benefits of cardamom-அடடா..ஏலக்காய்..! உனக்குள் இவ்ளோவா..? தெரிஞ்சுக்கங்க..!

benefits of cardamom-ஏலக்காய் வாசனைக்கு மட்டுமே என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. அதன் மருத்துவ பயன்களை படீங்க.

Update: 2023-02-07 07:48 GMT

benefits of cardamom-ஏலக்காய் மருத்துவ பயன்கள் 

benefits of cardamom-பொதுவாகவே, ஏலக்காய் என்றால் நாம் எல்லோருமே வாசனைப்பொருளாக மட்டுமே பார்க்கிறோம். ஆனால், அதில் எவ்வளவு மருத்துவ பலன்கள் உள்ளது என்பதை நாம் அறிவோம் வாருங்கள்.


ஏலக்காய் எப்படி சாப்பிடுவது?

ஏலக்காயை ஒரு நாளைக்கு 2-3 முறை உட்கொள்வது நன்மை பயக்கும். இரவு தூங்கும் முன் வெதுவெதுப்பான நீரில் 2 ஏலக்காயை சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கம் வரும். நன்றாக விருந்து சாப்பாட்டை ரசித்து ருசித்து சாப்பிட்ட பிறகு வாயில் ஒரு ஏலக்காயை போட்டு மென்று சாப்பிட்டால், அவை வலுவான பூண்டு அல்லது வெங்காய வாசனையை கூட அகற்ற உதவுகின்றன

சர்க்கரை அளவை குறைக்கும்

ஏலக்காய் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தும். அதேபோல ஆஸ்துமா நோயாளிகளுக்கும் ஏற்றது. சுவாசக் கோளாறுகளை போக்கும் சக்தியும் ஏலக்காய்க்கு உள்ளது.


வாந்தி கட்டுப்படுத்த

சிலருக்கு பேருந்துகளில் பயணம் செய்தால் தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படும். அவ்வாறு ஏற்படுபவர்களுக்கு இரண்டு ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிடச் சொல்லவேண்டும். அவ்வாறு உலக்கையை சாப்பிட்டால் வாந்தி வருவது, தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் மாறிவிடும். ஏலக்காய் வேறு தொந்தரவையும் தராது. அதனால் சாப்பிடக்கொடுக்கலாம்.

benefits of cardamom


வாய் துர்நாற்றம் மற்றும் ஆரோக்யம்

ஏலக்காய் வாய் சுகாதாரத்திற்கும், வாய் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. பல் வலி, ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை மற்றும் வாய் துர்நாற்றம் போன்றவைகள் வராமல் பாதுகாக்கலாம்.

சூயிங்கத்துக்கு பதில் ஏலக்காய்

சூ‌யி‌ங்க‌ம், ‌சி‌க்லெ‌ட், சா‌க்லே‌ட் போன்றவைகளை வா‌யி‌ல் போ‌ட்டு அசை போடுவதா‌ல் எ‌ந்த‌ப் பயனு‌ம் இ‌ல்லை. அத‌ற்கு‌‌ப் ப‌திலாக ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிடுவது நல்லது.


ஜலதோஷம்

ஜலதோஷம், இருமல், தொடர்ச்சியான தும்மலால் அவதிப்படுகிறவர்களுக்கு ஏலக்காய் கஷாயம் வைத்து குடிக்கக் கொடுத்தால் ஜலதோஷம் இருமல் போன்றவை நிற்கும்.

benefits of cardamom

ஏலக்காய் எண்ணெய்

ஏலக்காயில் தயாரிக்கப்படும் எண்ணெய் சருமத்திற்கு சிறந்த நன்மைகளித்தரும். குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் எண்ணெயில் சிறிதளவு கலந்து பயன்படுத்தலாம். 


அஜீரணத்துக்கு

அஜீரணத்தால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிடலாம். நல்ல பலன் கிடைக்கும். அதேபோல ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

benefits of cardamom

பசி எடுப்பதற்கு

ப‌சியே ஏ‌ற்படாமல், சா‌ப்‌பிட ‌‌முடியாமல் தவிப்பவர்களுக்கு ஏலக்காய் சிறந்த மருந்து. ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்குத் தொடங்கும். அதனால், நன்றாக சாப்பிட முடியும்.

நெஞ்சு சளிக்கு

நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் வ‌ந்து இரு‌மி இருமி வ‌யி‌ற்றுவ‌லி வ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் கூட ஏல‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமையு‌ம்.

Tags:    

Similar News