நாடாளுமன்ற தேர்தலில் 25 இடங்களை கைப்பற்றி பிரதமரை உருவாக்குவோம்: திருமாவளவன்

நாடாளுமன்ற தேர்தலில் 25 இடங்களை கைப்பற்றி பிரதமரை உருவாக்குவோம்: திருமாவளவன்
X

தொல் திருமாவளவன்(பைல் படம்)

பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் எப்படியாவது கால் ஊன்ற வேண்டும் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது

தமிழ்நாட்டில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் 25 இடங்களை கைப்பற்றி பிரதமரை உருவாக்குவோம் என்ற அனைத்தும் ஏமாற்று சொற்களே. இது மோசடி முயற்சி என்றும் பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் எப்படியாவது கால் ஊன்ற வேண்டும் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. அது தமிழ்நாட்டில் எடுபடாது என்பது தேர்தல் முடிவுக்கு பிறகு தெரியும் என்றார் தொல்.திருமாவளவன்.

திருவள்ளூர் அடுத்த பூண்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியின் தாயார் உருவப்படம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொல். திருமாவளவன் நினைவு உருவப்படத்தினை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வருகின்ற தமிழ்நாடு நாடாளுமன்ற தேர்தலில் 25 இடங்களை கைப்பற்றுவோம் பிரதமரை உருவாக்குவோம் என்ற அனைத்தும் ஏமாற்று சொற்கள். மோசடி முயற்சி இதனை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் .

பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் எப்படியாவது கால் ஊன்ற வேண்டும் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. அது தமிழ்நாட்டில் எடுபடாது. என்பது தேர்தல் முடிவுக்கு பிறகு தெரியும். கர்நாடக மாநிலத்தில் பல சித்து வேலைகளை செய்து பிரதமர் மோடி 9 முறை கர்நாடகாவில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்த நிலையிலும், பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. இந்து சமூகத்தை நம்பி சிறுபான்மையருக்கு எதிராக பிரசாரம் செய்த நிலையில் கர்நாடகா இந்துக்களே பாஜகவினரை தோற்கடித்து உள்ளனர்.

கர்நாடகா இந்துக்கள் பாஜகவை ஏற்றுக் கொள்ளாத போது, பண்படுத்தப்பட்ட தமிழ்நாட்டில் பாஜகவின் சித்து வேலை எடுபடாது. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது. திமுக கூட்டணியை வலிமைப்படுத்த வேண்டும் விடுதலை சிறுத்தைகள் நினைக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொறுத்த வரை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் தொடரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. வெறுப்பு அரசியலை விதைப்பது மதவெறியை தூண்டுவது மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துவது போன்றவற்றில் 24 மணி நேரமும் பாஜக கவனம் செலுத்தி வருகிறது.

சன்னியாசிகளை வைத்து யாகம் செய், புனித பசுவை பாதுகாப்போம் என முழக்கம் இடுவது என்பதில் மட்டும் கவனம் செலுத்தி ஆட்சி நிர்வாகத்தில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி போதிய கவனம் செலுத்தவில்லை என்பதற்கு ஒடிசா ரயில் கோர விபத்து சான்றாக விளங்குகிறது. திமுகவின் கொள்கையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கையும் வேறு வேறு அல்ல ஒன்று தான். சமத்துவம் பொதுவுடமை பற்றி பேசும் அரசியல் கட்சிகள் என முன்னாள் முதல்வர் கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொள்கை சார்ந்து இயங்குகிறது, என்பதை மதவெறி அரசியல் செய்பவர்களால் புரிந்து கொள்ள இயலாது. முதலமைச்சர் ஸ்டாலின் செயல்வீரர் சாதனையாளர் அவரை பின்பற்றி பல்வேறு மாநிலங்களில் செயல் திட்டங்களை தீட்டி வருகின்றனர். முன்மாதிரி ஆட்சி நிர்வாகத்தை வழங்குகின்ற வலிமை பெற்ற முதல்வராக ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். நான் பரீட்சை நேரத்தில் படிக்கின்ற மாணவனை போல தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி பற்றியும் தொகுதிகளை பற்றியும் சிந்திப்பேன் என தெரிவித்தார்.


Tags

Next Story
சாக்லேட் தான  அப்டினு அசால்ட்டா எடுக்காதீங்க..! அதனால நன்மையையும் இருக்கு.. தீமையும் இருக்கு..!