திருவள்ளூர்: 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம்!
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வமுடன் வரிசையில் நிற்கும் 18 வயதுக்கு மேற்பட்டோர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பை தடுக்க தடுப்பூசி கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 3லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திய நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் கடந்த 5 நாட்களாக பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தாதவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்நிலையில் நேற்று 1750 தடுப்பூசிகள் வரப்பெற்று அனைத்து தடுப்பூசிகளும் ஒரு குறிப்பிட்ட மையங்களில் மட்டும் செலுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு 10,100 தடுப்பூசிகள் வந்ததால் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு மையங்களில் 18 வயது முதல் அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்று அறிவித்ததால் இன்று திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனை அருகில் உள்ள ஸ்ரீ நிகேதன் தனியார் பள்ளியில் இன்று காலை முதலே 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு சென்றனர்.
அதேபோல் மாவட்டத்தில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட மையங்களிலும் இந்த தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோ - வேக்சின் மற்றும் கோவிட் சில்டு என இரண்டு வகையான தடுப்பூசிகளும் செலுத்துவதால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி செல்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu