திருத்தணி முருகன் கோவில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி

திருத்தணி முருகன்  கோவில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி
X
பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருத்தணி முருகனுக்கு வள்ளியம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி விமர்சியாக நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்.

திருத்தணி முருகன் திருக்கல்யாணம்: வள்ளியம்மை மணக்கோலத்தில் காட்சி!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான வள்ளியம்மை திருக்கல்யாணம் இன்று அதிகாலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

குறவர் சமுதாயத்தினர் மற்றும் பக்தர்கள் என, திரளானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் மலைக்கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினமும் காலை, இரவு நேரங்களில் உற்சவர் முருகப்பெருமான் ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நேற்று ஆறுமுக சுவாமி கோவிலுக்கு உற்சவர் சென்றடைந்தார். அங்கு ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

நள்ளிரவு 1 மணி அளவில் பார்வேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முருகப்பெருமான் வள்ளியம்மையை கவர்ந்து வரும் நிகழ்வு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை, 4:30 மணிக்கு, மலைக்கோவிலில் உள்ள வள்ளி மண்டபத்தில், உற்சவர் முருகப்பெருமானுக்கும், வள்ளியம்மைக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.

இதில், குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் முருகப்பெருமானுக்கு சீர்வரிசை கொண்டு வந்தனர்.

முருகப்பெருமான் வள்ளியம்மையை திருமணம் செய்து கொண்டு கோயிலுக்குள் செல்லும் போது தெய்வயானை அம்மையார் கோயிலின் பிரதான வாயில் முடி உள்ளே அனுமதிக்காமல் மறுப்பது பின்னர் முருகப்பெருமான் தெய்வயானை அம்மையாரை சமாதானம் செய்து கோயிலுக்குள் அழைத்து செல்லும் வைபோக வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

இந்த திருக்கல்யாண நிகழ்வை காண தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் திரண்டிருந்தனர்.

பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவிழாவின் நிறைவாக இன்று இரவு தேரோட்டம் நடைபெற உள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!