/* */

திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களுக்கு தடுப்பூசி : கலெக்டர் துவக்கி வைத்தார்

திரையரங்கத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களுக்கு தடுப்பூசி : கலெக்டர் துவக்கி வைத்தார்
X
திருவள்ளூர் மாவட்டத்தில் திரையரங்கு முன் தடுப்பூசி செலுத்தும் முகாமை கலெக்டர் தொடரங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா பேருந்து நிலையம் அருகில் சன்னதி தெரு பகுதியில் சினிமா திரையரங்கம் இயங்கி வருகிறது. இதில் திரையரங்கு முன்பு கொரோனா தடுப்பூசி முகாமை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்,ட

மேலும் சினிமா திரையரங்கில் சினிமா பார்க்க வரும் அனைவரிடத்திலும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதற்கான குறுஞ்செய்தி இருந்தால் மட்டுமே சினிமா பார்ப்பதற்கு அனுமதி என்று மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இதற்கான பணிகளை திருத்தணியில் திரையரங்கு முன்பு தொடங்கி வைத்தார்.

கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் வந்து சினிமா பார்க்க வந்த பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்துகொண்டு தடுப்பூசிகளும் செலுத்தி கொண்டனர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் கட்ட தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் என்பது 81/- சதவீதம் பேர் என்று தெரிவித்துள்ளார், மேலும் இன்று சனிக்கிழமை, டிசம்பர்-11 சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் 14வது கட்ட தடுப்பூசி முகாம் மாவட்டத்தில் நடைபெறுகிறது, இந்த முகாமிலும் திருவள்ளூர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத பொதுமக்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்,

மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் மிகப் பெரிய துணிக்கடைகள், சூப்பர் மார்க்கெட், போன்ற பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான முகாம்கள் ஏற்படுத்தப்படும்.

மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் தேவைப்பட்டால் டாஸ்மார்க் கடைகள், கோயில்கள், ஆகியவற்றில் முன்பு தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே அனுமதி என்ற வரையறை ஏற்படுத்தப்படும் இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.

Updated On: 11 Dec 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?