Aali vithai benefits in tamil-நன்மைகளை அள்ளித்தரும் ஆளிவிதை..! தெரிஞ்சுக்கங்க..!
ஆளிவிதை பல மருத்துவ நன்மைகள் நிறைந்த விதையாகும். குறிப்பாக பெண்களுக்கு இது நன்மை அளிக்கும் மருத்துவ பொருளாக விளங்குகிறது.;
Aali vithai benefits in tamil
ஆளி விதைகள் என்பது, ஆளி செடியில் இருந்து பெறப்படும் சிறிய விதைகளாகும். இவை பழுப்பு அல்லது தங்க நிறத்தில் காணப்படுகிறன. ஆளி விதைகளில் பல ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. மேலும் இது நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றது.
ஆளி விதைகளில் உள்ள மருத்துவ முக்கியத்துவம் காரணமாக, இவை நம் உடலில் ஆரோக்யமான விளைவுகள் உண்டாக வழிவகுக்கிறது.ஆளி விதைகளின் நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம் வாங்க.
Aali vithai benefits in tamil
ஆளி விதையில் உள்ள ஊட்டச்சத்துகள் யாவை?
100 கிராம் ஆளிவிதையில்
கலோரிகள் – 530
நல்ல கொழுப்பு – 37 கிராம்,
நார்ச்சத்து – 28 கிராம்,
புரதச்சத்து – 20 கிராம்.
ஆளிவிதையில் லிக்னன்ஸ், நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலம், போன்ற சத்துக்கள் உள்ளன.
மேலும் ஆளி விதையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை நிறைந்துள்ளன. இதில் அதிக அளவில் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. ஆளி விதை செறிந்த நார்ச்சத்துகள் மற்றும் தாதுக்களின் உறைவிடமாக உள்ளது. ஆளி விதையில் கால்சியம், மாங்கனீசு, மெக்னீசியம், தாமிரம், சோடியம், பொட்டாசியம், இரும்பு, நியாசின் மற்றும் ஃபோலேட்டுகள் உள்ளன.
Aali vithai benefits in tamil
ஆளி விதையில் உள்ள நன்மைகள்:
ஆளி விதைகளின் ஆரோக்ய நன்மைகள் கீழே தரப்பட்டுள்ளன. அவையாவன :
உடல் எடையைக் குறைக்கிறது :
இன்றைய இளைஞர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து மடிக்கணினி, மொபைல் மற்றும் பல மின்னணு சாதனங்களில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். மேலும், கட்டுப்பாடற்ற உணவுப் பழக்கம் மற்றும் உடலில் அதிக செயல்பாடுகள் இல்லாததால் உடை எடை அதிகரிக்கிறது. இத்தகைய சூழ்நிலைகளில் ஆளி விதை பயனுள்ளதாக அமைகிறது. இவற்றில் அதிக அளவில் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. இதனால் இவை உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன.
Aali vithai benefits in tamil
இரத்த அழுத்தம் குறைய உதவுகிறது
மன அழுத்தம் காரணமாக, இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இவை இதயத்தை நேரடியாக பாதிக்கிறது மேலும் இதயம் தொடர்பான நோய்களை உருவாக்க வழிவகுக்கிறது. ஆளி விதை உட்கொள்வதால் இத்தகைய சந்தர்ப்பங்களில் பயனுள்ளதாக அமைகிறது. ஆளி விதையில் ஃபைபர், லினோலிக் அமிலம் மற்றும் லைஃப்லைன் ஆகியவை உள்ளன. இவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
Aali vithai benefits in tamil
நீரிழிவுக்கு பயனாகிறது :
ஆளி விதைகளில் நார்ச்சத்து உள்ளது. இவை செரிமானத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவுகிறது. நீரிழிவு வகை 1 க்கு சிகிச்சையளிக்க ஆளி விதைகள் பயனுள்ளதாக அமைகிறது
நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது :
ஆளி விதைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி உள்ளன. இவை உடலில் உண்டாகும் தொற்றுநோய்களை எதிர்த்து போராட உதவுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுத்தப்படுகிறது.
Aali vithai benefits in tamil
சளி மற்றும் இருமலுக்கு :
காலநிலை மாற்றங்கள் காரணமாக சளி மற்றும் இருமல் ஏற்படுகின்றது. ஆளி விதை ஆன்ட்டி அழற்சி மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. ஆளி விதைகள் சேர்த்த மூலிகை டீ சளியைக் குணப்படுத்த பயனுள்ளதாக இருக்கிறது.
கொழுப்பைக் குறைக்கிறது :
ஆளி விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி–ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகின்றன. கொழுப்பு குறைவதால் இதயத்தை ஆரோக்யமாக பராமரிக்க உதவுகின்றன.
Aali vithai benefits in tamil
சரும ஆரோக்யம்:
ஆளி விதை எண்ணெய் முகப்பரு, சொரியாசிஸ் போன்ற சரும பிரச்னைகளை சரிசெய்ய உதவுகிறது. பாதிக்கப்பட்டப் பகுதியில் ஆளி விதை எண்ணெயை தினமும் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கண் ஆரோக்யம்:
ஆளி விதையை தினமும் சாப்பிட்டு வந்தால், கண்களில் ஏற்படும் வறட்சியைக் குறைக்கும். மேலும் ஆளி விதையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால், கண் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களுள் ஒன்றான மாகுலர் திசு சிதைவு ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
ஆளி விதையின் பக்க விளைவுகள்
ஆளி விதை உடல் ஆரோக்யத்திற்கு நன்மை பயக்கிறது. எனினும், இதில் சில குறைபாடுகளும் உள்ளன. ஆளி விதைகளின் பயன்பாட்டால் உண்டாகும் சில பக்க விளைவுகள் கீழே தரப்பட்டுள்ளன. அவையாவன:-
1. இதை உட்கொள்ளும்போது உடல் வெப்பநிலையில் மாறுபாடு ஏற்படுகிறது என்பதால், கர்ப்பிணிப் பெண்கள் ஆளி விதைகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இது கருப்பையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
2. மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு உள்ள பெண்கள் ஆளி விதைகளை உட்கொள்ளக்கூடாது.
3. மார்பகப் புற்றுநோய் உள்ளவர்களுக்கு ஆளி விதைகள் தீங்கு விளைவிக்கிறது.
4. ஆளிவிதைக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் அவற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
5. ஆளி விதைகள் உட்கொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
Aali vithai benefits in tamil
பொதுவான எச்சரிக்கை :
இந்த கட்டுரை வாசர்களுக்கு தகவல்தரும் ஒரு அறிவு வளர்ச்சிக்கான கட்டுரை மட்டுமே. இது மருத்துவ பயன்பாட்டுக்கான பரிந்துரை அல்ல. பொதுவாக எந்த மருந்தோ அல்லது ஆளி போன்ற விதைகளாக இருந்தாலும் மருத்துவரின் பரிந்துரையில் எடுத்துக்கொள்வதே பாதுகாப்பானது.