சுத்திகரிப்பு குடிநீர் மையம் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படுமா?.
பெரியபாளையம் பேருந்து நிலையம் பின்புறம் 6.5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை திறக்க பக்தர்கள்,பொதுமக்கள் கோரிக்கை
பெரியபாளையம் பேருந்து நிலையம் பின்புறம் 6.5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை திறக்க பக்தர்கள்,பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் ஊராட்சியில் சுமார் 12000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் புகழ் பெற்ற பவானி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் தற்போது ஆடி திருவிழா தொடங்கி 14 வார காலம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இக்கோவிலுக்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை தமிழக மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு வந்து மொட்டை அடித்து பொங்கலிட்டு ஆடு, கோழி என பலியிட்டு நேர்த்திக் கடனை செலுத்தி நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர்.
இதனை அடுத்து பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கா கவும், பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பருகுவதற்காக பேருந்து நிலையம் பின்புறம் ரூ. 6.5 லட்சம் மதிப்பீட்டில் ஆர் ஓ பிளான்ட் எனப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் கடந்த 2018-19 ஆண்டு கும்மிடிப்பூண்டி அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். விஜயகுமார் மேம்பாட்டு வீதியில் அமைக்கப்பட்டு நான்காண்டுகள் ஆகியும் தற்போது வரை திறக்கப்படாமல் மூடி கிடக்கிறது.
இதனை பயன்படுத்தாததால் சுத்திகரிப்புக்காக அமைக்கப்பட்டுள்ள இயந்திரங்கள் பழுதடைந்து வீணாகிப் போய்விடும் எனவும். இந்த சுத்திகரிப்பு குடிநீர் மையத்தை திறந்து வைத்தால் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று பெரியபாளையம் கிராம மக்களும் மற்றும் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu