இரத்த அழுத்தம் குறைய எளிய மருத்துவக் குறிப்புகள்..!
தினமும் காலையில் வெறும் வயிற்றில் 4 வெள்ளைப் பூண்டுப் பற்களை சாப்பிட இரத்த அழுத்தம் குறையும்.;
முள்ளங்கியில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் முள்ளங்கி இரத்த அழுத்தத்தைக் குறையச் செய்யும். அதிகம் சத்தம் போட்டுப் பேசுவதை நிறுத்திவிட வேண்டும்.
இரத்தஅழுத்தம் குறைய தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. உப்பும் உப்புச் சார்ந்த ஊறுகாய், அப்பளம், நொறுக்குத் தீனிகள், கருவாடு போன்றவற்றைத் தவிர்த்து விடுதல் நல்லது.
தினமும் 45 நிமிடம் நடைப்பயிற்சி செய்வது இரத்த அழுத்தத்தைக் குறையச் செய்யும். உணவில் குறைந்த அளவு உப்பை சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும். தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட இரத்த அழுத்தம் குறையும். எளிதில் சீரணமாகக்கூடிய உணவை மட்டுமே உண்ண வேண்டும். உணவில் அதிகளவு கீரைகள், பழங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக குப்பைக்கீரை, முருங்கைக் கீரை, சிறுகீரை போன்றவற்றை சாப்பிடவேண்டும். தினமும் உணவில் கறிவேப்பிலையை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. தினமும் யோகா மற்றும் தியானம் செய்து வந்தால் இரத்த அழுத்தம் பெருமளவு குறையும்.அளவுக்கதிகமாக உள்ள உடற்பருமனைக் குறைப்பதால் இரத்த அழுத்தம் குறையும்.
புகை பிடித்தல், அளவுக்கதிகமாக மது அருந்துதல் முதலிய பழக்கங்களை நிறுத்துவதனால் இரத்த அழுத்தம் குறையும்.