26 கிராம்

கொழுப்பு – 49 கிராம்

கார்போஹைட்ரேட் – 16 கிராம்

நார்ச்சத்து – 9 கிராம்

இரும்புச் சத்து – 25%

கால்சியம் – 9% உள்ளது.

வேர்க்கடலையில் 49 கிராம் கொழுப்பு உள்ளது. இது கரையக்கூடிய நல்ல கொழுப்பு ஆகும். பொதுவாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்புகள் வேர்க்கடலையில் இல்லை. வேர்க்கடலையில் மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம், வைட்டமின் ஈ போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. வேர்க்கடலையில் வெவ்வேறு வகையான பைட்டோநியூட்ரியண்ட்ஸ் உள்ளன. இவை உங்கள் உடல் ஆரோக்யமாக செயல்பட உதவுகிறது.


நிலக்கடலை பயன்கள்:

இதயத்தை பாதுகாக்கிறது 

வேர்க்கடலை சாப்பிடுவதால் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை பெருமளவு குறைக்கிறது என்று பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. இதயம் ஆரோக்கியமாக இருக்க தேவையான ஊட்டச்சத்துக்கள் வேர்க்கடலையில் உள்ளன. மெக்னீசியம், தாமிரம், நல்ல கொழுப்பு சத்தான மோனோஅன்சேச்சுரேட், ஒலீக் அமிலம் போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆகியவை இதயத்தை ஆரோக்யமாக வைத்திருக்க உதவுகின்றன.

groundnut in tamil

கெட்ட கொழுப்பை குறைக்கிறது 

நிலக்கடலை சாப்பிடுவதால் கொழுப்புச் சத்து அதிகமாகும் என்று பலர் தவறாக நினைகிறார்கள். ஆனால் நிலக்கடலையில் மனிதனுக்கு தேவையான நல்ல கொழுப்பு தான் அதிகம் உள்ளது. நிலக்கடலை நமது உடலில் எல்.டி.எல் எனப்படும் கெட்ட கொழுப்பைக் குறைத்து எச்.டி.எல் எனப்படும் நல்ல கொழுப்பை அதிகமாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.


கருப்பைக் கோளாறுகள்

நிலக்கடலையில் உள்ள சத்துகள் ஆண் மற்றும் பெண்கள் இரு பாலாருக்குமே மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. நிலக்கடலை பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை சீராக்குகிறது. இதனால், பெண்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு ஏற்படுகிறது.

மேலும் நிலக்கடலையில் பெண்களுக்கு தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதனால் பெண்களுக்கு ஏற்படும் கருப்பைக் கட்டிகள் மற்றும் நீர்க்கட்டிகளை தடுக்க நிலக்கடலை உதவுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்க

நிலக்கடலையை தினமும் சாப்பிட்டு வருபவர்களுக்கு மூளையின் செயல்திறன் அதிகரிப்பதோடு, கூர்மையான நினைவாற்றல் உண்டாவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. நிலக்கடலையில் உள்ள வைட்டமின் பி3 மற்றும் நியாசின் போன்ற வேதிப்பொருட்கள் நினைவாற்றலை அதிகரிக்கிறது. மேலும் மூளை மற்றும் நரம்பு மண்டலம் ஆரோக்யமாக செயல்பட இது பெரிதும் உதவுகிறது.

groundnut in tamil


புரதச்சத்து நிறைந்தது

நிலக்கடலையில் அதன் மொத்த கலோரிகளில் 22-30% வரை புரதச்சத்து நிறைந்து காணப்படுகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 26 கிராம் புரதச்சத்து உள்ளது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு அவசியமான புரதச்சத்தின் தேவையை நிலக்கடலையை சாப்பிடக்கொடுத்தாலே பூர்த்தி செய்துவிட முடியும்.


எலும்பு உறுதியாக

வயது அதிகரிக்கும்போது எலும்புகளின் வலிமை குறையத் தொடங்கும். நிலக்கடலை சாப்பிடுவதால் இதில் உள்ள மாங்கனீசு மற்றும் பாஸ்பரஸ் மற்றும் பிற வைட்டமின்கள் உங்கள் எலும்புகளின் வலிமையைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. இதனால் மூட்டு வலி, மூட்டுத்தேய்மானம் போன்றவைகள் வயதானவர்களுக்கு வராது.

மன அழுத்தம் குறைய

பலருக்கு தற்கால அவசர வாழ்க்கை முறையால் மன அழுத்தம் அதிகம் ஏற்படுகிறது. அவ்வாறு மன அழுத்தம் ஏற்பட்டவர்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மனஅழுத்தம் குறையும். நிலக்கடலையில் டிரைப்டோபீன் (Tryptophen) என்ற வேதிப்பொருள் நிறைந்து இருக்கிறது. இது செரட்டோனின் என்ற உயிர்வேதிப்பொருளை சுரக்கச் செய்கிறது. இதனால் மனஅழுத்தம் குறைகிறது.

groundnut in tamil


செழுமையான சருமம்

நிலக்கடலை மென்மையான மற்றும் பொலிவான சருமம் உருவாவதை உறுதி செய்கிறது. நியாசின், வைட்டமின் பி 3 மற்றும் ஆக்ஸிஜனேற்ற- ஒலிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்கள் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைத் தடுக்க உதவுகிறது. மேலும் பல்வேறு தோல் நோய்களிலிருந்தும் பாதுகாக்கவும் இது உதவுகிறது.

Tags:    

Similar News