திருத்தணி அருகே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு..!

திருத்தணி அருகே மறைந்த  முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு..!
X

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி திருத்தணி ஆர்கே பேட்டை ஒன்றிய பகுதிகளில் முன்னாள் எம்எல்ஏ பி.எம் நரசிம்மன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

திருத்தணி அருகே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 7ம் அண்டு நினைவு தினத்தையொட்டி நலத் திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம். தமிழக அரசின் முன்னாள் அரசு கொறடா பி.எம்.நரசிம்மன் வழங்கினார்.

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 7ம் ஆம் ஆண்டு நினைவு தினத்தை நேற்று அனுசரித்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.

அதில் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, ஆர்.கே.பேட்டை ஆகிய பல்வேறு பகுதிகளில் அவர்களின் திருவுருவப் படத்திற்கு தமிழக அரசின் முன்னாள் அரசுக் கொறடா பி.எம்.நரசிம்மன் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். வேலஞ்சேரி, கே.ஜி.கண்டிகை. ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம் ஆகிய பகுதிகளில் அலங்கரிக்கப்பட்ட அம்மா அவர்களின் திருவுருவப் படங்களுக்கு பி.எம்.நரசிம்மன் மலர்தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம், பெண்களுக்கு இலவச புடவைகள் வழங்கப்பட்டது.

ஆர்.கே.பேட்டை ஒன்றிய கழக கவுன்சிலர்கள் A.P. சந்திரன், கிரிராஜா கோவிந்தம்மாள் ஆனந்தன், கல்விக்கரசி சேகர், கார்த்திகேயன், ஜமுனா குமாரசாமி, வேலஞ்சேரி செல்வம், கே.ஜி.கண்டிகை ரஜினி, உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!