நீரிழிவு எப்படி ஏற்படுகிறது? ஏன் ஏற்படுகிறது? அதன் வகைகள் என்ன? விரிவாக தெரிஞ்சுக்கங்க..!
Diabatic Meaning in Tamil-நீரிழிவு என்பது நோயல்ல. அது ஒரு குறைபாடு என்பதை தெரிந்துகொள்வது அவசியமாகும்.
Diabatic Meaning in Tamil
நீரிழிவு என்பது என்ன? அது ஒரு நோயா? என்பது குறித்து இந்த கட்டுரையில் காண்போம் வாருங்கள். நீரிழிவு என்பது நீண்ட காலமாக நீடித்து இருக்கும் ஒரு வகை குறைபாடு. இது நோயல்ல. இது ஒரு குறைபாடு மட்டுமே. இது கணையத்தால் (Pancreas) இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாதபோது அல்லது அது உற்பத்தி செய்யும் இன்சுலினை உடல் சரியாகப் பயன்படுத்த முடியாதபோது ஏற்படுகின்ற குறைபாடு.
நீரிழிவை இனிமேல் நோய் என்று கூறாதீர்கள். அது நோயல்ல அது உடலில் ஏற்படும் இன்சுலின் குறைபாடு. அவ்வளவே. இன்சுலின் (Insulin) என்பது கணையத்தால் உற்பத்தி செய்யப்படும் ஒரு ஹார்மோன் இன்சுலின் செயல்பாடு சரியாக நடக்கவில்லை என்றால், உடலில் உயர் இரத்த சர்க்கரை அல்லது குறைந்த இரத்த சர்க்கரை ஏற்படுகிறது.
உயர் இரத்த சர்க்கரை
இந்த உயர்வகை சர்க்கரையில், சர்க்கரையை உறிஞ்சுவதைக் கட்டுப்படுத்த போதுமான இன்சுலின் சுரக்காததால் அல்லது உடல் செல்கள் குளுக்கோஸை திறம்பட உறிஞ்சாததால் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுவதில்லை. பெரும்பாலும் உயர் ரத்த சர்க்கரை நிலையை நீரிழிவு குறைபாடாக எடுத்துக் கொள்ளப்படுகிறது
குறைந்த இரத்த சர்க்கரை
சரியான உணவு உண்ணாதபோது இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்படுகிறது. எனவே, உடற் செல்கள் உறிஞ்சுவதற்கு தேவையான குளுக்கோஸ் உணவில் இருந்து கிடைப்பதில்லை. அதனால் சர்க்கரை அளவு குறைகிறது. இரத்தச் சர்க்கரை அளவு குறைதல் ஆபத்தானது. தலைச்சுற்றல், பலவீனம், வலிப்பு, நினைவிழப்போடு நம்மை மரணம் வரை கூட அழைத்துச் சென்றுவிடும்.
நீரிழிவு வகைகள்
மேலே குறிப்பிட்டுள்ளபடி, இன்சுலின் உடல் செல்களால் இரத்த சர்க்கரையை உறிந்து கட்டுப்படுத்துகிறது. இந்த செயல்பாட்டில் ஏதாவது குறை இருந்தால் வகை 1 (Type 1) மற்றும் வகை 2 (Type 2) நீரிழிவு (Diabetes) குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது
வகை -1 நீரிழிவு
திடீரென்று தோன்றும்
பெரும்பாலும் பெரியவர்களை பாதிக்கும்
மெலிந்த உடல் வாகை கொண்டிருப்பர்
வகை -2 நீரிழிவு
படிப்படியாக தோன்றும்
பெரும்பாலும் குழந்தைகளை பாதிக்கும்
பருமனான உடல்வாகை கொண்டிருப்பர்
வகை -1 நீரிழிவு (Type -1 Diabetes) பாதிப்பு எப்படி இருக்கும்?
இதில், உடல் இன்சுலின் உற்பத்திச் செய்யாது. ஏனெனில் இன்சுலின் சுரக்கும் கணையத்தில் உள்ள பீட்டா (Beta) செல்களை நோயெதிர்ப்பு அமைப்பு செயல்படவிடாமல் பாதித்துள்ளது. இதன் விளைவாக, உடல் செல்கள் நுகர்வுக்கு, இரத்த சர்க்கரையிலிருந்து போதுமான சக்தியைப் பெற முடியாது.
