பொன்பாடி போக்குவரத்து சோதனைச்சாவடியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை
வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் பறக்கும் படையினர்
மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், கடந்த, 16ம் தேதி முதல் இந்திய தேர்தல் ஆணையம் விதித்துள்ள, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. பாரபட்சமற்ற ஆரோக்கியமான, அமைதியான முறையில் தேர்தல் நடத்தவும், தேர்தல் நேரத்தில் முறையற்ற வகையில் பணம் பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் அளித்து பொதுமக்களை தவறான வழியில் ஓட்டளிக்க தூண்டுவதை தடுத்திடும் வகையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பறக்கும்படை மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக-ஆந்திர எல்லையான பொன் பாடி போக்குவரத்து சோதனைச்சாவடியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டதை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அடுத்த பொன் பாடி போக்குவரத்து சோதனை சாவடி பகுதியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் மக்களவைத் தேர்தல்-2024 முன்னிட்டு சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தணிக்கை மேற்கொள்வதை நேரில் சென்று பார்வையிட்டு மேலாய்வு மேற்கொண்டனர்,
மேலும் மாவட்ட ஆட்சியர் தேர்தல் அதிகாரிகளிடம் கூறுகையில் தமிழ்நாடு ஆந்திரா எல்லைப் பகுதியான பொன்பாடி போக்குவரத்து சோதனைச் சாவடி வழியாக செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனை மேற்கொள்ளாமல் அனுப்பக்கூடாது என்றும்
பணிகளில் எவ்வித சுணக்கம் இல்லாமல் தேர்தல் பணி மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர், அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா, திருத்தணி வட்டாட்சியர் மதியழகன், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu