தினமும் கேரட் ஜூஸ் குடித்தால்...என்ன ஆகுமாம்..? பார்க்கலாம் வாங்க..!

Carrot Uses in Tamil-கேரட்டில் நிறைய சத்து இருக்கிறது என்பது மட்டுமே தெரியும். இவ்வளவு நன்மைகள் இருக்கா என்பதை தெரிஞ்சிக்குங்க.

Update: 2022-08-25 12:06 GMT

Carrot Uses in Tamil

Carrot Uses in Tamil-பூமிக்கடியில் விளையும் கிழங்கு வகைகளில் பல சத்துக்களைக் கொண்ட, உடலுக்கு நன்மை புரிகிற ஒரு காய் வகைதான் கேரட். இந்த கேரட்டை பச்சையாகவும், சமைத்தும் உண்ணலாம். ஜூஸ் செய்தும் குடிக்கலாம். கேரட்டை ஜூஸாக குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம் வாங்க.

கேரட் ஜூஸ் பயன்கள்

எலும்பு உறுதியாகிறது

வயதாகும் போது மனிதர்கள் அனைவரின் எலும்புகளும் உறுதித்தன்மையை இழக்கின்றன. தினந்தோறும் கேரட் ஜூஸ் குடித்தால் எலும்புகள் வலுவடைந்து, அதன் உறுதியும் அதிகரிக்கும்.

காயங்கள் ஆறும்

உடலின் வெளிப்பகுதியில் பல்வேறு காரணங்களால் காயங்கள் ஏற்படுகின்றன. இது தானாக ஆறும் என்றாலும் கேரட் ஜூஸ் குடிப்பவர்களுக்கு வெகு விரைவில் காயங்கள் ஆறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கொழுப்பு

உண்ணும் உணவில் அதிகளவு கொலஸ்ட்ரால் சேருவது உடலநலத்திற்கு தீங்கு ஏற்படும். தினமும் கேரட் ஜூஸ் குடித்தால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் சேர்வதை கட்டுக்குள் வைக்கிறது.

ரத்தம் உறைதல்

ரத்த காயங்கள் ஏற்படும் போது ரத்தம் விரைவாக உறைவதற்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் புரதம் சரியான அளவில் இருக்க வேண்டும். கேரட் ஜூஸ் குடித்து வந்தால் இதன் அளவு சமநிலையில் வைக்கப்படுகிறது.

புற்று நோய்

தினந்தோறும் கேரட் ஜூஸ் குடிப்பவர்களுக்கு உடலிலுள்ள செல்களின் ஆயுள்தன்மை நீட்டிக்கப்படுகிறது. இதன் காரணமாக அவர்களின் உடலில் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.


கண்பார்வை

கேரட்டில், கண் பார்வை சிறப்பாக இருப்பதற்கான வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. கேரட் ஜூஸ் தினமும் குடித்து வந்தால் கண்பார்வை மேம்படும். கண்புரை நோய் ஏற்படுவது தடுக்கப்படும்.

மாதவிடாய்

பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் காரணமாக சிலருக்கு அதிக வயிற்று வலி மற்றும் ரத்தப்போக்கு ஏற்படுகிறது. அவ்வாறு அவதிப் படுபவர்கள் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

வளர்சிதை மாற்றம்

கேரட்டில் பல சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. இதிலுள்ள மூலப்பொருட்கள் உடல்செல்களின் வளர்சிதை மாற்றத்திறனை சமநிலைப்படுத்தி, உடலின் சீரான இயக்கத்திற்கும், உடல் நலத்திற்கும் உதவுகிறது.

தொற்று நோய்கள்

தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கேரட் ஜூஸ் குடிப்பது சிறந்தது. இதிலுள்ள வேதிப்பொருட்கள் ரத்தத்தில் நோய்யெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, தொற்று வியாதிகளை விரைவாக குணப்படுத்துகிறது.

கல்லீரல்

உடலில் இருக்கும் கல்லீரல் உணவுகளில் இருக்கும் விஷத்தன்மைகளை முறித்து, உடலுக்கு நன்மை செய்கிறது. தினமும் கேரட் ஜூஸ் குடிப்பது கல்லீரலின் நலத்திற்கும் அதன் சிறந்த செயல்பாட்டிற்கும் சிறந்தது.

பற்கள்

வாய்க்குள் இருக்கும் பற்கள் உணவை நன்கு மென்று சாப்பிட உதவுகிறது. பற்கள் சொத்தையாவது, ஈறுகளில் வீக்கம், மற்றும் வாய் துர்நாற்றம் போன்றவை கேரட் ஜூஸ் குடிப்பவர்களுக்கு ஏற்படுவதில்லை.

குழந்தைகள்


ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கேரட் ஜூஸை தினந்தோறும் குடிக்கக் கொடுப்பதால் குழந்தைகளின் வளர்ச்சி மேம்படுகிறது. அடிக்கடி நோய்தாக்குதலுக்கு உட்படுவதும் குறைகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News