கிளிப்பிஸைட் (Glipizide) மருந்தை எப்படி பயன்படுத்த வேண்டும்?

Glipizide Tablet Uses in Tamil-கிளிப்பிஸைட் (Glipizide) மருந்தின் பயன்பாடுகள் மற்றும் அதன் பக்கவிளைவுகள் என்னென்ன என்பது இந்த கட்டுரையில் தரப்பட்டுள்ளது.

Update: 2022-07-27 07:00 GMT

Glipizide Tablet Uses in Tamil

Glipizide Tablet Uses in Tamil

கிளிப்பிஸைட் (Glipizide) நீரிழிவு நோய்க்கான வாய்வழி மருந்தாக பயன்படுகிறது. இது கணையத்தில் அதிக இன்சுலினை உற்பத்தி செய்ய தூண்டுவதன் மூலம் இரத்தச் சர்க்கரை அளவைச் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் நீரிழிவு நோய்க்கான சிகிச்சையில், உடற்பயிற்சி மற்றும் உணவுப்பழக்கம் போன்றவற்றிலும் இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது.

கிளிப்பிஸைட் (Glipizide) மருந்தை எப்படி பயன்படுத்த வேண்டும்? மருந்தை பயன்படுத்த தொடங்குவதற்கு முன் கல்லீரல் அல்லது சிறுநீரகப் பிரச்சினைகள் இருந்தால்; வயிற்றுப்போக்கு அல்லது குடல் அடைப்பு; அட்ரீனல் அல்லது பிட்யூட்டரி சுரப்பிகளில் கோளாறுகள்; ஊட்டச்சத்துக் குறைபாடு போன்றவைகளை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

இந்த மருந்து ஆரோக்கியமான உணவு முறை மற்றும் உடற்பயிற்சியுடன் இணைத்து பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை தடுத்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது.

மருத்துவரை கலந்தாலோசிக்காமல் இந்த மருந்தின் அளவை மாற்றக்கூடாது. பொதுவாக உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் இந்த மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும். மாத்திரையை மெல்லாமல் அல்லது நசுக்காமல் அப்படியே விழுங்கவேண்டும். கிளிப்பிஸைட் (Glipizide) மாத்திரை எடுப்பதால் இரத்த சர்க்கரை அளவு குறைதல், இதனால் எரிச்சல், வியர்த்தல், தலைசுற்றல், குழப்பம் ஆகியவை ஏற்படலாம். அதன் பக்கவிளைவுகள் ஏதேனும் ஏற்பட்டால் மருத்துவரிடம் கூறி ஆலோசனை பெறவேண்டும்.

ஒரு வேளை மருந்தளவை தவற விட்டால், அடுத்த வேளை மருந்தளவை இரட்டிப்பாக்கி ஈடு செய்ய கூடாது. கிளிப்பிஸைட் (Glipizide) இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பதற்கு வழக்கமான அடிப்படையில் உட்கொள்ளவேண்டும். இந்த மருந்தை அதிகமாக எடுத்துக்கொண்டால் உயிருக்கு ஆபத்தான நிலையான ஹைப்போகிளைசீமியா ஏற்படுவதற்கு வழிவகுக்கலாம். வயிற்று வலி, குழப்பம், வலிப்பு மற்றும் நடுக்கம் போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

Glipizide Tablet Uses in Tamil

இந்த மருந்தை உட்கொள்ளும் போது, மது அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது. மது நீரிழிவு நோய் சிகிச்சையில் முன்னேற்றத்துக்கு குந்தகம் விளைவிக்கும்.

இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். இந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு Diabetologist -ஐ அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

ஏற்றுக்கொள்ளாதவைகள்

அலர்ஜி (Allergy)

கிளிப்பிசைட் (கிளிப்பிஸைட் (Glipizide) முதன்மை உறுப்பு) அல்லது சல்போனைல்யூரியாஸ் குடும்பத்தைச் சேர்ந்த வேறு எந்த மருந்துடனும் ஒவ்வாமை இருந்தால் இந்த மருந்து பயன்படுத்த பரிந்துரைக்கப்படாது.

வகை I நீரிழிவு நோய் (Type I Diabetes Mellitus)

டைப் 1 அல்லது இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோய் இருந்தால், இந்த மருந்தை பயன்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்படாது.

நீரிழிவு கீட்டோஅசிடோசிஸ் (Diabetic Ketoacidosis)

இரத்தத்தில் அதிக அமில அளவுகள் உள்ள நோயாளிகள் பயன்படுத்துவதற்கு இந்த மருந்து பரிந்துரைக்கப்படாது.

பக்கவிளைவுகள்

  • வயிற்றுப்போக்கு (Diarrhoea)
  • தலைச்சுற்றல் (Dizziness)
  • உடல் நடுக்கம் (Shaking Of Body)
  • தோல் வெடிப்பு (Skin Rash)
  • மஞ்சள் நிற கண்கள் அல்லது தோல் (Yellow Colored Eyes Or Skin)
  • அடர் நிற சிறுநீர் (Dark Colored Urine)
  • மேல் அடிவயிற்றில் வலி (Pain In Upper Abdomen)
  • அசாதாரண இரத்தப்போக்கு (Unusual Bleeding)
  • காய்ச்சல் (Fever)
  • வயிற்றில் அதிகப்படியான காற்று அல்லது வாயு (Excessive Air Or Gas In Stomach)
  • கைபோகிலைசிமியா (Hypoglycemia)
  • இதய துடிப்பு குறைதல் (Decreased Heartbeat)
  • உயர்த்தப்பட்ட கல்லீரல் என்சைம்கள் (Elevated Liver Enzymes)

பொதுவான எச்சரிக்கை :

எந்த மருந்தாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை பெற்று பயன்படுத்துவது பாதுகாப்பானது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News