உதவி செய்யப்போய் பணத்தை கோட்டைவிட்ட கல்லூரி மாணவர்..!
சிசிடிவி காட்சியில் பதிவான படம்.
திருத்தணியில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கேட்டு ஏறியவர், கல்லூரிக் கட்டணம் கசெலுத்துவதற்கு பையில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை அபேஸ் செய்துவிட்டு தப்பி ஓடினார்.
சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன். ஆந்திர மாநிலம் திருப்பதி அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் படித்து வருகிறார். அவர் தேர்வுக் கட்டணம் செலுத்த தாம்பரத்திலிருந்து திருப்பதிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருத்தணி அருகே சென்றுக் கொண்டிருந்தபோது சாலையில் நின்றுருந்த வாலிபர் ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார்.
அவரை பைக்கில் ஏற்றிக்கொண்டு சிறுது தூரம் சென்ற நிலையில் இறக்கி விட வேண்டும் என்று வாலிபர் கேட்டுள்ளார்.பைக் நிறுத்தி வாலிபரை இறக்கிவிட்டு அவர் முதுகில் மாட்டி இருந்த பேக் பார்த்த போது திறந்த நிலையில் இருந்ததால், சந்தேகமடைந்து பார்த்தபோது பேகில் வைத்திருந்த பர்ஸ்சில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.
அவ்வைடத்தில் இருந்து தப்ப முயன்ற அந்த வாலிபரை பிடித்துக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுக் கொண்டிருந்த போது திடீரென்று பைக்கிலிருந்து குதித்து வாலிபர் தப்பியோடி விட்டார். லிப்ட் கொடுத்தவரின் பேகில் இருந்து ரூ. 10 ஆயிரம் அபேஸ் செய்து வாலிபர் தப்பி ஓட்டம் பிடிக்கும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதவியாகி உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருடனைத் தேடி வருகின்றனர்.
உதவி செய்யப்போய் மாணவருக்கு இப்படி ஒரு நிலை வந்துவிட்டது. கல்லூரியில் தேர்வுக்கட்டணம் வேறு கட்டவேண்டும். இப்படியான சூழலில் இனிமேல் உண்மையான ஒருவருக்குக்கூட உதவி செய்ய அவர் யோசிப்பார். இதுதான் உலகம். யாரையும் நம்பமுடியவில்லை. உதவியவருக்கே உலை வைக்கும் நரிக்கூட்டம் உலாவும் மண்ணாகிவிட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu