பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு..!
பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு.
தொடர் மழையின் காரணமாக பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து 650 கன அடியிலிருந்து 680 கன அடியாக அதிகரித்துள்ளது.சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் திருவள்ளூர் மாவட்டம், பூண்டி சத்தியமூர்த்தி
நீர்தேக்கத்திற்கு தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாகவும் கிருஷ்ணா நதி நீர்வரத்து காரணமாக காலை நீர்த்தேக்கத்துக்கு 650 கன அடியாக
வந்து கொண்டிருந்த நீர் வரத்து மாலை 680 கன அடியாக அதிகரித்துள்ளது.நீர்த்தேகத்தின் 3231 மில்லியன் கன அடியில் தற்போது 0.341 மில்லியன் கன அடியில் நீர் இருப்பு இருந்து வருகிறது.நீர்தேக்கத்தில் 35 அடி உயரத்தில் தற்போது 20.80 அடி உயரத்தில் நீர் இருப்பானது இருந்து வருகிறது.செம்பரம்பாக்கத்திற்கு தொடர்ந்து 250 கன அடி தண்ணீரும் மெட்ரோ வாட்டருக்கு 17 கன அடி விதம் என திறக்கப்பட்டு வருகிறது.
பூண்டி நீர்தேக்கம் சீரமைப்பு பணி காரணமாக சென்னை குடிநீருக்காக அதிக தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் குறைந்த அளவில் நீர் இருப்பு இருந்து வருவதால் இந்த முறை எவ்வளவு மழை பெய்தாலும் சேமித்து வைக்கும் வகையில் இடம் இருந்து வருகிறது.கொட்டும் மழையிலும் பூண்டி நீர்த்தேக்கப் பகுதியில் சீரமைக்கும் பணிகளானது நடைபெற்று வருகின்றது பூண்டி நீர்தேக்க பகுதியில் நீர்வளத்துறை வருவாய்த்துறை காவல்துறையினர் 24 மணி நேரம் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu