கிருஷ்ணாபுரம் நீர்த் தேக்கத்தில் திறக்கப்பட்ட நீர், பூண்டி சத்திய மூர்த்தி அணைக்கு வந்தது

கிருஷ்ணாபுரம் நீர்த் தேக்கத்தில் திறக்கப்பட்ட நீர், பூண்டி சத்திய மூர்த்தி அணைக்கு வந்தது
X

பூண்டி சத்திய மூர்த்தி நீர்த் தேக்கம்.

பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கத்தில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீர் வந்தடைந்தது.

ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி கிருஷ்ணா நீர்த்தேக்கத்தில் இருந்து நேற்று முன்தினம் 1000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது.

இந்த தண்ணீரானது நெடியம், ஆர்கே பேட்டை, கும்பம் கட்டிகை, சிவாடா, நாராயணபுரம் வழியாக பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு கொசஸ்தலை ஆற்றின் வழியாக வந்தது. விநாடிக்கு 198 கன அடி தண்ணீர் பூண்டி வந்துகொண்டிருக்கிறது.

இதனால் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் அளவு உயர்ந்து வருகிறது. பூண்டி ஏரியின் மொத்தம் 35 அடியில் 33.16 அடியாக உள்ளது.

ஏற்கனவே ஆந்திர மாநிலம் கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து கிருஷ்ணா கால்வாய் மூலம் வினாடிக்கு 551கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிட தக்கது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!