6 Month Baby Food Chart in Tamil-ஆறுமாத குழந்தைக்கு என்ன திட உணவுகளை தரலாம்?

பிறந்து ஆறுமாதம் ஆன குழந்தைகளுக்கு மென்மையான திட உணவுகளைக் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டிய உணவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.

Update: 2023-12-25 09:25 GMT

6 month baby food chart in tamil-ஆறு மாத குழந்தைகளுக்கான உணவுப்பட்டியல் (கோப்பு படம்)

6 Month Baby Food Chart in Tamil

பெரும்பாலான தாய்மார்களுக்கு தாய்ப்பாலுக்கு பிறகு குழந்தைக்கு (6 months Babies Food chart) என்ன தர வேண்டும் என்பதில் எப்போதும் குழப்பமே நிலவும்.

6 மாதத்துக்குள் உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பாலை விட சிறந்த உணவு எதுவும் இல்லை.

சில குழந்தைகள் 5 மாத முடிந்த உடனே திட உணவுக்குத் தயாராகி விடுவார்கள். ஆனால், திட உணவுக்கு குழந்தைகள் தயாரா என்பதைக் கண்டுபிடிப்பது முக்கியம்.

உங்கள் குழந்தை திட உணவுக்கு தயாரா என எப்படி கண்டுபிடிப்பது?

  • தாய்ப்பால் கொடுத்த பிறகு அழுது கொண்டு இருப்பது, கைகளை சூப்புவது.
  • தலை சரியாக நின்றுவிடுதல்.
  • உணவைப் பார்த்ததும் சப்புக் கொட்டுவது, உணவின் மீது ஆர்வம் காட்டுவது.
  • நல்ல, சுத்தமான ஸ்பூனை குழந்தையின் வாயில் வைத்துப் பாருங்கள். குழந்தையால் அந்த ஸ்பூனை சப்ப முடிகிறதா… பிடிக்க முடிகிறதா..

எனில் குழந்தை தயாராக இருக்கிறது என்பது பொருள். இந்த காலகட்டத்தில் நீங்கள் மென்மையான திட உணவை சிறிதளவு கோக்கத்தொடங்கலாம்.

பிறந்த குழந்தைக்கு 6 மாதம் ஆனதும் தாய்ப்பாலுடன் சேர்த்து ஊட்டச்சத்து நிறைந்த திட உணவுகளையும் கொடுக்கலாம். 6 மாத பச்சிளம் குழந்தைக்கு பற்கள் முளைச்சிருக்காது என்பதால் ஜூஸ், கூழ், சூப்பாக கொடுக்கலாம். குழந்தைக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை அறிமுகப்படுத்துவதோடு, ஸ்பூன் எப்படி சாப்பிடுவது, எப்படி மென்று விழுங்குவது என்றும் கற்றுக்கொடுக்கலாம்.

6 Month Baby Food Chart in Tamil

பிறந்ததில் இருந்து தாய்ப்பாலையே சுவைத்துக் கொண்டிருந்த குழந்தைக்கு முதன் முறையாக வேறு சுவையை உணரத் தொடங்குகிறது. இந்த சமயத்தில் அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை கொடுப்பதில் மும்பரமாக இருக்க வேண்டும். குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து திட உணவை கொடுப்பதன் மூலம் நாட்பட்ட நோய்கள், அலர்ஜி, வயிற்று உபாதைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

6 Month Baby Food Chart in Tamil

குழந்தைக்கு கழுத்து ஸ்டெடியா நின்ற பிறகு திட உணவுகளை கொடுக்கலாம். ஆனால், அவர்கள் விழுங்கும் அளவிற்கு மிகவும் மென்மையான உணவாக இருக்க வேண்டும். எனவே, மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுக் கொள்வது நல்லது. இப்போது 6 மாத குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவுகளை பற்றி பார்க்கலாம்.

திட உணவுகளை கொடுக்கும்போது நினைவில் கொள்ள வேண்டியவை:

திட உணவுகள் கொடுத்தாலும் அவ்வப்போது தாய்ப்பால் அல்லது ஃபார்முலா பால் காலையிலும் இரவு தூங்கும்போதும் கொடுக்கலாம்.

6 Month Baby Food Chart in Tamil

  • குழந்தையை கட்டாயப்படுத்தி உணவை ஊட்டக் கூடாது.
  • குழந்தை உணவு வேண்டாம் என்று கழுத்தையோ முகத்தையோ திருப்பினால் உணவைக் கொடுப்பதை நிறுத்திவிட வேண்டும்.
  • திட உணவுகளை கொடுப்பதற்கு மதியம் 12 மற்றும் மாலை 4 மணி சரியான நேரம்.
  • உணவு ஊட்டும் போது விளையாட்டு காண்பிக்காமல், குழந்தையிடம் பேசியபடியே உணவை ஊட்டுங்கள்.

6 Month Baby Food Chart in Tamil

  • குழந்தை கையில் உணவை பிடிக்க ஆர்வம் காட்டினால், நீங்கள் கைகளில் பிடித்தபடியே, குழந்தை உணவை வாயில் வைத்து சாப்பிடக் கொடுங்கள்.
  • குழந்தைக்கு எப்போது உணவு ஊட்டினாலும் மூன்று நாள் விதியை கடைப்பிடிக்க வேண்டும்.
















 


 


 


 


 


 


 


 


Tags:    

Similar News