இறப்பு சான்றிதழ் வழங்க 5000 ரூபாய் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

இறப்பு சான்றிதழ் வழங்க 5000 ரூபாய் லஞ்சம் வாங்கிய விஏஓ  கைது
X

கிராம நிர்வாக அலுவலர் ஜாஹீர் உசேன்

செங்குன்றத்தில் இறப்பு சான்றிதழ் வழங்க 5000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர்

செங்குன்றத்தில் இறப்பு சான்றிதழ் வழங்க 5000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த, பாடியநல்லூர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் ஜாஹிர் உசேன்.இவர் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த உமாமகேஸ்வரி(45) என்பவரின் கணவர் முனுசாமி சோழவரம் அருகே பாடியநல்லூரில் இறந்து விட்டதால், அவரது இறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த விண்ணப்பித்திருந்தார் இந்த இறப்பு சான்றிதழை பெறுவதற்கு, 5000 ரூபாய் கொடுத்தால் மட்டுமே இறப்பு சான்றிதழ் வழங்க முடியும் என ஜாஹீர் உசேன் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையிடம் உமா மகேஸ்வரி இது குறித்து புகார் அளித்தார்.இதனைதொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி.கலைச்செல்வம் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர், ரசாயனம் தடவிய ரூ.5000 பணத்தை கிராம நிர்வாக அலுவலர் ஜாஹீர் உசேனின் புரோக்கர் மணிகண்டன் என்பவரிடம் கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் களவுமாக கிராம நிர்வாக அலுவலர் ஜாஹீர் உசேனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.




Tags

Next Story
நைட் 7 மணிக்கு மேல டீ குடிக்க கூடாதாமா?..அப்படி குடிச்சா இந்த பிரச்சனை எல்லாம் வரும்!..டீ பிரியர்களே உஷார்..!