சோகத்தை அனுபவிக்க தனிமையை நாடும் 'போச்சு' கலாசாரம்..! எங்கேங்க..?

தனிமையில் இனிமை காண்பது நம்ம ஊரில் சாமியார்கள்.. சாரி..சாரி..அவங்க எங்கே தனிமையில் இருக்காங்க..? சித்தர்கள் மட்டுமே தனிமையில் இருந்தனர்.

Update: 2024-10-18 10:14 GMT

தனிமையில் வாழ்வது -கோப்பு படம் 

தனிமையில் இருப்பதை நாட்டின் கலாசார நிகழ்வாக கொண்டாடுவது ஒரு நாட்டின் இயல்பாக உள்ளது. அந்த நாடு ஜப்பான். ஜப்பான் போச்சி என்ற பெயரில் கொண்டாடுவது இந்த கலாசாரத்தைத் தான். தனிமைக்கான ஜப்பானிய சொல்லாடல் 'போச்சி' ஆகும். மக்கள் தங்களைத் தாங்களே மகிழ்ச்சிக்கு உட்படுத்திக்கொள்வதற்கும், தனிமையின் இனிமை உணர்வை வெளிப்படுத்துவதற்கும் அல்லது இரண்டையும் தனக்குள் வெளிப்படுத்திக்கொள்வது ஜப்பானில் பிரபலம்.

ஜப்பான் பரவலாக போச்சி கலாசாரத்தை அனுமதிக்கிறது. அதாவது தனியாக வாழ்வது மற்றும் சாப்பிடுவது. அது ஆணாக இருந்தாலும் சரி. பெண்ணாக இருந்தாலும் சரி. நாட்டில் உள்ள சில உணவகங்கள் கூட அமைதியாக தனியாக சாப்பிடுவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளன. உண்மையான சமூக இணைப்புகளை பணம் செலுத்தி அல்லது மெய்நிகர் மாற்றீடுகளுடன் அனுபவிக்க பல்வேறு வகையான பொழுதுபோக்குகளும் உள்ளன.

ஜப்பானில் உள்ள மக்கள், குறிப்பாக இயற்கை ஆர்வலர்கள் 'போச்சி' வாழ்க்கை முறையை பெருமையுடன் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் தனிமைக்கான இந்த விசித்திரமான வேடிக்கையான வழி என்பது ஜப்பானியர்களில் 40 சதவிகிதம் வரை தனிமைத் தொற்றுநோயாகும் என்று விமர்சிக்கப்படுகிறது. ஆமாங்க..தனிமையை விரும்புவது கூட ஒரு நோய் மாதிரிதான்.

ஜப்பானின் போச்சி கலாசாரம் என்பது என்ன?

போச்சி என்ற வார்த்தை ஹிட்டோரி (ஒரு ஆள் ) அதாவது ஹிட்டோரிபோச்சி. அந்த சொல்லில் இருந்து பெறப்பட்ட சுருக்கமே போச்சி. இது மற்றொரு ஜப்பானிய வார்த்தையான ஹவுஷி (பௌத்த பாதிரியார்) என்பதிலிருந்து பெறப்பட்டது. இந்த தோற்றங்கள் சில ஜென் அர்த்தங்களைக் கொண்டிருப்பதாகத் தோன்றினாலும், நவீன கால வார்த்தையானது மிகவும் பரிதாபகரமான தனிமையின் சாராம்சத்தைக் கொண்டுள்ளது.

தனியாக இருப்பது என்பது சோகத்தை அனுபவிக்க இந்த போச்சி பயன்படுத்தப்படலாம். ஆனால் இந்த போச்சி மகிழ்ச்சிகரமான , சுயமரியாதையான வழியில் தனிமையை அனுபவிக்க பயன்படுத்தப்படலாம். போச்சி மேஷி (தனியாக சாப்பிடுவது), போச்சி ராமன் நூடுல்ஸ் (நூடுல்ஸ் மட்டும் சாப்பிடுவது) போன்ற நகைச்சுவையான போக்குகளை வெளிப்படுத்த இந்த போச்சி என்ற வார்த்தை பயன்படுத்தப்படலாம். குறிப்பாக பிரபலமான உணவுப் பழக்கவழக்கங்களை உருவாக்க இந்த வார்த்தை பல வார்த்தைகளுடன் இணைத்து பயன்படுத்தப்படலாம்.

போச்சியின் அதிக சுவை பயன்பாட்டிற்கு ஒரு பிரபலமான உதாரணம் 'குறிபோச்சி' என்ற சொல். குறி என்பது குரிசுமாசு (கிறிஸ்துமஸ்) என்பதன் சுருக்கம்.

ஜப்பானில், கிறிஸ்துமஸ் பாரம்பரியமாக குடும்பத்துடன் செலவிடும் நாள் அல்ல. ஆனால் காதலர் தினத்தைப் போன்ற ஒரு காதல் விடுமுறை என்றுதான் சொல்லணும். எனவே குறிபோச்சி என்று குறிப்பிடுவது, இந்த காதல் நாளில் நீங்கள் தனிமையில் இருந்து தனிமையை இனிமையாக அதாவது சோகத்தை முழுமையாக அனுபவிக்கும் நாளாகும்.


போச்சி வாழ்க்கை முறையை எவ்வாறு வாழ்கிறார்கள் ?

ஜப்பானின் தனிமை நகைச்சுவையல்ல. வயதானவர்களில் ஆணோ அல்லது பெண்ணோ இறந்துவிட்டால் கணவன் அல்லது மனைவி தனிமை ஆகிவிடுவார். ஒவ்வொரு ஆண்டும் இறப்பு 68,000 ஆக உள்ளது. இந்த சிக்கலான புள்ளிவிவரங்களில் தனிமையில் உள்ள மக்களின் துன்பத்தைத் தீர்க்க, ஜப்பானிய அரசாங்கம் அதன் முதல் தனிமைத்துறை அமைச்சரை 2021ம் ஆண்டில் நியமித்தது. ஆனால், மறுபுறம், ஜப்பானிய கலாசாரம் மற்றும் உள்கட்டமைப்புகள் பல வழிகளில் தனிமையான வாழ்க்கை முறையை வசப்படுத்திக்கொள்ள ஆதரவு அளிக்கிறது.

ஜப்பானிய நகரங்களில், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட ஒற்றை மக்கள் தனியாக வாழவே முனைகிறார்கள். ஒரு நண்பர் அல்லது வீட்டுத் தோழியுடன் வீட்டைப் பகிர்ந்துகொள்வது அந்த நாட்டில் வழக்கத்திற்கு மாறானது.

மேலும் திருமணத்திற்கு முன் ஒரு துணையுடன் வாழ்வது மிகவும் குறைவானது. ஆனால் ஜப்பானில் தனிமையில் இருப்பவர்கள் தங்கள் வாழ்க்கையை யாரிடமாவது பகிர்ந்து வாழ்வோம் என்று கேட்பது என்பது அரிதான அல்லது ஆச்சர்யமான விஷயம். அந்த அளவுக்கு அவர்கள் தனிமையை கடைபிடிக்கிறார்கள்.

பெரும்பாலான உணவகங்கள் ஏராளமான ஒற்றை கவுண்டர் இருக்கைகளை வழங்குகின்றன. அதாவது ஒருவர் மட்டுமே அமர்ந்து உணவருந்தும் மேஜைகளை வழங்குகின்றன. அதே போல தனியார் இணையம் மற்றும் மங்கா கஃபே அறைகள் தனிப்பட்ட வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு தனி கேபின்களை வடிவமைத்துள்ளன.

ஜப்பானிய பொழுதுபோக்கின் பல வடிவங்களும் தனிமையான நுகர்வோரைக் கவரும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன. ஜப்பானிய சிலை தொழில் கலைஞர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இடையே தனித்த - சமூக உறவுகளை ஊக்குவிக்கிறது. டேட்டிங் சிம்ஸ் எனப்படும் ஆன்லைன் கேம்கள், இதில் விளையாடுபவர் மெய்நிகர் காதல் ஆர்வத்தை ஈர்க்கும் நோக்கத்துடன், ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரபலமானது.

இந்த போக்குகள் சமூக ரீதியிலான கட்டமைப்புக்குள் வராதவர்களுக்கு தனிமைப்படுத்தப்படுவதை ஊக்குவிக்கும் என்பது உண்மையே. அப்ப எப்படி ஜப்பான் நாட்டின் ஜனத்தொகை அதிகரிக்கும்?

Tags:    

Similar News