விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியேற்று விழா :தொல் திருமாவளவன் பங்கேற்பு..!

விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியேற்று விழா :தொல் திருமாவளவன் பங்கேற்பு..!
X

செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.

செங்குன்றம் அடுத்த அலமாதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக் கொடியேற்று நிகழ்ச்சியில் கட்சிக்கொடியை,கட்சியின் தலைவர் திருமாவளவன் ஏற்றினார்.

வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றதோ பாஜக அரசு அதே போல இந்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம் எனவும்,

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம். அலமாதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியேற்றும் நிகழ்வில் பங்கேற்ற விசிக கட்சி தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழக அரசு மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பரவலாக அனைத்து ஜனநாயக சக்திகளும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் இதனால் எளிய மக்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள் எனவே விடுதலை சிறுத்தை கட்சி சார்பிலும் மின் கட்டண உயர்வை மறு பரிசினை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம் எனவும்,

குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்ற ஜூலை 29ஆம் தேதி தமிழ்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான வழக்குரைஞர்கள் புதுடில்லியில் ஜந்தர் மந்தரில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தை கட்சியின் சார்பில் ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்கிறார்கள்.


இந்திய ஒன்றிய அரசு கொண்டு வந்த குற்றவியல் சட்டங்களை இன்னொரு பொடா சட்டம் என்ற வகையிலே மாற்றி அமைத்து வைத்தது அதிர்ச்சி அளிக்கிறது; ஆகவே அதனை திரும்ப பெற வேண்டும்; எப்படி வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றதோ பாஜக அரசு அதே போல இந்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம் எனவும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு பின்னணியில் யார் இருந்தாலும் ஒருவரையும் விடாமல் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்பதுதான் விடுதலை சிறுத்தைகளின் கோரிக்கை, அதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் விரைவில் அனைத்து உண்மை குற்றவாளிகள், திரை மறைவில் திட்டமிட்டவர்கள், ஏவியவர்கள் ஆகிய அனைத்து உண்மை குற்றவாளும் கைது செய்யப்படுவார்கள் என நம்புகிறோம் எனவும்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர் நேர்மையான முறையில் இந்த புலன் விசாரணை நடப்பதாக நம்புகிறோம் இந்த பின்னணியில் யார் இருந்தாலும் ஒருவரையும் விடாமல் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்பதுதான் விடுதலை சிறுத்தைகளின் கோரிக்கை, அதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் விரைவில் அனைத்து உண்மை குற்றவாளிகள், திரை மறைவில் திட்டமிட்டவர்கள், ஏவியவர்கள் ஆகிய அனைத்து உண்மை குற்றவாளும் கைது செய்யப்படுவார்கள் என நம்புகிறோம் எனவும்,

உத்திர பிரதேசம் கன்வார் யாத்திரையில் உணவகங்களுக்கு உரிமையாளர் வைக்க வேண்டும் என்பது விவரம் விவரம் தெரியவில்லை தெரிந்து கொண்டு பேசுவோம் எனவும்,

மைக்ரோசாப்ட் மென்பொருள் பிரச்சனையால் வங்க தேசத்தில் தவித்து வரும் தமிழக மாணவர்களை இந்திய ஒன்றிய அரசு விரைவில் மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; போர்க்கால நடவடிக்கை போல இந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்; தேவைப்பட்டால் தொடர்புடைய இந்திய ஒன்றிய அரசு அமைச்சரை சந்தித்து விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் முறையிடுவோம் எனவும் தெரிவித்தார்.

Tags

Next Story
குளிர் காலத்துல கார்களில் ஏற்படும்  மைலேஜ் பிரச்சனை பற்றிய வழிமுறைகள்