பெரியபாளையம் போக்குவரத்து நெரிசல்: புறவழிச்சாலை அமைக்கப்படுமா?
போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் பெரியபாளையம்
பெரியபாளையத்திற்கு சாமி கும்பிட பக்தர்கள் வந்த வாகனங்களால் 4.மணி நேரத்திற்கு மேலாகவே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போக்குவரத்தை நெரிசலை சரி செய்ய முடியாமல் காவல்துறையினர் திணறினர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் புகழ்பெற்ற பவானி அம்மன் திருக்கோவில் ஆரணி ஆற்றங்கரை அருகே உள்ளது. இக் கோவிலில் ஆடி மாதம் 14 வாரங்கள் ஆடி திருவிழா வெக விமரிசையாக நடைபெறும். இக்கோவிலுக்கு தமிழகத்திலிருந்து திருவள்ளூர் காஞ்சிபுரம் வேலூர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை திருநெல்வேலி மதுரை விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் மட்டும் அல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் வருவார்கள்.
லட்சக்கணக்கான பக்தர்கள் பெரியபாளையத்திற்கு வந்து வாடகைக்கு விடுதிகளில் தங்கி இருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மொட்டை அடித்து உடல் முழுவதும் வேப்பஞ்சலை ஆடைகளை அணிந்து கோவிலை சுற்றி வலம் வந்து ஆடு, கோழி,என பலியிட்டு தாங்கள் நேர்த்தி கடனை செலுத்தி அம்மனை தரிசனம் செய்து விட்டுசெல்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் சுப முகூர்த்தம் நாளில் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல், காது குத்தல், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மேலும் ஆடி மாதம் மட்டுமல்லாமல் சாதாரண நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் வருகின்றது.
பவானி அம்மனை தரிசிக்க. பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கார், ஜீப், வேன், பேருந்து என பல்வேறு வாகனங்களில் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு படையெடுத்தனர். பக்தர்கள் வந்த வாகனங்கள் மற்றும் சென்னையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் சிறியது முதல் கனரக வாகனங்கள் அதிக அளவில் வந்ததால் பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாகன போக்குவரத்தை சரி செய்ய போதிய அளவில் காவல்துறையினர் இல்லாததாலும். அதேபோல் கோவிலுக்கு வரும் வாகனங்கள் கோவிலுக்கு பின்புறம் உள்ள இடங்களில் நிற்பதற்கு வாகன வரி வசூல் செய்யும் நபர்கள் வாகன வரி வசூலிப்பதற்கு வாகனங்களை சாலைகளில் நிறுத்தி டோக்கன் வழங்கியதாலும் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் சென்னை -திருப்பதி சாலையில் பெரியபாளையம் முதல் 82 பனப்பாக்கம் வரையிலான சுமார் 3 கிலோமீட்டர் நீண்ட தூரத்திற்கு 2.மணி நேரத்திற்கு மேலாகவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை சரி செய்வது காவல்துறையினருக்கு போலீசாருக்கு கடும் சவாலாக இருந்தது. மேலும் பெரியபாளையம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த வயதானவர்கள், குழந்தைகள் போக்குவரத்து நெரிசலால் சிக்கி பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
இது குறித்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் தெரிவிக்கையில் பெரியபாளையம் பவானி அம்மனை தரிசனம் செய்ய வந்தோம். ஆனால் இந்த போக்குவரத்து நெரிசல் காரணத்தினால் சாமியை தரிசனம் செய்ய முடியாமல் சிலர் திரும்பி விட்டனர். ஆடி மாத காலம் கூட பெரியபாளையம் பவானி அம்மனை தரிசனம் செய்ய வர வேண்டுமென்றால் பெரும் சவால்களை எதிர்கொண்டு தான் சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. தற்போதும் அதே நிலைமை நீடித்து வருகிறது.
எனவே ஊருக்குள் கனரக வாகனங்களை அனுமதிக்காமல் வேறு வழியில் திருப்பி விட வேண்டும். அதேபோல் வாகன வரி வசூல் செய்பவர்கள் குறிப்பிட்ட அதற்கான ஒதுக்கப்பட்ட இடத்தில் வாகனம் நிறுத்திய பின்னர்தான் டோக்கன் வழங்க வேண்டும். சாலையில் நின்று வாகனங்களை வழிமறித்து டோக்கன் வழங்குவதால் இதுபோன்று போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே விழா காலங்களில் இது போன்ற நிலைமைகளை பக்தர்கள் எதிர்கொண்டு சிரமத்திற்கு ஆளாவதை தவிர்க்க சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புற வழி சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தும், தற்போது அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் ஊருக்குள் அனைத்து கனரக வாகனங்களாலும் சென்னை திருப்பதி சாலையில் விடுவதால் இதுபோன்று கடுமையான மணி கணக்கில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே பெரியபாளையம் ஊருக்குள் செல்லும் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களை கண்டறிந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவு படுத்திட வேண்டும். கிடப்பில் போடப்பட்டுள்ள புறவழி சாலை பணிகளை மீண்டும் தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கோரிக்கை ஏற்று புறவழி சாலை அமைக்கப்படுமா?
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu