தீ தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தீ தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

சென்னை கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலையத்தில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து தன்னார்வலர்களுக்கு மாதிரி பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி.

கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலையத்தில் தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து தன்னார் வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது

சென்னை கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலையத்தில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து தன்னார்வலர்களுக்கு மாதிரி பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..

சென்னையில் பருவமழை தொடங்க உள்ளதால் தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து சமூகஆர்வலர், தன்னார்வலர்களுக்கு மாதிரி பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணன் தலைமையில் சுமார் 50 க்கும் மேற்பட்டதன்னார்வலர்களுக்கும், சமூக ஆர்வலர்களும் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை எவ்வாறு பாதுகாப்பது குறித்தும் மீட்பு பணிகள், தீ தடுப்பு குறித்து அதேபோல் மற்றவர்கள் வெள்ள பாதிப்பில் சிக்கும் போது மற்றவர்களை எதிர்பார்க்காமல் நம்மால் முடிந்த உதவிகளை எவ்வாறு செய்து அவர்களை காப்பது மாதிரி பயிற்சிகளை குறித்து தீயணைப்பு வீரர்கள் தத்துரூபமாக செய்து காட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட உதவி அலுவலர் லட்சுமணன், மதுரவாயில் நிலைய அலுவலர் செல்வம், கோயம்பேடு நிலைய அலுவலர் ராஜேந்திரன், எழும்பூர் போக்குவரத்து நிலைய அலுவலர் வடிவேல், கீழ்ப்பாக்கம் நிலைய அலுவலர் அலுவலர் சண்முகம், திருவல்லிக்கேணி நிலைய சிறப்பு அலுவலர் முருகேசன் உள்ளிட்டதீயணைப்பு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
ai in future agriculture