கொடியிடை வேணுமா..? அப்படின்னா பப்பரை சாப்பிடுங்க..! பெண்களே உங்களுக்கு தான்..!

Buckwheat Millet in Tamil-பப்பரை என்பது மர கோதுமை என்றும் அழைக்கப்படுகிறது. இதில் ஏராளமான ஆரோக்ய நன்மைகள் உள்ளன. அதை தெரிஞ்சிக்கலாம், வாங்க.;

Update: 2023-02-01 12:37 GMT

Buckwheat Millet in Tamil

Buckwheat Millet in Tamil-இது மரகோதுமை அல்லது பப்பரை என்று அழைக்கப்படுகிறது. முழு தானியங்களில் மிகவும் சத்து மிகுந்தது. இது உடல் எடையை குறைப்பதிலும், இதய ஆரோக்கியத்திற்கும்,  நீரிழிவை கட்டுப்படுத்தவும் என ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ளன.

இந்த பப்பரை உணவு வகைகள் சூடோசெரல் என்று அழைக்கப்படுகிறது. இவைகள் தானிய வகைகளில் அடங்கும் ஒரு உணவுப்பொருளாகும். இதே போல அமராந்த், க்யூனா போன்ற தானியங்களும் சூடேசெரலைச் சார்ந்த வகையினம்தான்.

வகைகள்

இந்த பப்பரையில் இரண்டு வகைகள் காணப்படுகின்றன. ஒன்று பொதுவான பப்பரை, மற்றொன்று டார்டரி வகை. ஓட்ஸ், கோதுமை, பார்லி, கம்பு போன்ற தானியங்கள் போலவே பப்பரையிலும் ஆன்டி ஆக்ஸிடன்கள் அதிகமாக உள்ளன.

Buckwheat Millet in Tamil

பப்பரை ஊட்டச்சத்து அளவுகள்

100 கிராம் பப்பரையில் 9.75 கிராம் தண்ணீர், 343கிலோ கலோரி எனர்ஜி அடங்கியுள்ளது.

புரோட்டீன் - 13.25 கிராம்

கொழுப்பு - 3.40 கிராம்

கார்போஹைட்ரேட் - 71.50 கிராம்

நார்ச்சத்து - 10 கிராம்

கால்சியம் - 18 மில்லி கிராம்

இரும்புச் சத்து - 2.20 மில்லி கிராம்

மக்னீசியம் - 231 மில்லி கிராம்

பாஸ்பரஸ் - 347 மில்லி கிராம்

பொட்டாசியம் - 460 மில்லி கிராம்

சோடியம் - 1மில்லி கிராம்

ஜிங்க் - 2.40 மில்லி கிராம்

தயமின் - 0.101 மில்லி கிராம் அளவு

ரிபோப்ளவின் - 0.425 மில்லி கிராம்

நியசின் - 7.020 மில்லி கிராம்

விட்டமின் பி6-0.210 மில்லி கிராம்

போலேட் - 30 மைக்ரோ கிராம்.

ஆரோக்ய நன்மைகள்

Buckwheat Millet in Tamil

இதய ஆரோக்யம்

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி பப்பரை கெட்ட கொழுப்பை நீக்கி இதய அழற்சி, இதய அடைப்பு போன்ற பாதிப்புகள் வராமல் தடுக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் இதய ஆரோக்யத்திற்கு உதவுகிறது. இதனால் இதய நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. இதில் ரூட்டின் என்ற பைட்டோ கெமிக்கல் உள்ளது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்கள் இதயத்தை ஆரோக்யமாக வைக்கவும், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது.

எடை குறைய

பப்பரையில் ஏராளமான புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளன. இதை உணவாக எடுத்துக் கொள்ளும் போது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுகிறது. இதை அதிகமாக உண்ணவும் முடியாது. இதனால் உடல் எடை வெகுவாகக் குறையும்.

சீரண சக்திமேம்படும்

இதிலுள்ள நார்ச்சத்துகள் மலம் கழித்தலை சுலபமாக்குகிறது. வயிற்று சம்பந்தமான பிரச்னைகள், வயிற்றுப் புற்று நோய், குடல் புற்று நோய் வராமல் தடுத்து வயிற்றில் உள்ள உறுப்புகளை ஆரோக்யமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் ஃபுட் மைக்ரோபயாலஜி அறிவிப்புப் படி இது குடலின் pH அளவை சமநிலைப்படுத்துகிறது என்று தெரியவந்துள்ளது.

Buckwheat Millet in Tamil

நீரிழிவை தடுக்கிறது

அமெரிக்கன் டயாபெட்டீஸ் அசோசியேஷன் கூற்றுப்படி முழுதானியங்களில் அதிகளவு கார்போஹைட்ரேட் உள்ளது. இந்த வகையான கார்போஹைட்ரேட் சத்துகள் மெதுவாக உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் கலப்பதால் உடனே சர்க்கரை அளவு அதிகமாவது தடுக்கப்படுகிறது. இந்த பப்பரையில் ரூட்டின் என்ற பைட்டோ கெமிக்கல் உள்ளது. இது இன்சுலின் சுரப்பை மேம்படுத்துகிறது. மேலும் இன்சுலின் தடைபடுவதை சரி செய்கிறது. இதன்மூலம் நீரிழிவு குறைபாடு தடுக்கபப்டுகிறது.

புற்றுநோய் பாதிப்பு நீங்கும்

இதில் ரூட்டின், குர்செடின் போன்ற முக்கியமான இயற்கை வேதிப் பொருட்கள் அடங்கியுள்ளன. இந்த ஆன்டி ஆக்ஸிடன்கள் புற்றுநோய் வரும் அபாயத்தை குறைக்கிறது. இது டிஎன்ஏ பிறழ்ச்சியை தடுத்து புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கிறது.

பப்பரை பாதுகாப்பான உணவு

பப்பரையில் எந்த வித க்ளூட்டன் தன்மையும் இல்லை. எனவே,இதை உண்பவர்களுக்கு செலியாக் நோய் வராமல் பாதுகாக்கிறது. இது போக மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, வயிறு மந்தம் மற்றும் குடல் கசிவு போன்ற பிரச்னைகள் வராமலும் காக்கிறது.

பக்க விளைவுகள்

சிலருக்கு பப்பரை ஒத்துக் கொள்ளாமல் அழற்சியை ஏற்படுத்தும். வாயில் வீக்கம், படை, சரும வடுக்கள் போன்றவை ஏற்படலாம்.

Buckwheat Millet in Tamil

எப்படி உண்ணுவது?

பப்பரையை கீழ்க்கண்டவாறு சமைக்க வேண்டும். முதலில் பப்பரையை தண்ணீர் விட்டு நன்றாக கழுவிக் கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் மிதமான தணலில் சோறு சமைப்பதுபோல சமைக்கவும். இப்பொழுது பப்பரை நன்றாக வெந்துவிடும். பின்னர் இதை உண்ணலாம்.

முளைக்கட்டிய பப்பரை பயிறு

உலர்ந்த பப்பரை 30 நிமிடங்கள் முதல் 6மணி நேரம் வரை ஊற வைக்கவும். பிறகு நன்றாக கழுவி விட்டு தண்ணீரை வடிகட்டி கொள்ளுங்கள். 1-2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் தெளித்து 2-3 நாட்கள் துணியில் கட்டி வைக்கவும். பப்பரை நன்றாக முளைவிட்டிருக்கும். இந்த முளைக்கட்டிய பயிரை சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் கிடைக்கும்.

மற்ற உணவுகள் 

இந்த பப்பரையை மாவாக்கி கோதுமையைப்போல வெவ்வேறு உணவுகளை தயாரிக்கமுடியும். தோசை மற்றும் முறுக்கு போன்றவைகளும், முழு தானியமாக சோறு, பொங்கல் மற்றும் கிச்சடி  போன்றவை செய்யலாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News