தார் பிளாண்ட் அமைக்க எதிர்ப்பு
மெய்யூர் பகுதியில் தார் பிளாண்டு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மெய்யூர் பகுதியில் தார் பிளாண்டு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம்,பூண்டி ஒன்றியம்,மெய்யூர் ஊராட்சிக்கு உட்பட்டது ராஜபாளையம் கிராமம் ஆகும்.இக்கிராமத்தில் தனிநபர் ஒருவர் 1.87 ஏக்கர் விவசாய நிலத்தை விலைக்கு வாங்கினார்.
அந்த நிலத்தில், தார் பிளாண்ட் அமைக்கும் பணியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கினார்.இதற்கு ராஜபாளையம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பிஜான்வர்கிஸிடம் புகார் மனு அளித்தனர்.எனவே,மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் இப்பணி அப்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில்,இம்மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக டாக்டர் பிரபுசங்கர் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், மீண்டும் தார் பிளான்ட் அமைக்கும் கட்டுமான பணியை தனிநபர் நேற்று முன் தினம் மீண்டும் தொடங்கினார்.
இது குறித்து தகவல் அறிந்த இப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை தார் பிளான்ட் அமைக்கும் பணி நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தார் பிளாண்ட் அமைக்கப்பட்டால் இப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்படும்.நிலத்தடி நீர்மட்டம் மாசுபடும். சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாக வேண்டிய அவல நிலை ஏற்படும் என்று கூறினர்.
தகவல் அறிந்த பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் மற்றும் வேலகாபுரம் பிர்காவை சேர்ந்த வருவாய் ஆய்வாளர் தனபால் உள்ளிட்ட வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.தார் பிளாண்ட் அமைக்கும் பணியை தற்காலிகமாக தடுத்து நிறுத்தினர்.
இது குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர். இப்பிரச்னை யால் சுமார் இரண்டுமணி நேரம் இப்பகுதியில் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu