திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட சௌந்தரபாண்டியன் 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 4 முறையாக தொகுதியை தக்க வைத்துள்ளார்.
திருச்சி மாவட்டம், லால்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் சௌந்திரராஜன், அதிமுக கூட்டணி தமாக வேட்பாளர் ஆர். தர்மராஜ் உள்பட 14 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.
22 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் . சௌந்தரபாண்டியன் 84,914 வாக்குகளையும், அதிமுக கூட்டணி வேட்பாளர் தர்மராஜ் 67,949 வாக்குகளைப் பெற்றனர். இதன் மூலம் 16,949 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.