தைப்பூசத்தை முன்னிட்டு இன்று திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
திருத்தணி முருகன் கோவிலில் தைப்பூசம் திருவிழாயொட்டி, மலைக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், பொது வழியில் நீண்ட வரிசையில் 2.மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்து வருகின்றனர்.
ஆறுபடை வீடுகளில் 5 ஆம் படைவீடாக திகழும் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசம் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு காலை 4.30 மணிக்கும் மூலவருக்கு பால், தயிர், சந்தனம், தேன்,பன்னீர், விபூதி, குங்குமம்,மஞ்சள் உன்கிட்ட வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பட்டு உடைகளாலும், வண்ண வண்ண கண் கவரும் மலர்களாலும், திரு ஆபரணங்களாலும் அலங்காரம் தொடர்ந்து மூலவருக்கு தங்கவேல், தங்க கிரீடம், மாணிக்க கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் காவடிகள், பால் குடம், அலகு குத்தி கொண்டு மலை அடிவாரத்தில் இருந்து 365 படிகள் ஏறி வந்து முருகப்பெருமான் வழிபட்டு செய்து வருகின்றனர்.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் ஆந்திரா, கர்நாடக, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து இலவச மற்றும் 100 கட்டண வரிசையில் 2 மணி நேரத்திற்கு மேல் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளும், செய்யப்பட்டுள்ளது. எவ்வித அசம்பாவித நடைபெறாத வண்ணம் திருத்தணி முக்கிய பகுதிகளில்
காவல்துறை துணை கண்காணிப்பாளர் விக்னேஷ் தலைமையில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu