வீட்டுமனை பட்டா, கல்வி ஊக்கத்தொகை கோரி காத்திருப்பு போராட்டம்

வீட்டுமனை பட்டா, கல்வி ஊக்கத்தொகை கோரி காத்திருப்பு போராட்டம்
X

 ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் முன்பு பீடி தொழிலாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் தங்கள் குடும்பத்தினருடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

கல்வி உதவித்தொகை. வீட்டுமனை பட்டா வேண்டி பலமுறை ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர்

ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஊத்துக்கோட்டை சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த 100 மேற்பட்ட பீடி தொழிலாளர்கள் வீட்டுமனை பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் குடிசைத் தொழிலாளர் தொழிலை மெய்யூர். எடப்பாளையம். திருவள்ளூர். ஊத்துக்கோட்டை பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் பீடி தொழில் செய்து வருகின்றனர்.

இவர்கள் தங்களுக்கு அடிப்படைத் தேவையாக இருக்கும், கல்வி உதவித்தொகை. வீட்டுமனை பட்டா வேண்டி பலமுறை ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கும் எடுக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த பீடி தொழிலாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் தங்கள் குடும்பத்தினருடன் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் முன்பு மாவட்டத் தலைவர் பலராமன் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பிடி தொழிலாளர் சம்மேள பொதுச் செயலாளர் திருச்செல்வன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் வசந்தி, பீடி தொழிலாளருக்கு வீட்டு மனை பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து தற்காலிகமாக காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது. காத்திருப்பு போராட்டத்திற்கு வந்த பொது மக்களை வட்டாட்சியர் அலுவலக நுழைவாயில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.




Tags

Next Story