/* */

பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் ஆடி திருவிழா

8.வார ஆடி திருவிழாவை முன்னிட்டு பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் திரண்ட பக்தர்கள் கூட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகனங்கள்.

HIGHLIGHTS

பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் ஆடி திருவிழா
X

பெரியபாளையத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் 

8.வது வார ஆடி திருவிழாவை முன்னிட்டு பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் திரண்ட பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சிறிய மேம்பாலம் பணிகள் நடைபெறுவதால் பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் ஆரணி ஆற்றங்கரை அருகே அமைந்துள்ளது புகழ்பெற்ற சுயம்புவாக எழுந்தருளிய புகழ்பெற்ற பவானி அம்மன் திருக்கோவில். இக்கோவிலில் ஆடி திருவிழா 14 வார காலம் வெகு விமர்சையாக கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

திருவிழாவை முன்னிட்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட தமிழக மட்டுமல்லாது ஆந்திரா கர்நாடகா புதுச்சேரி தெலுங்கானா மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து பக்தர்கள் சனிக்கிழமை பெரியபாளையம் பேருந்துகள் மற்றும் சொந்த வாகனங்களில் கோவிலுக்கு வருவார்கள்.

அவ்வாறு வரும் பக்தர்கள் வாடகைக்கு விடுதிகள் மற்றும் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தனியார் கொட்டகைகளை வாடகைக்கு எடுத்து பெரியவர்கள், குழந்தைகள் என அனைவரும் முடி காணிக்கை செலுத்தி, ஆலய வளாகத்தில் உள்ள பொங்கல் மண்டபத்தில் வடை பொங்கல் இடுவர்.

மேலும் அங்குள்ள வேப்பமர அடியில் படையல் இட்டு ஆடு, கோழி என பலியிட்டு. வேண்டுதலை நிறைவேற்றி வேப்ப இலை ஆடைகளை அணிந்து கையில் தேங்காய் ஏந்தி கோவில் சுற்றி வலம் வந்து சிறப்பு தரிசனம் மற்றும் தர்ம தரிசனத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்.

இந்த கோவில் அமைந்துள்ளது சென்னை-திருப்பதி சாலை என்பதால் இவ்வழியாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றது. இது மட்டுமல்லாது தற்போது ஆடி 8வது வார திருவிழா இன்று நடைபெற்று வருவதால் பக்தர்கள் வந்த வாகனங்களாலும் சிறிய மேம்பாலம் பணிகள் நடைபெற்று வருவதாலும், இன்று பெரியபாளையத்தில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் அளவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை சரி செய்ய காவல்துறையினர் மிகவும் அவதிப்பட்டனர்.

இதுகுறித்து பக்தர்கள் தெரிவிக்கையில் ஆண்டுதோறும் ஆடி மாத காலத்தில் இக்கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பெரியபாளையம் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்கின்றோம், இவ் வழியாக கனரக வாகனங்களும் வந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு விடுகிறது. இதனால் சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றுத்துடன் சிலர் திரும்பி செல்கின்றனர்.

கடந்த காலத்தில் இதற்கு மாறாக வடமதுரை கூட்டுச் சாலை பகுதியில் புறவழிச் சாலை பணிகளை அரசு அறிவித்து, அந்தத் திட்டத்தை கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே பக்தர்களும் பொதுமக்களும் பெரியபாளையம் வந்து செல்ல ஏதுவாக புறவழிச் சாலையை அமைத்து கனரக வாகனங்களை திருப்பி விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 10 Sep 2023 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எங்கள் வீட்டு பேபியே..எங்கள் செல்லமே பிறந்தநாள் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    எங்கள் வீட்டு சின்னக் கண்மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. தேனி
    மீண்டும் 2011ஐ உருவாக்கி விடாதீர்கள் : கேரளாவிற்கு விவசாயிகள்...
  4. அரசியல்
    எதிர்க்கட்சியை என் எதிரியாக கருத வேண்டாம் : பிரதமர் மோடி
  5. ஸ்ரீரங்கம்
    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் நிறைவு
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    சவுக்கு சங்கர் மீது திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்
  7. நாமக்கல்
    விவசாயி மீது பொய் வழக்கு பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு இரண்டரை...
  8. தமிழ்நாடு
    பத்திரப்புதிவு துறையில் நிலம் வழிகாட்டி மதிப்பு சீரமைக்கும் பணி...
  9. ஈரோடு
    ஈரோட்டில் வாக்கு எண்ணும் பணிகள் குறித்த முதற்கட்ட பயிற்சி
  10. சினிமா
    தக் லைஃப் படத்துக்காக... திரிஷாவின் புகைப்படங்கள் வைரல்..!