திருத்தணியில் வாகன சோதனையில் சிக்கிய 60 கிலோ கஞ்சா: 5 பேர் கைது

திருத்தணியில் வாகன சோதனையில் சிக்கிய 60 கிலோ கஞ்சா: 5 பேர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள்.

திருத்தணியில் அரசு பேருந்தில் கடத்திவரப்பட்ட 60 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியான பொன்பாடி சோதனைச் சாவடியில் திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் செபாஸ் கல்யாணத்துக்கு வந்த ரகசிய தகவல் வந்தது. தகவலின் பெயரில் திருத்தணி டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்து நேற்று இரவு முழுவதும் திருத்தணி பல்வேறு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து வந்த அரசுப் பேருந்தில் சோதனை செய்ததில், தமிழகத்திற்கு கடத்திவரப்பட்ட சுமார் 60 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த கணேஷ், அயனாவரத்தைச் சேர்ந்த சுரேஷ், பெரியார் நகரைச் சேர்ந்த செல்வராஜ், ஆவடி கோவில் பதாகை பகுதியை சேர்ந்தச் சுரேஷ் மற்றும் சென்னையைச் சேர்ந்த பரசுராமன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட 5 பேரையும் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!