செங்கோட்டை பெட்ரோல் பங்கில் திருடிய நபர் சிசிடிவி கேமரா மூலம் கைது

பெட்ரோல் பங்கில் திருட்டில் ஈடுபட்ட நபரை சிசிடிவி காட்சி மூலம் கண்டறிந்து காவல்துறையினர் கைது செய்தனர்;

Update: 2024-10-11 12:15 GMT

காவல்துறையால் கைது செய்யப்பட்ட முத்துக்குமார்.

செங்கோட்டை பெட்ரோல் பங்கில் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மகாதேவ் அய்யர் பெட்ரோல் பல்க் செங்கோட்டை வனத்துறை சோதனை சாவடி அருகே இயங்கி வருகிறது. மேற்படி பங்க் அலுவலகத்தில் வைத்திருந்த பணம் ஒரு லட்சம் பணம் திருடு போனதாக உரிமையாளர் ஹரி வெங்கடேஷன் என்பவர் புகார் மனு கொடுத்தார்.

அந்த புகாரின் பேரில் உடனடியாக செங்கோட்டை காவல் ஆய்வாளர்  பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் முருகேஸ்வரி மற்றும் தலைமை காவலர் ராஜா சிங் முதல் நிலை காவலர் கணேஷ் குமார் சம்பவ இடம் சென்று அங்கு சுற்றுப்புறத்தில் உள்ள CCTV கேமிராவை பார்த்து சந்தேக நபர் பற்றி பல இடங்களில் விசாரித்தும் சந்தேக நபரின் போட்டோவை பல நபரிடம் காண்பித்து விசாரித்ததில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது, காசிமேஜர்புரத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பது தெரிய வந்தது.

உடனடியாக குற்றவாளியை கைது செய்து அவரிடம் இருந்து திருடிய பணம் ஒரு லட்சத்தையும் மீட்டு குற்றவாளி முத்துக்குமாரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News