Avocado Meaning in Tamil Translation-'பக்கோடா' சாப்பிட்டு இருப்பீங்க..! அது என்ன 'அவோகேடோ பழம்'..? தெரிஞ்சுக்கங்க..!

Avocado Meaning in Tamil Translation-அவோகேடோ பழத்தை தமிழில் வெண்ணைப் பழம் அதாவது பட்டர் ஃப்ரூட் என்று அழைக்கிறோம். அது ஏராளமான ஆரோக்ய நன்மைகளைக்கொண்ட பழமாகும்.

Update: 2023-02-11 10:14 GMT

avocado meaning in tamil-பட்டர் ஃப்ரூட் எனப்படும் அவோகேடோ பழத்தின் நன்மைகள்.(கோப்பு படம்)

Avocado Meaning in Tamil Translation

பொதுவாகவே மனித உடல் ஆரோக்யத்திற்கு பெரிதும் துணை நிற்பவை பழங்கள். பழங்கள் உடனடியாக உடலில் புத்துணர்வைத் தரக்கூடியன. அந்த வகையில் மனிதனின் ஆரோக்யத்தை மேம்படுத்துவதில் மிகச் சிறந்த பங்கு வகிப்பது அவோகேடோ பழம். இந்த அவோகேடோ பலத்தை தமிழில் வெண்ணைப் பழம் என்று அழைக்கப்படுகிறது. இதில் நல்ல கொழுப்புகள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் 'சி', வைட்டமின் 'கே1', வைட்டமின் 'பி6' மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அடங்கியுள்ளன.

பட்டர் ஃப்ரூட்

தமிழ்நாட்டில் அந்த பழத்தை பட்டர் ஃப்ரூட் என்று அழைப்பது வழக்கம். தமிழகத்தின் மலைப்பகுதிகளில் இவை விளைகிறது. பச்சை மற்றும் அடர்த்தியான நீல நிறத்தில் விளைகின்றன. சதைப்பற்று மிக்க இந்த பழத்தை பால் மற்றும் சுவைக்கு சர்க்கரை, நட்டுச் சர்க்கரை, தேன் ஏதாவது ஒன்றைக்கலந்து கெட்டியாக ஃப்ரூட் சாலட் போல சாப்பிடலாம். அட்டகாச சுவையில் இன்னும் வேண்டும் எனத் தோன்றும்.

மூட்டு வலி

மூட்டு வழியால் அவஸ்தைப்படுபவர்கள் அவோகேடோ பழத்தை சாப்பிட்டால் அவர்களுக்கு மூட்டுவலி இல்லாமல் போகும். வயதாகிவிட்டால் ஏற்படும் மூட்டுவலி எலும்பு தேய்மானத்தால் ஏற்படுவதாகும். அதற்கும் அவோகேடோ பழம் உட்கொண்டால் மூட்டுப்பகுதிகளில் எலும்பு தேய்மானம் வராமல் பாதுகாக்கும்.

எண்ணெய்ச் சத்து

அவோகேடோ பழத்தில் எண்ணெய்ச் சத்து மிகுந்த இருக்கிறது. இதன் சதைப்பகுதி வைட்டமின், புரதம் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்தது. வறண்ட சருமம் உடையவர்களுக்கு அவோகேடோ ஒரு வரப் பிரசாதம். எண்ணெய்ச்சத்து மிகுந்த அவோகேடோ அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் முக்கிய இடம் பிடித்துள்ளது.

சிறுநீரக கற்கள்

சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்னைகளை தீர்ப்பதற்கு அவோகேடோ பழத்தை சாப்பிடலாம். இது சிறுநீரை அதிகளவில் உற்பத்திசெய்து சிறுநீர்ப்பாதையில் உள்ள கற்களின் அடைப்பை நீக்குகின்றது.

சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்

அவோகேடோ பழம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினைக் கட்டுப்படுத்துகின்றது. செரிமான பிரச்னைகளையும் சரிசெய்யக்கூடியது. கெட்ட கொழுப்பை குறைப்பதில் அவோகேடோ பழம் முக்கிய பங்கு வகிப்பதனால் உடல்நலம் மற்றும் உடற்பருமன் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது. இதில் பொட்டாசியம் சத்து அதிகம் இருப்பதால், இரத்த அழுத்த பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு மிகச் சிறந்ததாகும்.

கெட்ட கொழுப்பு குறையும்

மேலும் அவோகேடோ பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்பு குறைந்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.

நோயெதிர்ப்பு சக்தி

அவோகேடோ பழத்திலுள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

புற்றுநோய்ப் போன்ற தீர்க்கமுடியாத நோய் தாக்கியவர்களுக்கு அவோகேடோ பழம் அதிகமாக கொடுத்தால் அது நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்கும். இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்தும்.

அவோகேடோ பழத்திலுள்ள சேர்மங்கள் ஆர்த்ரிடிஸ் வலி மற்றும் இதர எலும்பு பிரச்னைகளை சரிசெய்வதாக ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே எலும்புகள் வலிமையடைகின்றன.

கண்களின் பார்வைத் திறன், புரை வளர்தல் ஆகியவை கட்டுப்படுத்தப்படுவதால், அவோகேடோ மிகவும் பயனுள்ள பழமாக இருக்கின்றது.

சிறுநீரக பிரச்னையால் அவதிப்படாமல் இருக்கவும், தெளிவான கண்பார்வைக்கும் அவகோடா பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News