கணவனை கொன்ற மனைவி கைது

கணவனை கொன்ற மனைவி கைது
X
திருவள்ளூர் அருகே போதையில் கிடந்த கணவனை தலையணையை வைத்து கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் அருகே தலையணையால் அழுத்தி கணவனை கொலை செய்த மனைவியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், தாமரைப்பாக்கம் அடுத்த வானியன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். சென்னை வியாசர்பாடியை பூர்வீகமாக கொண்ட ரமேஷ் கிடைக்கும் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு தங்கலட்சுமி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 11ஆம் தேதி ரமேஷ் கட்டிலில் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு 108.ஆம்புலன்சுக்கு அளிக்கப்பட தகவலில் சோதனை மேற்கொண்டதில் உயிரிழந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெங்கல் போலீசார் கட்டிலில் மயங்கிய நிலையில் உயிரிழந்த ரமேஷ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு பிறகு ரமேஷின் தந்தை ரவியிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

ரமேஷின் தந்தை ரவி தன் மகன் ரமேஷ் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அளித்த புகாரின் பேரில் சந்தேக மரணம் வழக்கு பதிவு செய்து வெங்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் ரமேஷ் மூச்சடைத்து உயிரிழந்தது தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் ரமேஷின் குடும்பத்தினரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

ரமேஷின் மனைவி தங்கலட்சுமியிடம் கிடுக்கு பிடி விசாரணையை முடுக்கி விட்டனர். கணவர் ரமேஷ் மதுபோதையில் தம்மை தொந்தரவு செய்து வந்ததாகவும், பிறருடன் பேசுவதை சந்தேகப்பட்டு சண்டையிட்டதாகவும், வேலைக்கு போகாமல் தொடர்ந்து சண்டை போட்டு வந்ததால் ஆத்திரத்தில் கணவர் ரமேஷ் போதையில் தூங்கி கொண்டிருந்த போது தலையணையால் முகத்தில் வைத்து அழுத்தி கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து கணவனை கொலை செய்து மயங்கிய நிலையில் இறந்ததாக நாடகமாடிய மனைவியை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.





Tags

Next Story