திருத்தணியில் 227 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா.. அமைச்சர் நாசர் வழங்கினார்…

திருத்தணியில் 227 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா.. அமைச்சர் நாசர் வழங்கினார்…
X
திருத்தணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 227 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை பால்வளத்துறை அமைச்சர் நாசர் வழங்கினார்.

திருவள்ளுர் மாவட்டம், திருத்தணி தனியார் திருமண மண்டபத்தில், மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருத்தணி சந்திரன் எம்எல்ஏ வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சர் ‌.நாசர் கலந்து கொண்டு திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய வட்டங்களுக்குட்பட்ட 227 குடும்பங்களுக்கு சுமார் ரூ. 2.10 கோடி மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கி சிறப்புரை யாற்றினார்.

தொடர்ந்து, அமைச்சர் நாசர் பேசியதாவது:

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உத்தரன்படி, திருத்தணி வட்டத்திற்குட்பட்ட வி.கே.என்.கண்டிகை கிராமத்தை சேர்ந்த 14 பயனாளிகள், ராஜபத்மாபுரம் கிராமத்தை சேர்ந்த 15 பயனாளிகள், சின்னகடம்பூர் கிராமத்தை சேர்ந்த 16 பயனாளிகள், சூரியநகரம் கிராமத்தை சேர்ந்த 36 பயனாளிகள், நெடும்பரம் கிராமத்தை சேர்ந்த 1 பயனாளி, பொன்பாடி கிராமத்தை சேர்ந்த 42 பயனாளிகள், முத்துக்கொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்த 21 பயனாளிகள், மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 7 பயனாளிகள், தாடூர் கிராமத்தை சேர்ந்த 1 பயனாளிகள், வீரகநல்லூர் கிராமத்தை சேர்ந்த 3 பயனாளிகள், அகூர் கிராமத்தை சேர்ந்த 11 பயனாளிகள், இராமாபுரம் கிராமத்தை சேர்ந்த 7 பயனாளிகள் என மொத்தம் 12 கிராமங்களை சேர்ந்த 174 பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஆர்.கே.பேட்டை வட்டத்திற்குட்பட்ட எஸ்.வி.ஜி.புரம் கிராமத்தை சேர்ந்த 16 பயனாளிகள், அஸ்வரேவந்தபுரம் கிராமத்தை சேர்ந்த 19 பயனாளிகள், வீரமங்கலம் கிராமத்தை சேர்ந்த 11 பயனாளிகள், வெள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்த 3 பயனாளிகள் என மொத்தம் 4 கிராமங்களை சேர்ந்த 49 பயனாளிகளுக்கும் மற்றும் பள்ளிப்பட்டு வட்டத்திற்குட்பட்ட கீளபூடி கிராமத்தை சேர்ந்த 3 பயனாளிகள், அத்திமான்சேரி கிராமத்தை சேர்ந்த 1 பயனாளி என மொத்தம் இரண்டு கிராமங்களை சேர்ந்த 4 பயனாளிகளுக்கும் என மொத்தம் 18 கிராமங்களை சேர்ந்த 227 பயனாளிகளுக்கு ரூ. 2,09,98,586 (ரூபாய் இரண்டு கோடியே ஒன்பது லட்சத்து தொண்ணூற்றி எட்டாயிரத்து ஐந்நூற்றி எண்பத்தி ஆறு மட்டும்) மதிப்பிலான 21,720 சதுர மீட்டர் பரப்பளவு இடத்திற்கான இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது.

இதேபோன்று சாதாரண ஏழை எளிய மக்களின் தேவைகளை அறிந்து, அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்காக தன்னை முழுமையாக அற்பணித்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் பணியாற்றி வருகிறார்.

தமிழக அரசு மூலம் மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் பல சிறப்பான திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி தங்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் திருத்தணி பூபதி, ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி, மாநில நிர்வாகிகள் பூவை ஜெரால்டு, ரமேஷ், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஹஸ்ரத் பேகம், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் தங்கதனம் தங்கராஜ், ரஞ்சிதா, சாமிராஜ், திலவகதி ரமேஷ், வட்டாட்சியர்கள் வெண்ணிலா, ரமேஷ், தமயந்தி, திமுக நிர்வாகிகள் மிதுன் சக்ரவர்த்தி, சுப்பிரமணி, ரவீந்திரநாத், வினோத்குமார், கிருஷ்ணன், ஆர்த்தி ரவி, பழனி, சீனிவாசன், சிசு ரவிச்சந்திரன், மகாலிங்கம், சாமிராஜ், திலகவதி ரமேஷ், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story