பழைய மார்க்கெட்டை அகற்றி புதிய மார்க்கெட் பணிகள் துவக்கம்..!
திருத்தணி பழைய மார்க்கெட் அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன.
திருத்தணி ம.பொ.சி. சாலை காந்தி சிலை அருகே உள்ள பழுதடைந்த காய்கறி மார்க்கெட்-ஐ அகற்றி புதிய கட்டிடம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம்,திருத்தணி ம.பொ.சி.சாலை காந்திசிலை அருகே காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு,50.க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. காய்கறி மார்க்கெட்டை நகராட்சி நிர்வாகம் பராமரித்து வந்தது. இந்த காய்கறி மார்க்கெட் கட்டி, 50 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் கடைகள் மற்றும் கட்டடங்கள் சேதம் அடைந்து இருந்தன.
இதையடுத்து நகராட்சி நிர்வாகம், பழுதடைந்த காய்கறி மார்க்கெட்டை இடித்து அகற்றி அங்கு, 3.02 கோடி ரூபாய் மதிப்பில் நவீன காய்கறி மார்க்கெட் கட்டுவதற்கு நகர்மன்ற கவுன்சிலர்கள் கூட்டம் தீர்மானம் நிறைவேற்றி, அதற்கான நிதி பெறப்பட்டது.
இந்நிலையில், காய்கறி மார்க்கெட்டில் இருந்து மொத்த கடைகளும், திருத்தணி-அரக்கோணம் சாலையில் உள்ள உழவர் சந்தைக்கு மாற்றப்பட்டது. மேலும் பழுதடைந்த காய்கறி மார்க்கெட்டை இடிக்கும் பணிகள் துவங்கி உள்ளது. இந்தப் பணிகளை ஒரு வருடத்திற்குள் முடித்து புதிய நவீன காய்கறி மார்க்கெட் வசதி ஏற்படுத்தி மீண்டும் வாடகைக்கு விடப்படவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu