விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஆர்வத்துடன் பொருட்கள் வாங்கும் பொதுமக்கள்

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஆர்வத்துடன் பொருட்கள் வாங்கும் பொதுமக்கள்
X

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு பூஜை பொருட்களை வாங்கி சென்றனர்

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு பூஜை பொருட்களை வாங்கி சென்றனர்

இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா நாளை 18/09/2023 கோலகாலமாக கொண்டாடப்படுவதால், திருவள்ளூர் மார்க்கெட் பகுதியில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாடுவதற்காக அருகம்புல், ஏருக்கம் மாலை,மா தோரணம், தென்னங்கீற்று தோரணம், விநாயகர் குடைகள் மற்றும் கலர் வர்ணங்கள் தீட்டப்பட்ட விநாயகர் சிலைகள் மற்றும் விநாயகர் சிலைகளை அலங்கரிக்கும் பொருட்களை பொதுமக்கள் உற்சாகத்துடன் வாங்கி சென்றனர்.

மேலும் விநாயகர் சிலைகளை பொது இடங்களிலும், வீடுகளிலும் பொதுமக்கள் வைத்து வழிபாடு நடத்துவார்கள் இதற்காக அதிக அளவில் பூக்களை வாங்கி விநாயகருக்கு சிலைக்கு மாலையாக அணிவிப்பார்கள்

தற்போது திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மார்க்கெட் பகுதியில் பூக்களின் வரத்து சற்று குறைவாகவே காணப்படுகிறது. இதனால் சாமந்திப்பூ, மல்லிகை பூ போன்ற பூக்களின் விலை ஒரு முழம் 50 ரூபாயில் இருந்து 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது பொதுமக்கள் அதிகம் அளவில் பூக்களை வாங்கி செல்வதால், அவர்களது தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்தும் வியாபாரிகள் அதிக அளவில் பூக்களை விற்பனைக்காக வாங்கி வந்தனர்.

இதனால்,வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இதே போல் மாவட்டத்தில் ஊத்துக் கோட்டை, திருத்தணி, பள்ளிப்பட்டு, கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம், தாமரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகருக்கு தேவையற்ற பூஜை பொருட்கள் பூக்கள் உள்ளிட்டவை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.


Tags

Next Story
ai solutions for small business