கோவை மைவி 3 ஏட்ஸ் நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்திடம் போலீசார் விசாரணை

கோவை சைபர் கிரைம் காவல் பிரிவில் இன்று விசாரணைக்கு தனது வழக்கறிஞர்களுடன் சக்தி ஆனந்தன் இன்று பிற்பகல் ஆஜரானார்.;

Update: 2024-02-05 11:39 GMT

விசாரணைக்கு ஆஜரான சக்தி ஆனந்த்.

மைவி3 ஏட்ஸ் என்ற செயலியை சக்தி ஆனந்தன் என்பவர் நடத்தி வருகிறார். இதில் தினமும் 2 மணி நேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதில் 360 ரூபாய் முதல் ஒரு இலட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வரை உள்ள பல்வேறு பிரிவுகளில் பணம் செலுத்தி உறுப்பினராக சேர முடியும் எனவும், தினசரி மொபைல் போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் 5 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் இலட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உட்பட நாடு முழுவதும் லட்சகணக்கானோர் இதில் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரைகளை வழங்குவது சட்டத்திற்கு புறம்பானது எனவும், தினசரி விளம்பரம் பார்ப்பதால் அதிக வருமானம் பார்க்கலாம் என ஆசைக்காட்டி பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை வசூலித்து வரும் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறை உதவி ஆய்வாளர் முத்து புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அந்நிறுவனத்தின் மீது சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து விசாரணை மேற்கொள்ள நேரில் ஆஜராகுமாறு, மை வி3 ஏட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த்திற்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

இந்நிலையில் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சைபர் கிரைம் காவல் பிரிவில் இன்று விசாரணைக்கு தனது வழகறிஞர்களுடன் சக்தி ஆனந்தனன் இன்று பிற்பகல் ஆஜரானார். அவரிடம் கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் துறையினர் தொடர்ந்து விசா்ணை நடத்தி வருகின்ற்னர் அவரிடம் பணபரிவர்த்தனைகள் தொடர்பாகவும், முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்கப்படுவது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

Tags:    

Similar News