போதையில் மாடி மீது இருந்து கீழே விழுந்த இளைஞர் மரணம்

போதையில் மாடி மீது இருந்து கீழே விழுந்த இளைஞர் மரணம்
X

பைல் படம்

செங்கரை கிராமத்தில் மது போதையில் மாடி மீது இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழந்தார்

ஊத்துக்கோட்டை அடுத்த செங்கரை கிராமத்தில் மதுபோதையில் மாடி மீது இருந்து தவறி விழுந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த செங்கரை கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் இவருக்கு சொந்தமான இரண்டு அடுக்கு மாடி வீடு உள்ளது. இந்நிலையில், இவர் வீட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் வாடகை வீடு எடுத்து தங்கி வருகின்றனர்.

அதில் அவர்கள் ஐந்து பேரும் தேர்வாய் கண்டிகை சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றனர்.இதில் திருவண்ணாமலை மாவட்டம், கீழ்வணக்கம்பாடி ஊராட்சி, துள்ளுகுட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (28). என்பவர் வேலைக்குச் சென்று வேலை முடித்துவிட்டு இரவு வீட்டின் மேல் தளத்தில் மது அருந்தியுள்ளார்.

ஆனால் அதிக போதை ஆன அவர் மேல் தளத்திலிருந்து தடுமாறி கீழே விழுந்தது பின் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்துக்கோட்டை காவல் துறையினர் பலியான வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடிபோதையில் மேல் தளத்திலிருந்து தடுமாற்றத்தில் கீழே விழுந்து இளைஞர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




Tags

Next Story
ai solutions for small business