கல்லீரல் உடல் செல்களின் மூலம் கொழுப்புச் செல்களை உடைத்து ஆற்றலாக மாற்றுகிறது. இது கீட்டோன்களை (Ketone) உருவாக்குகிறது. காலப்போக்கில், இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கீட்டோன்கள் நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் (Diabetic Ketoacidosis) எனப்படும் உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்துகின்றன.
வகை -2 நீரிழிவு (Type-2 Diabetes) பாதிப்பு எப்படி இருக்கும்?
இந்த வகையில் உடல் செல்கள் இன்சுலின் இரத்தத்திலிருந்து சர்க்கரையை உறிஞ்சும் அந்த செயல்பாடு 'இன்சுலின் உணர்திறன்' ('Insulin sensitive') என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த சிக்னலை உடல்செல்கள் கவனிக்காதபோது (பல்வேறு காரணங்களால்), அவை 'இன்சுலின் எதிர்ப்பு' ('Insulin resistant') ஆகிவிட்டதாக உடல் செல்களுக்கு தகவல் அனுப்பப்படுகிறது.
ஆனால் அதேநேரத்தில் இதை ஈடுசெய்ய, கணையம் மேலும் மேலும் இன்சுலினை சுரக்கிறது. இது ஹைபரின்சுலேமியா (hyperinsulemia) என்று அழைக்கப்படுகிறது. காலப்போக்கில், அதிகப்படியான வேலையால், பீட்டா செல்கள் தேய்மானம் அடைகின்றன. எனவே, இன்சுலின் உற்பத்தியும் படிப்படியாகக் குறைந்து, உயர் இரத்தச் சர்க்கரை அளவை உருவாக்குகிறது. இது டைப் -2 நீரிழிவு குறைபாடு ஆகும்.
கர்ப்ப கால நீரிழிவு (Pregnancy Diabetes)
இது பொதுவாக கர்ப்ப காலத்தில் உயர் ரத்த சர்க்கரை ஏற்படுவதால் வரும் நீரிழிவு ஆகும். இது பெரும்பாலும் மருத்துவரின் அறிவுரைபடி கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
நீரிழிவுக் குறைபாடு உடலில் எந்த உறுப்புகளை பாதிக்கும்?
இதயம்
சிறுநீரகம்
கண்கள்
நரம்பு மண்டலங்கள்
சிறு மற்றும் பெரு ரத்த நாளங்கள் வீக்கம் அடைதல்
கால் பாதம்
நீரிழிவுக் குறைபாடு மக்களுக்கு மிகப்பெரும் அசச்சுறுத்தலை உளவியல் ரீதியாகவும், உடல்நலம் ரீதியாகவும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.
நீரிழிவின் அறிகுறிகள்
அடிக்கடி பசி மற்றும் தாகம் ஏற்படுதல்
எடை இழத்தல்
அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுதல்
கண் மங்கலாக தெரிதல்
குழப்பம் ஏற்படுதல்
உடல் மற்றும் மனம் சோர்வு ஏற்படுதல்
இரட்டை பார்வை உண்டாகுதல்
அடிக்கடி பல் ஈறு, தோளில் நோய்த் தொற்று உண்டாகுதல்
உடம்பில் ஏற்பட்ட ரத்தக்காயம் குணமாக பல காலம் எடுத்து கொள்ளுதல்
அடிக்கடி மனஉளைச்சல் உண்டாகுதல்
கால் மற்றும் உள்ளங்கையில் ஏற்படும் எரிச்சல்கள்
ஆண்களுக்கு விறைப்பு தன்மை குறைதல்
நீர்ச் சமநிலைக் குறைபாடு
நீரிழிவால் ஏற்படும் மோசமான விளைவுகள்
- ரத்த நாளங்கள், நரம்பு மண்டலங்கள் அதன் தொடர்புடைய உறுப்புக்கள் செயலிழப்பது.
- 65% நீரிழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதயம் செயலிழப்பு, மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கின்றன.
- நீரிழிவு குறைபாட்டால் கண்கள் முக்கியமாக பாதிப்படையும். நீரிழிவு ரெட்டினோபதியால் ரத்த நாளங்கள் பாதிப்படைந்து கண்கள் குருடாவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
- நரம்புகளுக்கு ரத்த ஓட்டம் குறைவதால் நரம்பு வலி மற்றும் உணர்ச்சியற்று போகும் நிலை ஏற்படலாம்.
- கால் மற்றும் கால் தொற்றுகள், கால் துண்டித்தல் மற்றும் குடலிறக்கம் மோசமான இரத்த ஓட்டம், திசுக்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நரம்பு சேதம் ஆகியவை ஏற்படுகிறது.
- சிறுநீரக பாதிப்பு (நீரிழிவு நெஃப்ரோபதி) நீரிழிவு நோயாளிகளுக்கு பெரிய ஆபத்தாக இருக்க வாய்ப்பிருக்கிறது
பொதுவான ரத்த சர்க்கரை அளவு
ரத்த சர்க்கரை அளவு - நீரிழிவு இல்லாதவர்களுக்கு (மி.க/ டெசிலிட்டர்)
உணவுக்கு முன் - 72-99
உணவுக்கு 2 மணி நேரம் கழித்து - 80-130
ரத்த சர்க்கரை அளவு - நீரிழிவு நோயாளிகளுக்கு (மி.க/ டெசிலிட்டர்)
உணவுக்கு முன் - 140 க்கும் குறைவாக
உணவுக்கு 2 மணி நேரம் கழித்து - 180 க்கும் அதிகமாக
எவ்வாறு பரிசோதிப்பது?
HbA1C பரிசோதனை:
ரத்தப் பரிசோதனையில் 7 அல்லது 7-க்கு கீழே இருந்தால் இயல்பானது
சிறுநீரகப் பரிசோதனை
வெறும் வயிற்றிலும் சாப்பிட்ட பின்னரும் இரண்டு மணி நேரம் கழித்து சிறுநீர் சாம்பிள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படும்.
நோயின் தாக்கத்தைப் பொறுத்து `+' முதல் `+ + + +' வரை என குறிப்பிடப்படும்
இரத்தப் பரிசோதனை
வெறும் வயிற்றிலும், காலை உணவுக்குப் பின்னரும் இரண்டு மணி நேரம் கழித்து இரத்த சாம்பிள் எடுக்கப்பட்டு குளுக்கோமீட்டர் கருவியில் பரிசோதனை செய்யப்படும்
180 க்கும் அதிகமாக அதிகமாக இருந்தால் நீரிழிவு எனப்படுகிறது.
எப்பொழுது மருத்துவரை சந்திக்கலாம்?
மேற்கண்ட ஆய்வக சோதனையில் உங்கள் ரத்த சர்க்கரை அளவு முடிவுகளைக் கொண்டு மருத்துவரை சந்தித்து அவரது பரிந்துரைப்படி சிகிச்சை முறைகளை தொடரலாம்.
இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை சந்திப்பது அவசியம்
- கண்கள் மங்கலாக தெரிய ஆரம்பிப்பது
- ஐந்து நாட்களுக்கு மேல் நீங்கள் ஆன்டி செப்டிக் கிரீம் உபயோகித்தும் உங்கள் காயம் ஆறாமல் இருப்பது
- கர்ப்ப காலத்தில் பெண்கள் கண்டிப்பாக பரிசோதிக்க வேண்டும்
- கால் பாத பகுதியில் உணர்ச்சி திறன் இழப்பது
- கை, கால், தாடை, மார்பு மற்றும் கணுக்கால் பகுதியில் வலி மற்றும் வீக்கம் உண்டாகுதல்
- தோல் நோய்கள் மற்றும் தோல் நிறமிழந்து போகுதல்
இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து மருத்துவரின் பரிந்துரையின்படி சிகிச்சை முறைகளை பின்பற்றுதல் அவசியமாகும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2