மக்கள் குறை கேட்பு முகாம்: பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மக்கள் குறை கேட்பு முகாம்: பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 290 கோரிக்கை மனு பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ், தகுதி உள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

முகாமில் 290 கோரிக்கை மனு பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் தகுதி உள்ளவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 290 கோரிக்கை மனு பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல் பி ஜான் வர்கீஸ், தகுதி உள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்கள் பொதுமக்களிடமிருந்து 290 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இம்மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கினர். இதில் நிலம் சம்பந்தமாக 80 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 46 மனுக்களும், வேலைவாய்ப்;பு தொடர்பாக 30 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 50 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 84 மனுக்களும்; என மொத்தம் 290 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து இக்கூட்டத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம் சுயதொழில் செய்து வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் ரூ.6.25 இலட்சம் வங்கி கடன் பெற்ற ஒரு பயனாளிக்கு அரசின் மானியத் தொகை ரூ2.25 இலட்சம் உட்பட ரூ.8.50 இலட்சம் மதிப்பீட்டிலான சரக்கு வாகனமும் ரூ.1.50 இலட்சம் வங்கி கடன் பெற்ற ஒரு பயனாளிக்கு அரசின் மானியத் தொகை ரூ.70,000 உட்பட ரூ.2.20 இலட்சம் மதிப்பீட்டிலான ஒரு பயணியர் ஆட்டோவும் என மொத்தம் 2 பயனாளிகளுக்கு ரூ.10.70 இலட்சம் மதிப்பீட்டிலான வாகனங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

மேலும், திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், ஆவின் விற்பனை மையம் அமைக்க மானியம் வழங்கும் திட்டத்தின கீழ் ஆவின் முகவராக தேர்வு செய்யப்பட்ட ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.50,000 மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர் பொருட்கள் கொள்முதல் செய்வதற்கான அனுமதி ஆணையை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் பி ஜான் வர்கீஸ வழங்கினார்.




Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு